“தேவதைகளின் தோற்றம்
விண்ணிலிருந்து – அல்ல
மண்ணிலிருந்தே….
சேவையின் சிறகோடு கடமையின்
தேவதைகள்-
இந்த வெள்ளை தேவதைகள்
“தேவதைகளின் தோற்றம்
விண்ணிலிருந்து – அல்ல
மண்ணிலிருந்தே….
சேவையின் சிறகோடு கடமையின்
தேவதைகள்-
இந்த வெள்ளை தேவதைகள்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் முப்பது
அவர்கள் தோணியில் ஏறியதும் முதல் வேலையாக ராஜா என்னை நோக்கி வந்தார். எனது மேல் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து உலுக்கியவாறே என்னிடம் கேட்டார்:
“எங்களை விட்டு ஓட முயன்றிருக்கிறாய், இல்லையா, பையா? எங்களின் நட்பு உனக்கு சலிப்புத் தட்டிவிட்டதா? ஹாஹ்?”
நான் கூறினேன் “அப்படி இல்லை அரசே! நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தயை கூர்ந்து அப்படி நினைக்காதீர்கள், மாட்சிமை பொருந்திய மன்னரே!”
“நல்லது. அப்படியானால், நீ என்ன செய்ய முயற்சித்தாய் என்று கூறி விடு. இல்லாவிட்டால், உன் உடலில் உள்ளிருக்கும் அனைத்தையும் வெளியே உருவி விடுவேன்.”
“சத்தியமாக என்னவெல்லாம் நடந்ததோ அதை அப்படியே கூறிவிடுகிறேன், மேன்மை பொருந்திய ராஜாவே! என் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த மனிதன் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தான். கடந்த வருடம் என் வயதில் ஒரு சிறுவன் இறந்து போனது பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதே போன்றதொரு பயங்கரமான ஆபத்தில் இன்னொரு சிறுவன் இப்போது இருப்பதைப் பார்க்க அவனுக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினான். தங்க மூட்டையைக் கண்டதும் அனைவரின் கவனமும் சிதறி சவப்பெட்டியை நோக்கி ஓடிய சமயம், அவன் என் கையை விடுத்து, “ஓடிச் செல். இல்லாவிடில், அவர்கள் உன்னைத் தூக்கில் போடுவது நிச்சயம்.” என்று என் காதில் கிசுகிசுத்தான். எனவேதான் நான் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.”
“அங்கேயே நிற்பது எனக்கு நல்லதல்ல என்று தோன்றியது. என்னால் எதுவும் செய்ய முடியாது. தப்பிக்காமல் அங்கேயே இருந்து தூக்கில் தொங்குவதை நான் விரும்பவில்லை. கண் மண் தெரியாது ஓடி இங்கே வந்து தோணியைக் காணும் வரை நான் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இங்கே வந்து சேர்ந்ததும் ஜிம்மை அவசரமாகத் தோணியை செலுத்தச்சொன்னேன். இல்லாவிடில், நான் பிடிபட்டு தூக்கில் தொங்க நேரிடும் என்ற பயத்தால்தான். நீங்களும், பிரபுவும் இறந்திருப்பீர்கள் என்று நான் அஞ்சினேன் என்றும் கூறினேன். உங்களின் பரிதாப நிலைக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். ஜிம்மும் அப்படியே வருந்தினான். இப்போது நீங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் நாங்கள் இருவரும் கட்டுக் கடங்காத மகிழ்ச்சியை அடைந்தோம். இது உண்மையா என்பதை ஜிம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் இருபத்தி ஒன்பது
நேர்த்தியான தோற்றம் உடைய ஒரு முதிய கனவானையும், கூடவே காயம்பட்ட வலது கையை தாங்கி நிறுத்தும் ஒரு தூக்கி மாட்டியுள்ள இன்னொரு இளம் வாலிபனையும் அந்தக் கூட்டம் கூட்டி வந்தது. ஓ! என்ன ஒரு காட்சி அது! கூட்டம் கொக்கரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துத் தீர்த்தது. அங்கே வேடிக்கையாய் சிரிக்க என்ன உள்ளதென்று எனக்குப் புரியவில்லை. ராஜாவும், பிரபுவும் என்னைப் போன்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருக்கும் என்று நினைத்து அவர்களை நோக்கினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் பயத்தில் வெளுத்துப் போகவில்லை. சந்தேகிக்கும் நிலையை பிரபு அங்கே உண்டு பண்ணவேயில்லை. பதிலாக வாயில் வெள்ளை நுரை தள்ளியவாறு கூ கூ என்று இன்னும் அதிகமாக சத்தமிட்டார்.
