சமூகம் பற்றியே சிந்திக்கும் மானிடநேசன் ஐ.தி சம்பந்தன்

காலத்துக்குக் காலம் ‘வரலாற்று நாயகர்கள்’எனத்தகும் பெரியோர்கள் அவதரித்து தமது அரும்பெரும் சாதனைகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் வறுமையில் தாழ்வுற்று,  அடக்கி ஒடுக்கப்பட்டு, விடுதலையின்றிப் பாழ்பட்டுக்கிடந்த மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்துள்ளதையும், வாழ்க்கையின் நெறிகளை சுட்டிக்காட்டிச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய பெரியோர்களின் அரும் பெரும் சாதனைகளையும், தன்னலமற்ற சேவைகளை உணரவும், பிறருக்கு அவற்றை உணர்த்தவும் இப்படியான விழாக்கள் அவசியம் என்பது மிகவும் மனங்கொள்ளத்தக்கது.அந்தவகையில் பல்துறைச் சேவையாளர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு பவள விழா எடுக்க நினைத்த கலாநிதி பொன். பாலசுந்தரம் அவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டுகின்றது என் மனம்.காலத்துக்குக் காலம் ‘வரலாற்று நாயகர்கள்’எனத்தகும் பெரியோர்கள் அவதரித்து தமது அரும்பெரும் சாதனைகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் வறுமையில் தாழ்வுற்று,  அடக்கி ஒடுக்கப்பட்டு, விடுதலையின்றிப் பாழ்பட்டுக்கிடந்த மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்துள்ளதையும், வாழ்க்கையின் நெறிகளை சுட்டிக்காட்டிச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய பெரியோர்களின் அரும் பெரும் சாதனைகளையும், தன்னலமற்ற சேவைகளை உணரவும், பிறருக்கு அவற்றை உணர்த்தவும் இப்படியான விழாக்கள் அவசியம் என்பது மிகவும் மனங்கொள்ளத்தக்கது. அந்தவகையில் பல்துறைச் சேவையாளர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு பவள விழா எடுக்க நினைத்த கலாநிதி பொன். பாலசுந்தரம் அவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டுகின்றது என் மனம். பழகுவதற்கு இனிமையானவர். அன்பானவர். பண்பானவர். தனக்காகவும் பிறருக்காகவும் வாழும் சிறந்த ஒரு சேவையாளர்தான் ஐ.தி.சம்பந்தன். அவரின் பல்வேறுபட்ட சேவைகளை நோக்கும்போது ‘பிறந்த நாட்டிற்குச் சேவை செய்வது கற்றறிவாளரின் கட்டாய கடமை’ என்ற கருத்துக்களின் தந்தையாக விளங்கிய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ என் நினைவில் வந்து போகின்றார்.

Continue Reading →

வாழும் மனிதம் – 2

எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்காலம்: ஆகஸ்ட் 27, 2011 – சனிக்கிழமை பிற்பகல் 3மணி – 6 மணி வரை. இடம்: ஸ்காபரோ சிவிக்சென்ரர் மண்டபம் (கனடா) (மக்கோவன் – எல்ஸ்மெயர்) . சிறப்புரை: பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் “போருக்குப் பின்னரான சமூக மாற்றமும்  முற்போக்குவாதிகளின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தேவன். ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Continue Reading →