[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழொன்றில் வெளிவந்த ஜெயகரனுடனான நேர்காணல் இம்முறை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.]-கனடாவில் நாடகமென்றால் பா.அ.ஜயகரனின் நினைவு வராமல் போகாது. அந்த அளவுக்குக் கனடாத் தமிழ் நாடக உலகில் காத்திரமான பங்களிப்பினைச் செய்தவர் , செய்து கொண்டிருப்பவர் ஜயகரன். கவிஞராகத் தன்னை ஆரம்பத்தில் வெளிக்காட்டிய ஜயகரன் தற்போது தன்னை நாடக உலகிற்கே அதிகமாக அர்ப்பணித்துள்ளதை அடிக்கடி இங்கு மேடையேற்றப்படும் நாடகங்கள் புலப்படுத்துகின்றன. ‘எல்லாப் பக்கமும் வாசல்’, ‘இன்னொன்று வெளி’, ‘சப்பாத்து’, ‘பொடிச்சி’ உட்படப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர் ஜயகரன். தமிழில் காத்திரமான நாடகப் பிரதிகளில் இல்லாத குறையினை நீக்கும் முகமாக அவற்றினைத் தானே எழுதித் தயாரித்து மேடையேற்றும் ஜயகரன் பாராட்டிற்குரியவர். அவரை இம்முறை பதிவுகளிற்காகப் பேட்டி கண்டோம்.-
எழுத்தாளர் முல்லை அமுதனைத் (இ.மகேந்திரன்) தமிழ் இலக்கிய உலகு நன்கறியும். இலண்டனில் வசிக்கும் அவர் வருடா வருடம் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியினையும் நடாத்தி வருபவர். ‘காற்றுவெளி’ என்னும்…