புதிதாக வந்த மனிதர்களை ஏதோ நயவஞ்சகர்கள் இந்த உலகத்தில் மோசடி செய்ய வந்தது தனது இதயத்தை வேதனைப் படுத்துவது போல ராஜாவோ மிகவும் சோகமாக அவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். ஓ! ரசிக்கும்படியான நடிக்கும் தொழிலை அவர் அங்கே செய்தார், தெரிந்து கொள்ளுங்கள்! ஊரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் ராஜாவின் பக்கம் என்பதைக் காட்டிக் கொள்வது போல அவர் பக்கம் கூடி நின்றார்கள்.
புதிதாக வந்த முதிய கனவானோ குழப்ப மிகுதியால் மண்டை உடைந்துவிடும் நிலையில் இருந்தார். இறுதியாக அவர் பேசத் தொடங்கியதும், அவரின் பேச்சில் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை என்னால் உணர முடிந்தது. ராஜாவும் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை அப்படியே பின்பற்றி நடித்து வந்தாலும், இந்த புதிய மனிதனின் உச்சரிப்பு ராஜா பேசுவது போன்று இல்லை. அந்த முதிய கனவான் என்ன வார்த்தைகள் சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. அவர் போன்று நான் பேசிக் காட்டவும் முடியாது. ஆனால் அவர் கூட்டத்தை நோக்கி பின்வருமாறு கூறினார்:
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் இருபத்தி எட்டு
வெகு சீக்கிரமே நான் விழித்தெழும் காலைவேளை வந்து விட்டது. ஏணியில் இறங்கி கீழ்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் போது அந்த பெண்களின் அறைக் கதவு திறந்திருப்பதை எதேச்சையாக நான் காண நேர்ந்தது. அறையினுள் திறந்திருந்த பழைய ட்ரங்க் பெட்டியருகே மேரிஜேன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அந்தப் பெட்டியில் தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு, தன் மடியில் ஒரு நீண்ட மேலங்கியை மடித்து வைத்துக் கொண்டு, தனது இரு கரங்களையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அது என் மனதைக் கரைத்தது. யாருக்குமே அதைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்யும். எனவே, உள்ளே நான் சென்றேன்.
“மிஸ். மேரிஜேன்! சக மனிதர்களின் துன்பத்தை நீ பொறுத்துக் கொள்ளக் கூடியவள் அல்ல. நானும் அப்படிதான். என்னிடம் உன் துன்பத்தைப் பற்றிக் கூறு.” அன்புடன் நான் வினவினேன்.
எனவே, அவள் கூற ஆரம்பித்தாள். நான் சந்தேகித்தது போலவே அவள் அந்த நீக்ரோக்களைப் பிரிந்த வேதனையிலேயே அழுது கொண்டிருந்திருக்கிறாள். அவள் செல்லவிருக்கும் இனிமையான இங்கிலாந்து பயணத்தையே இந்த வேதனை குலைத்து விடும் என்று அழுது கொண்டே கூறினாள். அந்த நீக்ரோ குழந்தைகளும் அவர்களின் அம்மாவும் இனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே முடியாது என்று தெரிந்த கொண்டபின் அவளால் எப்படி அவளது வாழ்வில் சந்தோசத்துடன் இருக்க முடியும் என்று கேட்டாள். பின்னர் முன்பை விட அதிக தீவிரத்துடன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
“ஓ! அன்புக்குரியவனே! அவர்கள் ஒருபோதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள் என்பதை எண்ணும்போது.” கைகளை வேகமாக அசைத்துக்கொண்டே கூறினாள்.
“ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்- அதுவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குளாகவே. எனக்குத் தெரியும்.” நான் கூறினேன்.
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் இருபத்தி ஏழு
அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.
அந்த சமயத்தில் யாரோ என் பின்புறமுள்ள படிக்கட்டுகளில் இறங்கிவரும் சத்தம் கேட்டது. அங்குமிங்குமாக ஓடி நான் ஒளிந்து கொள்ள இடம் தேடியபோது முன்னறையில் சவப்பெட்டி அருகே மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்மூடி ஒருக்களித்துத் திறந்தவாறு இருந்ததால், ஈரத்துணியால் மூடி வைத்திருக்கும் இறந்த மனிதனின் முகத்தையும், அவன் மேல் மூடப்பட்டிருந்த சவச்சீலையையும் என்னால் நன்கு காண முடிந்தது. காசு மூட்டையை சவத்தின் கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ள பகுதியின் மேல் மூடியினுள் செருகி வைத்தேன். அந்தக் கரங்கள் மிகவும் குளிர்ந்தாக இருந்து என்னையும் உறைய வைத்தது. பின்னர் அறையின் குறுக்காக ஓடிச்சென்று கதவின் பின் மறைந்து கொண்டேன்.
படிக்கட்டுகளில் மேரிஜேன் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சவப்பெட்டி அருகே மெதுவாகச் சென்று, மண்டியிட்டு, உள்ளே பார்த்தாள். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர்
சிந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளின் பின்புறமாக நான் நின்றிருந்ததால், அவளின் அழுகைச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. எனது மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். உணவருந்தும் அறையைத் தாண்டிச் செல்கையில் சவப்பெட்டி அருகே இருந்த இரண்டு ஆண்களும் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அந்தச் சந்து வழியாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று நோக்கினேன். யாரும் அசையக் கூட இல்லை.

அத்தியாயம் இருபத்தி ஆறு
கூட்டம் கலைந்து போனதும், அந்த வீட்டில் படுக்கை அறைகள் மிகைப்படியாக உள்ளதா என்று ராஜா மேரி ஜேனை வினவினார். அதிகப்படியாக உள்ள ஒரு அறையில் சித்தப்பா வில்லியம் உறங்கலாம் எனக் கூறினாள். அவளது பெரிய படுக்கை அறையை ஹார்வி சித்தப்பாவுக்குக் கொடுத்து விட்டு அவளும், அவளது சகோதரிகளும் சிறிய அறையில் உள்ள கட்டிலில் படுத்துக் கொள்ளப் போவதாக மேரி ஜேன் கூறினாள். பரணில் உள்ள சிறு மூலையில் ஒரு வைக்கோல் படுக்கையில் ராஜாவின் வேலைக்காரனான நான் படுத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று ராஜா கூறினார்.
