சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும் மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம், கதை, கவிதை எல்லாமே எதற்காக…? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும் அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன. சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல் அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது. ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு வரியும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயதுடைய மகன் ஆகியோருக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பிரிட்டனின் ஆவணக்காணொளியில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதானது தனது அயலவர் தொடர்பான இந்தியாவின் நடு நிலைக் கொள்கைக்கு பரிசோதனையாக அமைந்திருக்கிறது என்று வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்திருக்கிறது. இந்தப் பத்திரிகையில் ரொம் ரைட் என்பவர் “கடும் விமர்சனத்தின் கீழ் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியின் காணொளியானது புதன்கிழமை (இன்று) வெளியிடப்படவுள்ளது. இறந்தவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சன்னக் காயங்களைக் காண்பிக்கும் ஒளிநாடா பிரதிமையை இந்தக் காணொளி கொண்டுள்ளது. மிக சமீபகமாக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தக் காணொளி பிரதிமையைக் கொண்டுள்ளது. இறந்த பையனின் புகைப்படத்தை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.