மரணதண்டனை: நாகரிகத்தின் அநாகரிகம்!

No To Death Penaltyமரண தண்டனை உண்மையில் நாகரிக மனிதர் நாணும்படியானதொரு தண்டனை. மரண தண்டனைக்குப் பதில், குற்றவாளிகளைத் திருத்தும்வகையில் தண்டனைகளை வழங்குதலே நாகரிக மனிதரின் செயலாக இருக்க முடியும். மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கொள்கை அடிப்படையில் மட்டுமே எதிர்த்தால் மட்டுமே தர்க்கரீதியில் அது சரியாகவிருக்கும். தாம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள், அரசுகள் இவ்விதமான தண்டனைகளை வழங்கும்போது மெளனமாக இருந்த, இருக்கும் நபர்கள், அமைப்புகள் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனைக்கெதிராகக் குரல் கொடுப்பது ஒரு பக்கச்சார்பானது; சுயநலமிக்கது. தற்போது இராஜிவ் காந்திக் கொலை வழக்கில் மரணதண்டனைக்குள்ளாக்கப் படவிருக்கும் தமிழர்களுக்கெதிரான மரணதண்டனையினை மரணதண்டனை நாகரிகமடைந்த மானுட இனத்தின் அநாகரிகமென்ற அடிப்படையிலேயே பதிவுகள் எதிர்க்கிறது. அந்த அடிப்படையில் இதுவரையில், பலவேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கையில், மற்றும் உலகமெங்கும் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் பதிவுகள் நினைவு கூர்ந்துகொள்கிறது. அவ்விதம் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் , அவர்களது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் முறையான நீதி கிடைக்கவேண்டுமென்றும் (குறைந்தது நடந்து முடிந்த தவறுகளுக்காக மக்களை நோக்கிய மன்னிப்பு மட்டுமாவது) பதிவுகள் விரும்புகிறது.தற்போது இந்தியாவில் முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணைமனுக்களை இந்திய ஜனாதிபதி நிராகரித்து விட்டதையடுத்து அவர்களுக்கான தூக்குத்தண்டனை நிறைவேற்றுப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. இந்த மரணதண்டனை என்பது தர்க்கரீதியாகப் பார்த்தால் கேலிக்குரியது. கொலைகளுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்வென்றால் , கொலையாளிகளெனக் கருதப்படுபவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதும் இன்னுமொரு கொலையே. அரசினால் நடாத்தப்படும், சட்டரீதியிலான கொலை. கொலைஞர்களுக்குரிய தண்டனை மரணதண்டனை என்றால் கொலையாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் அனைவருக்குமுரிய தண்டனையும் மரணதண்டனைதான். ஏனெனில் சட்டத்தின்முன் கொலைகளுக்கு இருவேறு தண்டனைகளிருக்க முடியாது. ஆனாலும் நடைமுறையில் சட்டமென்பதும் கூட ஒருபக்கச் சார்பானதுதான். முதலாளித்துவ அரசென்றாலென்ன, இனத்துவேசம் மிக்க அரசென்றாலென்ன, அவ்வகையான அரசுகளால் நிறைவேற்றப்படும் நீதிமனற நடைமுறைகள், தீர்ப்புகளும் அவற்றுக்குச் சார்பானவையாகவே இருக்கும். மரண தண்டனை எல்லா நாடுகளிலும் கொலைக்குற்றங்களுக்குத்தான் விதிக்கப்படுமென்பதில்லை.

Continue Reading →

TheStar.Com: The full text of Jack Layton’s open letter to all Canadians; State funeral for Layton in Toronto on Saturday By Lesley Ciarula Taylor Staff Reporter!

Jack LaytonDear Friends, Tens of thousands of Canadians have written to me in recent weeks to wish me well. I want to thank each and every one of you  for your thoughtful, inspiring and often beautiful notes, cards and gifts. Your spirit and love have lit up my home, my spirit, and my  determination. Unfortunately my treatment has not worked out as I hoped. So I am giving this letter to my partner Olivia to share with you in  the circumstance in which I cannot continue. I recommend that Hull-Aylmer MP Nycole Turmel continue her work as our interim leader until a permanent successor is elected. I recommend the party hold a leadership vote as early as possible in the new year, on approximately the same  timelines as in 2003, so that  our new leader has ample time to reconsolidate our team, renew our party and our program, and move forward  towards the next election.

Continue Reading →