மார்ச் 8: சர்வதேசப் பெண்கள் தினம், சிந்திக்க வேண்டியது கட்டாயம்

சர்வதேசப் பெண்கள் தினக் கட்டுரை.மார்ச் 8ஆம் தேதியை சர்வதேசப் பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம். சாதாரணப் பெண்களின் சாதனைகளைப் பற்றி பேப்பர்களிலும், பத்திரிகைகளிலும் படித்துத் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக கிராமத்துப் பெண்களின் சாதனைகளைப் பற்றியும், அவர்களுடைய மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவைகளைப் பற்றியும், பெண்களைத் தழுவிய எண்ணங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என்று அன்றைய தினப் பேப்பர்கள் பெண்களைச் சார்ந்த பேப்பர்களாகவே  அச்சிடப்படுகின்றன. இதைக் கேட்பதற்கு பெருமிதமாகத் தான் இருக்கிறது. வாழுகின்ற இந்தப் புவியை “பூமித்தாய்” என்று அழைக்கிறோம், நம்முடைய நாட்டை எதிரிகள் படையெடுக்கும்போது நமது படைவீரர்கள் “பாரத் மாதா கி ஜய்” அதாவது “பாரத அன்னைக்கு வெற்றி” என்ற முழக்கத்தோடு போர்க்களத்துக்கு செல்லுகிறார்கள், அதே களத்தில் ஒரு வீரன், உயிர்போகும் தருணத்தில, தாய்மண்ணுக்கு சலாம் போட்டுட்டு உயிரிழக்கிறான். வாழுகின்ற கிரகத்தையும், குடியிருக்கும் நாட்டையும் பெற்ற தாய்க்கு சமமாக கருதுகிறோம், போற்றுகிறோம், பூஜிக்கிறோம்.

Continue Reading →

ஒரு நினைவோட்டம்: எல்லோருக்கும் இனிய மனிதன் சிவகுருநாதன்..

சிவகுருநாதன் - முன்னாள் தினகரன் ஆசிரியர்எங்கள் வீடு ஒரு செய்தி நிறுவனம் போன்று பல்லாண்டுகள் இயங்கியது. மூத்த சகோதரர் நாவேந்தன் முதல் கடைசிச் சகோதரர் வரை எங்கள் சகோதரர்கள் யாபேருமே சுமார் நாற்பது வருடங்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவரெனக் காலத்துக்காலம் பத்திரிகை, வானொலிச் செய்தியாளர்களாகச் செயற்பட்டோம். நாவேந்தன் பதினாறு வயதில் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகச் சேர்ந்து சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு ஊருக்குத்திரும்பிச் சில வருடங்கள் வீரகேசரியின் நிருபராகச் செயற்பட்டார். துரைசிங்கம் அண்ணர் தினகரன் நிருபராக விளங்கினார். பின்னர் அக்கா ஞானசக்தி, சிவானந்தன் அண்ணர், யான், தங்கை சரோஜினி, தம்பி தமிழ்மாறன் என எல்லோருமே காலத்துக்காலம் இலங்கையிலிருந்து வெளிவந்த சகல பத்திரிகைகளுக்கும் நிருபர்களாகக் கடமையாற்றினோம். வீரகேசரி, தினகரன் குறூப், தினபதி குறூப், டெயிலி மிரர் – ஈழமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாவற்றுக்கும் எமது வீட்டு மேசையிலிருந்து விதம்விதமாகச் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டன.

Continue Reading →

மாற்றங்கள்

கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய்
மனிதன் கண்டது மாற்றம்
நடையாய் நடந்தின்று நாடு கடந்து
படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்
மாற்றங்கள் தொடர்கிறது உலகில் – மனிதன்
மனமாற்றம் அடையத் துடித்தாலும்
அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம்
துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை

Continue Reading →

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

1. நியூட்டனின் மூன்றாம் விதி

*இருவர் சந்தித்தார்கள்
*அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

Continue Reading →

இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்

இளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான இளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர் என்பதால் ஒருவித Myth உருவாகியுள்ளது. எதிர்பாராத எல்லா மரணங்களும் மாயைகளை கட்டமைப்பதில் வல்லவை. இறந்த உயிர்சார்ந்து மாயையின் ஆகிருதி தீர்மானிக்கப்படுகிறது. மாயையின் மைய்யப்பொருள் பெண்ணென்கிறபோது பூடகத் தகவல்களுக்குத் தடங்கலின்றி ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்ணெனில் அவர் கூடுதலாகக் கவனம் பெறுவார். கற்பனைகளுக்கு கலைச்செழுமை கிடைத்துவிடுகிறது. “அற்ப ஆயுளில் போன கழுதை ஆயுசுமுடியறவரைக்கும் சுத்துவா” என்ற தமிழ் சொல்வடையை நம்பும் ஐரோப்பியர்களும் இருக்கவே செய்கிறார்கள். இருள்கவிந்த சேன் நதிகரையோரம் மென்மையும் மேட்டிமையும் கொண்ட டயானாவின் காலடிஓசை நுண்ணுணர்வு கொண்டோர்க்கு வாய்ப்பதாகக் வதந்திகள். அண்மையில்  லேடி ‘டி’யென்று விசுவாசிகளால் அழைக்கப்பட்ட டயானாவைக் கருப்பொருளாகக் கொண்டு இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.

Continue Reading →

உலக மகளிர்தினக் கவிதை (மார்ச் 8 மகளிர் தினம்)

உ

தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !

Continue Reading →

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!

மந்திரிமனைசிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.

Continue Reading →

நூலறிமுகம்: ‘மிஷியோ ஹகு’வின் ‘ஹைபர் ஸ்பேஸ்’!

நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன்.

Continue Reading →

அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்

ஆகஸ்ட் 2007 இதழ் 92 விலிருந்துநவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட ‘சார்பியற் தத்துவம்’ (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

Continue Reading →