ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் 19ஆவது கூட்டத்தொடர் பற்றி உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை

 பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.[ மார்ச் 03, 2012 ] பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

Continue Reading →

வியத்தகு விட்னி கூஸ்ரன்…

வியத்தகு விட்னி கூஸ்ரன்…

[அண்மையில் மறைந்த பிரபல பாடகி விட்னி கூஸ்டன் நினைவாக…]

துடிக்கும் ஜீவன் ததும்புமிசை.
நொடியும் மறக்கவியலா இசை
அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..”
பொடி காட் பாடல்..   ஆம்!
(” I will always  love you…u….uu!..” -Body gard song )
விட்னிகூஸ்ரன்  தன் குரலால்
கட்டினாள் மனங்களை! – தனக்குக்
கிட்டிய சுயதிறன் நம்பாது
கட்டப்பட்டாள் பய உணர்வால்.

Continue Reading →

‘காற்றுவெளிச் சிறுகதைத் தொகுப்பு’

வணக்கம் வாசகர்களே! இது வரை காற்றுவெளியில் பிரசுரமான சிறுகதைகளை தரமானவற்றை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். அதிலிருந்து தொகுக்கப்படும் சிறுகதைகள் நூலாக்கம் செய்யப்படும். அடுத்த இதழுக்கான படைப்புக்களை விரைவாக அனுப்பி…

Continue Reading →

கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீடு

வணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.  விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளனவணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.  விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வைமுல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது. அவாவுறும் நிலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் துயர் சுமந்த பாடல்களையும், வாழ்வியல் குறித்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. புதுப்புது வீச்சான சொற்கள் கவிதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டி நிற்கின்றன. முதல் கவிதையான நரம்பு சுண்டிய யாழ் எனும் கவிதை கையேந்தித் திரியும் ஓர் பிச்சைக்காரன் பற்றியது. பிச்சைக்காரர்களைக் கண்டால் காணாதது போல் தலை திருப்பிச் செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. எல்லோரிடமும் தனது பசியைக் கூறி கை நீட்டும் பழக்கம் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. எனினும் ஓரிருவரைத் தவிர யாரும் அவனை மனிதனாகப் பார்ப்பதில்லை என்பதே கண்கூடு.

Continue Reading →