நீ, நான், நேசம்

– சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை –

சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதைநிவேதாவிற்கு,  எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது. பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் பிரிந்தோம். இப்பொழுது நீ எங்கே, எப்படியிருக்கிறாயெனத் தெரியவில்லை. ஆனால் எப்பொழுதுமே என் மனதின் மையப்புள்ளியில் சிம்மாசனமிட்டு உட்காந்தவாறு என்னை ஆண்டுகொண்டே இருக்கிறாய் இன்னும்.

Continue Reading →

மொழிபெயர்ப்பாளர் தேவை!

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு படைப்புகளை மொழிபெயர்ப்பதில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் தேவை. ஆர்வமுள்ளவர்கள் மாதிரி மொழிபெயர்ப்பு (ஒரு பக்கம்) மற்றும் கட்டண விபரங்களுடன் எம்மை ngiri2704@rogers.com என்னும்…

Continue Reading →

Writing vs. Translating

John Bunch: an American, and a professional translator for German to English. He currently lives in Munich, Germany.In reading Chris Durban’s great book, “The Prosperous Translator” (which is in the form of a series of questions and answers from translators), one of the main take-aways I learned was that writing ability in one’s own native language is a critical skill of the best translators. Too many of us translators, me included, get caught up in the source language. We think that our native language is kind of automatic, and we don’t have to work on it. This is wrong for the following reasons: The target language text is the only thing your client and reader will see.  No matter how good your translation skill is, if you can’t write well in your native language, it is all for naught. The black and white text on the page in your native tongue is the only thing the reader sees of your awesome translation skills.  Language is constantly evolving. Words are being invented today in my native American English, that I don’t know about. I need to keep up.   If your text is 100% “perfect” from a translation point of view, but does not flow well, you are still going to be viewed as not very good. 

Continue Reading →

பி.பி.ஸி: ‘இலங்கை : போர் குற்றங்களை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம்’

சனல் 4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்படவுள்ள இந்த விவரணப்படத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 12 வயதேயான மகனான பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்த பயங்கரமான தகவல்களும் இடம்பெறவுள்ளன.12 மார்ச், 2012 – இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக ” இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” என்ற அந்த விவரணப்படத்தின் தயாரிப்பாளரான கலும் மக்ரே கூறியுள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் அடிப்படை நியமமாக உள்ள இந்த பாதுகாப்பை வழங்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடப்பாடு என்று அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர் என்ற மேற்கத்தைய செயற்திட்டத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தியதே இப்படியான போர்க்குற்றங்களை செய்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading →

எழுத்தாளர் ஆனந்தமயில் காலமானார்!

எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது “ஓர் எழுதுவினைஞனின் டயரி” சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க.…

Continue Reading →

சந்தேகித்தால் சந்தோசமில்லை

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)சந்தேகம் என்னும் ஐயம், தயக்கம், நிச்சயமின்மை, அவநம்பிக்கை, மனவுறுதியின்மை, உறுதியற்றநிலை ஆகியவை மனித வாழ்க்கையின் வளர்ச்சியைத் தகர்த்துத் தீராத் தொல்லைகளைத் தந்த வண்ணமுள்ளது. சந்தேகம் மக்களைச் செயலிலிறங்க முடியாதவாறு தயக்கம் காட்டித் துணிவும் ஊட்டி நிற்கின்றது. இவ்வாறான செயல் சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.  தரத்தில் விஞ்சிய மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாட்டில் ஐயுறவு எழுந்ததனால் பல ஆய்வறிவு சார்ந்த முன்னேற்றங்கள் உருவாகியன என்று விஞ்ஞான ரீதியில் கருதப்படுகிறது. எதிரி முறையில் அமைந்த அதிகமான சட்டத்தை மீறும் வழக்குகளில் வழக்குத் தொடுனர்  நிலை நிறுத்த வேண்டிய செய்திகளை ஐயப்பாடேதுமின்றி வாதமூலம் நிலைநாட்ட வேண்டுமென்பது சட்டக் கோட்பாடாகும்.

Continue Reading →