சப்பானில் மதுபானக்கூடங்களிலும் தேனீர் கடைகளிலும் வளர்தேடுக்கப்பட்ட கவிதை வகையே சென்ரியு. இக்கவிதை வகை தமிழில் நகைப்பா என்று வழங்கப்படுகின்றது. சென்ரியு கவிதைகள் மனித நடத்தைகளையும் சமுதாய அவலங்களையும் வெளிப்படையாக போட்டுடைப்பவை. கிண்டல், நகைச்சுவை, அங்கதத் தன்மை வாய்ந்ததாக இக்கவிதைகள் படைக்கப்படுகின்றன. ’கடவுளின் கடைசி கவிதை’ எனும் சென்ரியு கவிதை நூலானது வனிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலில் மனித நடத்தைகள் யாவும் வெளிப்படையாக கவிதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. மேலும், லிமரைக்கூ, ஹைக்கூ கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.