கொலஸ்டரோல் பிரச்சனையும்! அதைக் கட்டுப்படுத்துவதும்!

- Dr.M.K.முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர் -[அன்றைய ‘பதிவுகளி’ன் ‘நலந்தானா? நலந்தானா?’ பகுதியில்  பிரசுரிக்கப்பட்ட மருத்துவர் முருகானந்தனின் கட்டுரைகள் வாசகர்களின் நன்மை கருதி மீள்பிரசுரமாகும். – பதிவுகள்] உங்களுக்கு இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகம் என இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மாத்திரமல்ல இன்னும் பலர் இந்தக் கொலஸ்டரோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பரிதாபம் என்னவென்றால் மிகப் பெரும்பாலானவர்கள்  தமக்கு இப்பிரச்சனை இருப்பதை அறியாமல் இருப்பதுதான். இதற்குக் காரணம் இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அதிகரித்த  நிலையானது எந்தவித அறிகுறிகளையோ பாதிப்புகளையோ உடனடியாக வெளிக் காட்டுவதில்லை. வைத்திய ஆலோசனையும் இரத்தப் பரிசோதனையும் மாத்திரம்தான் இப்பிரச்சனை உங்களுக்கு இருப்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும். ஆனால் நடுத்தர வயதிலும் முதுமையிலும் வரக்கூடிய சில ஆபத்தான நோய்களுக்கு இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் ஒரு அடிப்படைக் காரணமாகும்.

Continue Reading →