எனவே ராஜாவையும், பிரபுவையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று எளியதாகவும் ஆனாலும் நன்றாகவும் இருந்த அவர்கள் அறைகளைக் காட்டினாள் மேரி ஜேன். சித்தப்பா ஹார்வியின் வழியில் இருந்த தன்னுடைய நீண்ட அங்கி போன்ற ஆடைகளையும் மற்ற அலங்காரப் பொருட்களையும் அங்கிருந்து வெளியே எடுத்துச் சென்றுவிடுவதாக மேரி ஜேன் கூறியபோது வேண்டியதில்லை என்று ஹார்வி கூறிவிட்டார். நீண்டு தரையைத்தொடும் காலிகோ வகைத் துணியாலான திரைச்சீலையின் பின்புறம் உள்ள சுவற்றில் அவளின் நீண்ட அங்கிகள் மாட்டிவைக்கப் பட்டிருந்தன. ஒரு பழைய ட்ரங்க் பெட்டி ஒரு மூலையிலும், கிடார் இசைக் கருவி இன்னொரு மூலையிலுமாக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் உபயோகப் படுத்தும் அலங்காரப் பொருட்கள், மேலும் அது போன்ற சில பொருட்கள் அறை முழுதும் இறைந்து கிடந்தன. இவ்வாறு அறை இருப்பது அவருக்கு சொந்த வீட்டிலுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதால் அங்கிருக்கும் பொருட்களை வேறு எங்கும் எடுத்துப் போகவேண்டாம் என்று ராஜா (ஹார்வி) கேட்டுக் கொண்டார். பிரபுவின் அறை கொஞ்சம் சிறியதுதான் என்றாலும் மிகவும் வசதியாகவே இருந்தது. அது போன்றே பரணிலிருந்த என்னுடைய சிறு மூலை அறையும்தான்.
சத்யஜித் ராயின் கடைச்சிப்படம் இந்தப்படம். இந்திய – பிரெஞ்சுக் கூட்டுத்தயாரிப்பு. இது சத்யஜித் ராயின் ‘அதிதி’ சிறுகதையொன்றின் திரை வடிவம். இத்திரைப்படத்தின் இயக்கம், இசை, திரைக்கதை எல்லாவற்றையுமே மிகவும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சத்யஜித் ராய். இத்திரைப்படத்துக்கு இந்திய மத்திய அரசின் விருதுகளுடன் , சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளும் கிடைத்துள்ளன. வங்காள நடிகர் உத்பால் தத் (Utpal Dutt) மிகச்சிறந்த நடிகர்களிலொருவர்.
இத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு முன் இளம் வயதில் வீடு துறந்து, மேற்கு நாடுகள் பலவும் அலைந்து திரிந்து, மானுடவியலில் பட்டம் பெற்று அத்துறையில் ஊடகங்களுக்கு எழுதி வருபவராக விளங்கும் மனோமோகன் மித்ராவாக அவர் நடித்திருக்கிறார். பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் தன் மருமகள் வீட்டுக்கு விருந்தினராக, அந்நியராக வருகை தருகின்றார். அவரை அவர் உறவினர்கள் எவ்விதம் வரவேற்கின்றார்கள், உபசரிக்கின்றார்கள் , முடிவில் அவர் என்ன செய்கின்றார் என்பதை விளக்குவதுதான் திரைக்கதையின் பிரதான நோக்கம். அவரது நடிப்பும், அப்பாத்திரச்சிறப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இவரது பாத்திரத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முக்கிய எண்ணங்களிலொன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது புகழ்பெற்ற நாவலான ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவலின் நாயகனாகப் படைத்த ஹென்றி என்னும் பாத்திரத்தை இத்திரைப்படத்தில் வரும் மனோமோகன் மித்ரா பாத்திரம் ஏற்படுத்திய தூண்டல் காரணமாகப் படைத்திருப்பாரோ என்ற எண்ணம்தான். இத்திரைப்படத்தின் முடிவும், அவர் எதற்காக வருகின்றார் என்பதற்கான முக்கிய நோக்கமும் அவ்விதமான எண்ணத்தை ஏற்படுத்தியது. நீங்களும் பார்த்துப்ப்பாருங்கள். முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஈழத்து எழுத்தாளர் தமிழ்ப்பிரியா இம்மாதம் 07 ஆம் திகதி பிரான்ஸிலிருந்து விடைபெற்றுவிட்டார். தமிழ்ப்பிரியா, இலக்கியம் மாத்திரம் படைத்துக்கொண்டிருந்தவர் அல்ல. அதற்கு அப்பாலும் மனிதநேயச்செயற்பாடுகளில் தன்னார்வத் தொண்டராகவும் தன்னை ஈடுபடுத்தி வந்திருப்பவர். இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடத்திலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கிய கருணை உள்ளம் கொண்டவர்.
வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், தமிழ்ப்பிரியாவின் எழுத்துக்கள் அச்சில் வரும்போது அவற்றை ஒப்பு நோக்கியிருக்கின்றேன். எம்முடன் பணியாற்றிய மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த திரு. கனகசிங்கம் ( தற்போது – அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவர் ) பொன்னரி என்ற புனைபெயரில் ஓவியங்களும் வரைந்துகொண்டிருந்தார். கொழும்பிலிருந்து வெளியான சுதந்திரன் பத்திரிகையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் மாத இதழின் ஆசிரியராகவும் கனகசிங்கம் இயங்கியபோது, தமிழ்ப்பிரியாவின் படைப்புகள் சுடரில் வெளிவந்து பார்த்திருக்கின்றேன்.
தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் இலங்கை மக்கள் அனைவருக்கும் இலங்கை வானொலிதான் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது. அதில் ஒலிபரப்பான இரண்டு சேவைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. வர்த்தக சேவையும் தேசிய சேவையும் கடல் கடந்து தமிழ்நாட்டு நேயர்களையும் பெரிதும் கவர்ந்தது. அக்காலப்பகுதியில் இசையும் கதையும் என்ற நிகழ்ச்சியை நேயர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் விரும்பிக்கேட்டவர்களும் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தார்கள். அத்துடன் மங்கையர் மஞ்சரி – பூவும் பொட்டும். முதலான நிகழ்ச்சிகள். அந்த நிகழ்ச்சிகள் பல பெண்நேயர்களை பேனா நண்பிகளாகவும் மாற்றியிருப்பதுடன், ஆரோக்கியமான தொடர்பாடல்களையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியது. மின்னஞ்சல் – முகநூல் – வாட்ஸ் அப் இல்லாதிருந்த அக்காலப்பகுதியிலேயே அந்த பெண் நேயர்களுக்கிடையில் அந்த இசையும் கதையும் நெருக்கமான உறவினை உறுதியாக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. எனினும், வளர்ந்த மூத்த எழுத்தாளர்கள், முற்போக்கு – நற்போக்கு – சோஷலிஸ யதார்த்தப்பார்வை முதலான இஸங்களைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் அந்த இசையும் கதையும் நிகழ்ச்சியில் ஆர்வம் காண்பிக்கவில்லை. காரணம், அதற்கு எழுதியவர்கள் ஒரு கதையை அனுப்புவார்கள். நிகழ்ச்சித்தயாரிப்பாளர் கதையின் சம்பவங்களுக்குப் பொருத்தமான ஒரு திரை இசைப்பாடலை அதற்கு எற்றவாறு பொருத்தி ஒலிப்பதிவுசெய்து வானலைகளில் பரவ விடுவார். அதனைக்கேட்கும் அபிமான நேயர்கள் தங்கள் கருத்தை கடிதமாக எழுதி நிலையத்திற்கு அனுப்புவார்கள். அவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பாகும். அதனால், வான் அலைகளில் கதை எழுதியவரின் பெயர் மட்டுமன்றி நேயர்களின் பெயரும் – ஊரும் கூட பரவிவிடும். நேயர் கடிதங்களை எழுதி தபாலில் அனுப்பிவிட்டு, அது எப்போது ஒலிபரப்பாகும் என்று வானொலிப்பெட்டிக்கு அருகிலிருந்து காத்திருப்பார்கள்.
தாயே தமிழே தத்துவமே
தாரணி மெச்சும் சத்தியமே
சேயாய் உதித்த சித்திரமே
செப்புங் காலைச் சூரியரே
நேய உலகின் நித்திலமே
நிலவின் ஒளியே நீள்விசும்பே
ஆய கவியே அற்புதமே
அகிலத் தெழிலே ஆரமுதே !