இன்று வாழ்க்கையில் வெற்றியடைவது பற்றிய நூல்கள் பல வெளிவருகின்றன. இத்துறையில் ஆங்கிலத்திலுள்ள பல அரிய நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன. இத்துறையில் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்கள் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே அறிஞர் அ.ந.கந்தசாமி ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் அரியதொரு நூலினை எழுதியுள்ளாரென்பதும், அது தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக டிசம்பர் 1966இல் வெளிவந்துள்ளதென்பதும் வியப்புக்குரியவை. மேற்படி நூலினை ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் பெயரில் வெளியிட்ட பாரி பதிப்பகம் பின்னர் அகிலனின் நூலொன்றிற்கும் மேற்படி பெயரினை வைத்து வெளியிட்டது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது; கண்டிக்கத் தக்கது.
Yours truly now in Melbourne came across a selection of Tamil Short stories translated into English titled being alive compiled by L Murugapoopathy on behalf of the International Tamil Writers Forum Sri Lanka-Australia.. The Forum operates from 3 B, 46th Lane,Colombo 06 and Craigburn, Victoria 3064, Australia. The Stories are translated by Shiyamala Navaratnam of Canada and Edilbert N Rajadurai of Australia. There are 15 stories in this 106 page collection neatly printed by Kumaran Press Private Limited at B3,Ramya Place, Colombo 10. The writers concerned are: S Krishnamoorthy, Ravi, Kallodaikkaran, T Nithyakeerthi, A Chandirahasan, Buvana Rajaratnam, Nadesan, ,Rathi, Aasi Kantharajah, Arun Vijayarani, L Murugapoopathy, Aaliyal, T Gnanasekeran and T Kalaamani. The last two writers are resident in Lanka, but they had lied in Australia previously.Most of these writers are unknown to me and I have not previously read their writings.
அத்தியாயம் 58
நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார். நாக்பூர் போய்ச் சேர மணி சாயந்திரம் நாலு ஆகிவிடும். இவர்களை அழைத்துக்கொண்டு, நாக்பூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் க்ராண்ட் எக்ஸ்ப்ரேஸோடு சேர்க்கப்படும் வண்டியைத் தேடி இடம் பிடிக்கவேண்டும். இந்த பாதையில் வருவது இது தான் முதல் தடவை. பிலாஸ் பூர் வரைக்கும் ஒரு தடவை வ்ந்திருக்கிறேன் தான். அது ஜெஸகுட்டாவில் இறங்க மறந்து தூங்கிவிட்டதால். என்னைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்த ஊர் பற்றி யெல்லாம் கேட்டு வந்தார் திருமதி கிருஷ்ணஸ்வாமி. எப்போதும் புதிதாகப் பழக நேரும்போது நடக்கும் பரிச்சயம் தான். ஆனால் அவரிடம் ஒரு சின்னப் பையனிடம் காட்டும் கரிசனத்தையும் உணர முடிந்தது. குழந்தை வேறு. அது அதிகம் பழக மறுத்தது. அன்றைய தினத்துக்கான சாப்பாடு உடன் கொண்டு வந்தத்தை நானும் பகிர்ந்து கொண்டேன். எல்லாம் ந்ன்றாகத் தான் இருந்தது.
இயற்கையை தனது அடிமையாக பாவித்து மனிதன் அதை பலவிதங்களிலும் சேதப்படுத்திவருவதன் பலனை உலகமும், அதிலுள்ள உயிரினங்களும் அனுபவித்துவருகின்றன. புவி வெப்பமயமாதல் என்ற சொற்பிரயோகத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கநேர்கிறது. மரம் நடுவதன் அவசியத்தைப் பேசியபடியே மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காடுவளர்ப்புப் பற்றி பேசியவாறே காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. புலி, யானை போன்ற எத்தனையோ விலங்கினங்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே போகிறது. தட்பவெப்பநிலையில் விரும்பத்தகாத பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல், வாழ்க்கைச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த தொடர்ந்தரீதியான அக்கறையும், விவாதங்கள், வழிகாட்டல்களும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளன.
அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப் போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன. தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.
2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ, அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட ‘வாதங்களும், விவாதங்களும்’ நூலுக்காக எழுதப்பட்டது ]
“‘நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை’ என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்” (விவாதங்கள் சர்ச்சைகள், பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் ‘எழுத்து’ இதழில் வெளியான ‘பாலையும், வாழையும்’ கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் ‘சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்’ என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது.
பெண்ணியம்’ இணையத்தளத்திலிருந்து…..
“குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை இறந்தபோது சவப்பெட்டி இல்லை” – ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? யார் இந்த ஜென்னி? இப்படியொரு கொடுமை பெற்றவளுக்கு இருந்தால் என்ன செய்வாள்? பதறுகிறோம் நாம். இத்தனைக்கும் ஜென்னி மிக வசதியான வீட்டுப் பெண் தான். அவளுடைய உண்மை காதலுக்கு முன் இந்த வறுமையும் துச்சமென சிரித்து விரட்டுவாள் ஜென்னி. யார் அந்த அதிஷ்டகார காதலன்?ஜென்னியின் முன்னோர்கள் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பிரபு வம்சத்தினர் என்றால் கிட்டத்தட்ட குட்டி ராஜாக்கள் போன்ற வசதியுடையவர்கள் என்றுக் கூட சொல்லலாம். மிகவும் பிற்போக்கான உணர்வு உடையவர்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் பிரதம அதிகாரியாக வேலைமாற்றம் கிடைத்து தன் குடும்பத்தினருடன் ட்ரீவ்ஸ் வருகிறார். அப்போது ஜென்னிக்கு வயது 2. ஜென்னியின் பக்கத்து வீடு கார்ல் மார்க்ஸ். ஆனால் அப்போது கார்ல் மார்க்ஸ் பிறக்கவில்லை.
அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா … கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.
1.0 அறிமுகம்
புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.
2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும்> ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும்> புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு