நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)

Welfare Fountation Of The Blindபார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND – WFB) என்ற அமைப்பு தனது முக்கியப் பொறுப்புகளில் பார்வையற்றவர்களைக் கொண்டிருப்பது. உரிய ஆதரவும், வாய்ப்புகளும் சமூகத்திலிருந்து கிடைத்தால் பார்வையற்றவர்களால் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும்; சமூக நலனுக்குச் சீரிய முறையில் பங்காற்ற முடியும் என்ற உண்மை குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் முனைப்போடு இயங்கிவரும் இவ்வமைப்பு இந்தக் குறிக்கோளோடு விழிப்புணர்வுக் கண்காட்சிகள் நடத்தியும், பார்வையற்றோர் உரிமைகள், திறமைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தியும், வருடாவருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, +2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணாக்கர் களுக்கும், பார்வையற்ற ஆசிரியர் பயிற்சியில் முதல் மதிப்பெண் எடுப்பவர், தேசியப் பார்வையற்றோர் நிறுவனம் – பிராந்தியக் கிளை(NATIONAL INSTITUTE FOR THE VISUALLY HANDICAPPED REGIONAL CENTER)சார்பாய் நடத்தப்படும் பயிற்சிவகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் ஊக்கமளிப்பதாய் பரிசுத்தொகை அளித்தும், பல்துறைகளில் சிறந்து விளங்கும் பார்வையற்றத் திறமைசாலிகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் சாதனையாளர் விருது வழங்கியும் பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி வருகிறது. தவிர, பார்வையற்றவர்களுக்கான நன்னலப் பணியில் ஈடுபடுபவர்களையும், பார்வையற்றவர்களின் பிரச்னைகளிலும், பணிகளிலும் பங்கெடுத்து சகமனித நேயத்துடன் இயங்கிவரும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பார்வையற்றவர்களின் நண்பன்(FRIENDS-OF-THE-BLIND) விருது வழங்கியும், பார்வையற்றோர் குறித்த, மற்றும் பார்வையற்றோரால் படைக்கப்பட்ட எழுத்தாக்கங்களை நூலாக வெளியிட்டும் வருகிறது. அப்படி கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:

Continue Reading →

‘மகாகவி’ மார்ச் 2011 இதழ் படியுங்கள்

‘மகாகவி’    மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11 கவிஞர். வதிலைபிரபாதலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்ஆசிரியர், மகாகவி மாத இதழ்ஒற்றைதெரு, வத்தலகுண்டு…

Continue Reading →