தொடர் நாவல்: அ.ந.கந்தசாமியின் மனக்கண் ( 5)

5-ம் அத்தியாயம்: சலனம்

மனக்கண் நாவலின் காட்சி: பத்மா கவலையில் ...அறிஞர் அ.ந.கந்தசாமி[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]  பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!

Continue Reading →

எனது நாடகங்களை ஒவ்வொரு கவிதையாகவே எழுதுகிறேன்!” நாடகாசிரியரும், கவிஞருமான பா.அ.ஜயகரனுடன் ஒரு நேர்காணல்!

பா.அ.ஜயகரன்[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழொன்றில் வெளிவந்த ஜெயகரனுடனான நேர்காணல் இம்முறை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.]-கனடாவில் நாடகமென்றால் பா.அ.ஜயகரனின் நினைவு வராமல் போகாது. அந்த அளவுக்குக் கனடாத் தமிழ் நாடக உலகில் காத்திரமான பங்களிப்பினைச் செய்தவர் , செய்து கொண்டிருப்பவர் ஜயகரன். கவிஞராகத் தன்னை ஆரம்பத்தில் வெளிக்காட்டிய ஜயகரன் தற்போது தன்னை நாடக உலகிற்கே அதிகமாக அர்ப்பணித்துள்ளதை அடிக்கடி இங்கு மேடையேற்றப்படும் நாடகங்கள் புலப்படுத்துகின்றன. ‘எல்லாப் பக்கமும் வாசல்’, ‘இன்னொன்று வெளி’, ‘சப்பாத்து’, ‘பொடிச்சி’ உட்படப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர் ஜயகரன். தமிழில் காத்திரமான நாடகப் பிரதிகளில் இல்லாத குறையினை நீக்கும் முகமாக அவற்றினைத் தானே எழுதித் தயாரித்து மேடையேற்றும் ஜயகரன் பாராட்டிற்குரியவர். அவரை இம்முறை பதிவுகளிற்காகப் பேட்டி கண்டோம்.-

Continue Reading →

முல்லை அமுதன் தொகுக்கும் ‘எழுத்தாளர் விபரத் திரட்டு’

எழுத்தாளர் முல்லை அமுதனைத் (இ.மகேந்திரன்) தமிழ் இலக்கிய உலகு நன்கறியும். இலண்டனில் வசிக்கும் அவர் வருடா வருடம் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியினையும் நடாத்தி வருபவர். ‘காற்றுவெளி’ என்னும்…

Continue Reading →

புல்லுக்குளத்தைத் தாரை வார்ப்பதற்குத் திரை மறைவில் முயற்சி! சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

பொ.ஐங்கரநேசன்புல்லுக்குளத்தையும் அதனை ஒட்டிய நிலப்பரப்பையும் தென் இலங்கை நபர் ஒருவருக்குச் சுற்றுலா விடுதி அமைப்பதற்கென நீண்டகாலக் குத்தகைக்கு விடும் முயற்சிகள் திரைமறையில் இடம்பெற்று வருவதாகச் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யாழ்.நகரின் மத்தியில் அமைந்திருக்கும் புல்லுக்குளத்தை உல்லாசப் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தும் திட்டத்தை உள்ளடக்கி, உல்லாச விடுதி ஒன்றை புல்லுக்குளத்தை ஒட்டிய நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது, யாழ்.நகரை அழகுபடுத்தவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் உதவும் ஓர் அபிவிருத்தித் திட்டமாகவே தோற்றம் காட்டும். ஆனால், இதன் பின்னணி கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரியதாகவே உள்ளது. உத்தேச இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள புல்லுக்குளமும், அதனை ஒட்டி மணிக்கூட்டுக் கோபுரப் பக்கமாக அமைந்திருக்கும் நிலப்பரப்பும் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானது.

