பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘பதிவுகள்’ கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். – பதிவுகள் ]
அவுஸ்திரேலியா முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி பிறந்தவர். இன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 ஆம் ஆண்டு விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் தோன்றியபோது அங்கு முதலாவது மாணவனாகச்சேர்ந்து 1963 இல் புலமைப்பரிசில் பெறறு; யாழ். ஸ்ரான்லி கல்லூரியிலும் பின்னர் நீர்கொழும்பு அல்ஹிலால ; மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர். 1972 இல் படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் அறிமுகமானவர். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் இதுவரையில் 18 நூல்களை எழுதியிருப்பவர்.
நெருங்கிய ‘மடத்து’ நண்பர்களுக்கு ஜே.கே. ஊருக்கு, உலகத்துக்கெல்லாம் ஜெயகாந்தன். பெற்றோர் வைத்த பெயரும் அதுவே. இந்த அடலேறு பிறந்த இடம்: மஞ்சக்குப்பம்; கடலூரின் ஒரு பகுதி. ஜெயகாந்தனின் எழுத்துப் பற்றி, தனக்கு வெளியேயான புறவுலகை அவர் பார்த்த பார்வையான அவரின் எழுத்தின் சாதனை பற்றி நிறையப் பேர் நிறைய எழுதிவிட்டார்கள். அவர்களில் வாசகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என்று நிறையப் பேர். பொதுவாக எழுத்தாளர்கள் இன்னொரு எழுத்தாளரைப் பற்றி விமர்சன ரீதியில் எழுத நிறைய யோசிப்பார்கள். இது பொதுவாக ஒரு எழுத்தாளர் குணம். இவர் விஷயத்தில் அவர்களிடையே அந்த யோசிப்பும் இல்லாது போயிற்று நல்லதாயிற்று. அவரது இளமைப் பருவத்தில், விந்தன் நடத்திய ‘மனிதன்’, இஸ்மத் பாஷாவின் ‘சமரன்’, மாஜினியின் ‘தமிழன்’, தோழர் விஜயபாஸ்கரனின் ‘சரஸ்வதி’, மற்றும் ‘தாமரை’ ஆகிய இதழ்களுக்கு தமது எழுத்துக்கள் பிரசுரமாக இலாயக்கான பத்திரிகைகள் இவையே என்று இவரே தெரிவுசெய்து தமது கதைகளைக் கொடுத்திருக் கிறார். இவைகளே எழுதுவதற்கு இவர் நடை பழகிய பத்திரிகை களாகவும் ஆயிற்று.
ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டில் பிறந்து 1904 வரை 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் மகத்தான இலக்கியச் சாதனைகளை நிகழ்த்தியவர். எனக்கு செகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான- தேர்ந்த வாகரும், விமர்சகருமான- எஸ்.ஏ.பெருமாள் அவர்களே, இங்கும் செகாவைப் பற்றி சொல்கிறார்… செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இது வம்ச பரம்பரையாக நீடித்தது. எண்பது ரூபிள் கடனுக்காக அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் அடிமைகளாயினர். கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டு விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ்.
அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்
பெயராகவும் வைக்கப்பட்டது). ஈழத்தின் தமிழ் நூலகவியல்துறையில் முன்னோடிகளாகவிருந்த அமரர் கலாநிதி.வே.இ.பாக்கியநாதன், அமரர் எஸ்.எம்.கமால்தீன், திரு.இ.முருகவேள் போன்றோருடைய ஆலோசனை, வழிகாட்டலுடன் 1985இல் அயோத்தி நூலகசேவைகள் அமைப்பு, யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என்.செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும், நூலியல் அறிவை தமிழரிடையே விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறைச் சாத்தியமான வழிகளிலும் எடுத்துச்செல்வதுமாகும்.