Minami Sanriku, Japan (CNN) — As people in Japan’s capital tried to return to normalcy on Sunday, their neighbors to…
மார்ச் 8ஆம் தேதியை சர்வதேசப் பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம். சாதாரணப் பெண்களின் சாதனைகளைப் பற்றி பேப்பர்களிலும், பத்திரிகைகளிலும் படித்துத் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக கிராமத்துப் பெண்களின் சாதனைகளைப் பற்றியும், அவர்களுடைய மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவைகளைப் பற்றியும், பெண்களைத் தழுவிய எண்ணங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என்று அன்றைய தினப் பேப்பர்கள் பெண்களைச் சார்ந்த பேப்பர்களாகவே அச்சிடப்படுகின்றன. இதைக் கேட்பதற்கு பெருமிதமாகத் தான் இருக்கிறது. வாழுகின்ற இந்தப் புவியை “பூமித்தாய்” என்று அழைக்கிறோம், நம்முடைய நாட்டை எதிரிகள் படையெடுக்கும்போது நமது படைவீரர்கள் “பாரத் மாதா கி ஜய்” அதாவது “பாரத அன்னைக்கு வெற்றி” என்ற முழக்கத்தோடு போர்க்களத்துக்கு செல்லுகிறார்கள், அதே களத்தில் ஒரு வீரன், உயிர்போகும் தருணத்தில, தாய்மண்ணுக்கு சலாம் போட்டுட்டு உயிரிழக்கிறான். வாழுகின்ற கிரகத்தையும், குடியிருக்கும் நாட்டையும் பெற்ற தாய்க்கு சமமாக கருதுகிறோம், போற்றுகிறோம், பூஜிக்கிறோம்.