புல்லுக்குளத்தையும் அதனை ஒட்டிய நிலப்பரப்பையும் தென் இலங்கை நபர் ஒருவருக்குச் சுற்றுலா விடுதி அமைப்பதற்கென நீண்டகாலக் குத்தகைக்கு விடும் முயற்சிகள் திரைமறையில் இடம்பெற்று வருவதாகச் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யாழ்.நகரின் மத்தியில் அமைந்திருக்கும் புல்லுக்குளத்தை உல்லாசப் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தும் திட்டத்தை உள்ளடக்கி, உல்லாச விடுதி ஒன்றை புல்லுக்குளத்தை ஒட்டிய நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது, யாழ்.நகரை அழகுபடுத்தவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் உதவும் ஓர் அபிவிருத்தித் திட்டமாகவே தோற்றம் காட்டும். ஆனால், இதன் பின்னணி கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரியதாகவே உள்ளது. உத்தேச இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள புல்லுக்குளமும், அதனை ஒட்டி மணிக்கூட்டுக் கோபுரப் பக்கமாக அமைந்திருக்கும் நிலப்பரப்பும் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானது.
கவிஞர் நீலாவணன் 1931 இல் பிறந்தவர். பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் 1952 இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். அன்னார் இயற்கை எய்தும் வரை ஒரு கவிஞராகவே வாழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கியத் துறைகளில் அவரது பங்களிப்பு விரவிக் காணப்பட்டிருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தி இலக்கிய உலகுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். ஈழத்து கவிதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பெரிய நீலாவணையிற் பிறந்தவரான கேசகப்பிள்ளை சின்னத்துரை ஆகிய இவர் ஊரின் மீதுகொண்ட பற்றுக் காரணமாகவே நீலாவணன் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்தார். நீலாவணன் காவியங்கள் என்ற தொகுதி நன்னூல் பதிப்பகத்தினூடாக 112 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. இந்த நூல் கவிஞர் நீலாவணனின் மூன்று காவியங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பட்டமரம், வடமீன், வேளாண்மை ஆகிய காவியங்களே அவையாகும். நீலாவணனை நிலவுக்கு ஈந்த அவர் தாயார் தங்கம்மா தாளடிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந் நூலுக்கான பதிப்புரையை கவிஞர் நீலாவணனின் மகனான திரு. எஸ். எழில்வேந்தன் வழங்கியுள்ளார். மிகப் பொருத்தமான முறையில் இரட்டை மாட்டு வண்டியில் நெல்லு மூடைகளை ஏற்றிச்செல்லும் காட்சி நூலின் முகப்போவியத்திற்கு அழகு சேர்த்திருக்கின்றது. அண்ணன் நிலாவணனுக்கு என்ற தலைப்பில் திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் கவிஞர் நீலாவணன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘பதிவுகள்’ ஆகஸ்ட் கவிதைகள் -2
தமிழ்நாட்டு எழுத்தாளர் இரா நடராசனின் ஆயிஷா என்றொரு குறுநாவல் இலக்கிய உலகில் அண்மைக்காலங்களில் பேசப்பட்ட ஒரு படைப்பு. 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை ஈழத்தில் அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருந்தனர். அந்நூல் பற்றிய சில குறிப்புகள் … ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவு. என்றாலும்; மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது. எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.