வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் “லெனின் விருதை” வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர்.
[பாகிஸ்தான் சிறுகதைகள்; தொகுப்பு இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சென்னை-600 001 பக்கங்கள் 503 விலை ரூ 220 ] பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லீம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும் ,வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு. என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன் தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன். தான் அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம் அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?
சோப்ராவின் தங்கையுடன் பேசிக்கொண்டிருக்கலாம் கொஞ்ச நேரம் என்ற நினைப்பில் நான் சீக்கிரமே அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். அண்ணனிடம் அவ்வளவு பிரியம் அவளுக்கு. அவன் இல்லாது இருக்க முடியவில்லை அந்த 10 – 11 வயது தங்கைக்கு. திருட்டுத் தனமாக கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டால், ரோஹ்தக்கிலிருந்து. இது என்ன தில்லியிலிருந்து காஜியாபாத் போகிற மாதிரியா இல்லை க்ரோம்பெட்டிலிருந்து மாம்பலம் போகிற சமாசாரமா? இல்லை நான் அவள் வயதில் வீட்டிலிருந்து ஓடி நிலக்கோட்டை பார்க் கட்டிட தாழ்வாரத்தில் படுத்துத் தூங்கிய சமாசாரமா? ரோஹ்தக்கிலிருந்து பஸ்ஸில் ரயிலில் தில்லி வந்துவிடலாம் தான். ஆனால் தில்லியிலிருந்து ஒரிஸ்ஸாவிலிருக்கும் புர்லா காம்ப்புக்கு வருவது வயதானவர்களுக்கே சிரமம் தரும் காரியம். வழி சிக்கலானது. அங்கங்கே கேட்டு விசாரித்துக்கொண்டு வரவேண்டும் இது அந்நாட்களின் (1950) சமாசாரம். தில்லியில் அவள் இறங்குவது பழைய தில்லி ரயில் நிலையமாக இருக்கும். அங்கிருந்து புது தில்லி நிலையம் வந்து ரயில் ஏறவேண்டும். தில்லியிலிருந்து ‘பீனா’வில் இறங்க வேண்டும். பின் பீனாவிலிருந்து கட்னி வரை பயணம். பின் மறுபடியும் இறங்கி கட்னியிலிருந்து ஜெர்சகுடா. வண்டி ஜெர்ஸகுடா வரை நேரே போகுமா இல்லை பிலாஸ்பூரில் இறங்கி கல்கத்தா மெயில் பிடித்து ஜெர்ஸகுடா போகணுமா என்பது இப்போது நினைவில் இல்லை. ஜெர்சகுடாவில் இறங்கி ஒரு பாஸஞ்சர் வண்டி சம்பல்பூருக்குப் போக. சம்பல்பூர் ரோட் (சம்பல்பூர் மெயின் அல்ல) நிலையத்தில் இறங்கி புர்லாவுக்கு பஸ் பிடிக்க வேண்டும். இந்த நாலைந்து இடங்களில் ஏறல் இறங்கல்; பதினோரு வயசுப் பெண், ரோஹ்தக்ககைத் தாண்டி அறியாதவள், கையில் காசில்லாமல் வந்து சேர்ந்து விட்டாள். சாதாரண காரியமா?. சாப்பாட்டுக்கு அங்கங்கே என்ன செய்தாள்? என்னவோ வந்து சேர்ந்து விட்டாள் பத்திரமாக. தன்னைச் செல்லம் கொஞ்சும் அண்ணனைத் தேடி. அம்மா அப்பா வேண்டாம். ரோஹ்தக் தோழிகள் வேண்டாம். அண்ணன் போது.ம்.