இல்லம் கழிவறை போலாவதைத் தடுக்கும் சிறுநீர் அகற்றும் குழாய்

டாக்டர் M.K.முருகானந்தன்ஒரு வீட்டினுள் நுழைகிறீர்கள். கழிவறை போல நாற்றம் விரட்ட முனைகிறது. உங்களையறியாது கை மூக்கைப் பொத்துகிறது. ‘ஐயாவிற்கு (அல்லது அம்மாவிற்கு) பாத்ரூம் போவதற்கிடையில் சிந்திவிடுகிறது. கொன்ரோல் இல்லை’ என்கிறார் வீட்டுக்காரர் மிகுந்த சங்கோசத்துடன். அவமானம் மட்டுமல்ல சுகாதரக் கேடும் கூட. இதற்கான தீர்வு சிறுநீர் அகற்றும் குழாய்தான் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தெளிவாகப் புரிந்து, சரியாகப் பயன்படுத்தி மற்றவர் மதிக்கும் வண்ணம் உயர் தொழிலைத் தொடரும் வெற்றியாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆம்! சிறுநீர் அகற்றும் குழாய் இன்று பல முதியவர்களுக்கு இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. அவர்களின் உற்ற துணையாக வாழ்வின் பங்காளியாகி விட்டது.

Continue Reading →

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 14வது பௌர்ணமி இரவு

நிகழ்வுகள்19-03-2011
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 14வது பௌர்ணமி இரவு.  சனிக்கிழமை, 19-03-2011 இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)
http://thamizhstudio.com/thodarbukku.php இந்த மாதம் திரையிடப்படும் படங்கள். இந்த மாதம் சேகர் தத்தாத்ரே இயக்கிய “புலிகளின் ரகசியங்கள்” ஆவணப்படமும், ஆண்டோ இயக்கிய “புலி யாருக்கு” ஆவணப்படமும், அஜய் இயக்கிய பினாயக் சென் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படும். (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

Continue Reading →

கூட்டுறவுச் சிற்பி சிதம்பரப்பிள்ளை மாஸ்டர்

“தம்மையா சிதம்பரப்பிள்ளை ‘சமதர்மக் கூட்டுறவுச் சிற்பி’” என்ற தொகுப்பு நூல் நேற்று எனது கைக்குக் கிட்டியது. பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் நூலாக இருந்தது. அவருடைய தலைமைத்துவப் பண்பையும், ஆளுமையையும் பக்கங்கள் ஊடே பற்றிக் கொண்டே மெல்லென நகர முடிந்தது. “தம்மையா சிதம்பரப்பிள்ளை ‘சமதர்மக் கூட்டுறவுச் சிற்பி’” என்ற தொகுப்பு நூல் நேற்று எனது கைக்குக் கிட்டியது. பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் நூலாக இருந்தது. அவருடைய தலைமைத்துவப் பண்பையும், ஆளுமையையும் பக்கங்கள் ஊடே பற்றிக் கொண்டே மெல்லென நகர முடிந்தது. அத்துடன் அவரது தன்னலமற்ற சமூகப் பணிகளையும் நினைவு கூர வைத்தது. எமது வரலாற்றின் மிகத் துன்பம் நிறைந்த ஒரு காலகட்டத்திலும் யாழ் மண்ணில் வாழ்ந்தவன் நான். அக்காலத்தில் அவரது நட்பும் ஆதரவுக் கரமும் கிட்டியது எனக்கு கிடைத்த பாக்கியமாகும். எனக்கு மட்டுமல்ல வடமராட்சி மண்ணில் வாழ்ந்த பலரும் அவரால் மகிழ முடிந்திருக்கிறது. எமது வாழ்வும் பணியும் எங்களுக்காக என்றிருக்கக் கூடாது. மக்களுக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக, அவர்கள் துயர் துடைப்பதற்காக நாம் பணியாற்ற வேண்டும் என்பதை தனது வாழ்வின் கூடாகச் செய்து காட்டியவர் அவர். அவரது வாழ்வின் பல அத்தியாயங்களை நூலின் பக்கங்களுடே தரிசிக்க முடிந்தது.

Continue Reading →