Continue Reading →

நீலாவணன் காவியங்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

நீலாவாணனின் காவியங்கள்கவிஞர் நீலாவணன்கவிஞர் நீலாவணன் 1931 இல் பிறந்தவர். பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் 1952 இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். அன்னார் இயற்கை எய்தும் வரை ஒரு கவிஞராகவே வாழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கியத் துறைகளில் அவரது பங்களிப்பு விரவிக் காணப்பட்டிருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தி இலக்கிய உலகுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். ஈழத்து கவிதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பெரிய நீலாவணையிற் பிறந்தவரான கேசகப்பிள்ளை சின்னத்துரை ஆகிய இவர் ஊரின் மீதுகொண்ட பற்றுக் காரணமாகவே நீலாவணன் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்தார். நீலாவணன் காவியங்கள் என்ற தொகுதி நன்னூல் பதிப்பகத்தினூடாக 112 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. இந்த நூல் கவிஞர் நீலாவணனின் மூன்று காவியங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பட்டமரம், வடமீன், வேளாண்மை ஆகிய காவியங்களே அவையாகும். நீலாவணனை நிலவுக்கு ஈந்த அவர் தாயார் தங்கம்மா தாளடிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந் நூலுக்கான பதிப்புரையை கவிஞர் நீலாவணனின் மகனான திரு. எஸ். எழில்வேந்தன் வழங்கியுள்ளார். மிகப் பொருத்தமான முறையில் இரட்டை மாட்டு வண்டியில் நெல்லு மூடைகளை ஏற்றிச்செல்லும் காட்சி நூலின் முகப்போவியத்திற்கு அழகு சேர்த்திருக்கின்றது. அண்ணன் நிலாவணனுக்கு என்ற தலைப்பில் திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் கவிஞர் நீலாவணன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

Continue Reading →

ஆயிஷா நூல் அறிமுகம்

தமிழ்நாட்டு எழுத்தாளர் இரா நடராசனின் ஆயிஷா என்றொரு குறுநாவல் இலக்கிய உலகில் அண்மைக்காலங்களில் பேசப்பட்ட ஒரு படைப்பு. 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை ஈழத்தில் அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருந்தனர். அந்நூல் பற்றிய சில குறிப்புகள் ... ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவு. என்றாலும்; மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது. எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாதுதமிழ்நாட்டு எழுத்தாளர் இரா நடராசனின் ஆயிஷா என்றொரு குறுநாவல் இலக்கிய உலகில் அண்மைக்காலங்களில் பேசப்பட்ட ஒரு படைப்பு. 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை ஈழத்தில் அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருந்தனர். அந்நூல் பற்றிய சில குறிப்புகள் … ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவு. என்றாலும்; மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது. எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.

Continue Reading →

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு புத்தகங்கள்

வெங்கட் சாமிநாதன்தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது. அவர்கள் தம் உடலைத் தாங்கிக் கொண்டு  எங்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.. உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்கள் வயிறு பிழைக்க வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் மனம் அங்கு இராது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் ரத்தத்தில் ஊறித் தொடரும் ஒரு மன நிலை, உலகில் எங்கு சென்றாலும், அந்த அன்னிய தேசத்தின் சமூகத்தை, சூழலை, எதையுமே அறிந்து கொள்ளும் ஆர்வமோ, துடிப்போ இல்லாது, தன்னுள் சுருங்கிக் கொள்ளும் சௌபாக்கிய மன நிலையை வரமாகப் பெற்றவர்கள்.  இந்த அன்னிய மண்ணின்  மக்களின் வாழ்க்கை என்ன, அவர்கள் கொண்டுள்ள மதிப்புகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அறிவுத் தாகம் வெளிநாட்டில் வாழும் தமிழ்ர்களிடையே கிடையாது. அவர்களது மனமும் ஈடுபாடும் தமிழ் நாட்டின் எல்லையோடேயே சுருங்கி வேலிகட்டி முடக்கப்பட்டவை. அன்னிய நாட்டில் சூழலில் வாழும் நிர்ப்பந்தங்கள் கூட அவர்கள் மனவெளியை பாதிப்பதில்லை விரிவு படுத்துவதில்லை. ஏனெனில், அவர்கள் நினைப்பில், தமிழ் நாடு, இலக்கியம்,, கலாச்சாரம், கலைகள், அறிவு விகாசம், என்று எதைத் தொட்டாலும் அதில் தமிழன் லிப்னிட்ஸின் Best of all possible-ஐச் சாதித்துவிட்டவன். Best of all possible – உலகில் வாழ்பவன். அதாவது தமிழன். தமிழ் நாட்டில் பிறந்தவனாயிற்றே அவன். அப்படியிருக்க இந்த அன்னிய நாட்டில் அன்னிய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள, அவர்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள என்ன இருக்க சாத்தியம்? அவர்களும் இவன் சாதனையை மீறி எதுவும் செய்திருக்கப் போவதில்லை.  செய்துவிடப்போவதில்லை. ஆக, வேறு எதுவும் தெரிந்து கொள்ளும் தேவையும் இல்லை.

Continue Reading →

வீரகேசரி பிரசுர நாவல்கள் -ஒரு பொது மதிப்பீடு!

நூல்: வீரகேசரி பிரசுரங்கள்கலாநிதி நா. சுப்பிரமணியன்தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Continue Reading →

வீரகேசரி பிரசுர நாவல்கள் -ஒரு பொது மதிப்பீடு!

நூல்: வீரகேசரி பிரசுரங்கள்கலாநிதி நா. சுப்பிரமணியன்தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Continue Reading →