In reading Chris Durban’s great book, “The Prosperous Translator” (which is in the form of a series of questions and answers from translators), one of the main take-aways I learned was that writing ability in one’s own native language is a critical skill of the best translators. Too many of us translators, me included, get caught up in the source language. We think that our native language is kind of automatic, and we don’t have to work on it. This is wrong for the following reasons: The target language text is the only thing your client and reader will see. No matter how good your translation skill is, if you can’t write well in your native language, it is all for naught. The black and white text on the page in your native tongue is the only thing the reader sees of your awesome translation skills. Language is constantly evolving. Words are being invented today in my native American English, that I don’t know about. I need to keep up. If your text is 100% “perfect” from a translation point of view, but does not flow well, you are still going to be viewed as not very good.
12 மார்ச், 2012 – இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக ” இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” என்ற அந்த விவரணப்படத்தின் தயாரிப்பாளரான கலும் மக்ரே கூறியுள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் அடிப்படை நியமமாக உள்ள இந்த பாதுகாப்பை வழங்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடப்பாடு என்று அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர் என்ற மேற்கத்தைய செயற்திட்டத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தியதே இப்படியான போர்க்குற்றங்களை செய்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது “ஓர் எழுதுவினைஞனின் டயரி” சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க.…
சந்தேகம் என்னும் ஐயம், தயக்கம், நிச்சயமின்மை, அவநம்பிக்கை, மனவுறுதியின்மை, உறுதியற்றநிலை ஆகியவை மனித வாழ்க்கையின் வளர்ச்சியைத் தகர்த்துத் தீராத் தொல்லைகளைத் தந்த வண்ணமுள்ளது. சந்தேகம் மக்களைச் செயலிலிறங்க முடியாதவாறு தயக்கம் காட்டித் துணிவும் ஊட்டி நிற்கின்றது. இவ்வாறான செயல் சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தரத்தில் விஞ்சிய மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாட்டில் ஐயுறவு எழுந்ததனால் பல ஆய்வறிவு சார்ந்த முன்னேற்றங்கள் உருவாகியன என்று விஞ்ஞான ரீதியில் கருதப்படுகிறது. எதிரி முறையில் அமைந்த அதிகமான சட்டத்தை மீறும் வழக்குகளில் வழக்குத் தொடுனர் நிலை நிறுத்த வேண்டிய செய்திகளை ஐயப்பாடேதுமின்றி வாதமூலம் நிலைநாட்ட வேண்டுமென்பது சட்டக் கோட்பாடாகும்.
– அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.- இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.
Kim Thúy’s autobiographical debut novel, Ru, describes a life-changing voyage from a childhood in strife-filled postwar Vietnam to a new beginning in 1970s Quebec. Unflinching in content and strikingly unique in form, the novel is itself an ambitious journey. Despite some moments of digression and occasional instances of thematic overreach, Ru is a poetic and highly individual exploration of what it can mean to straddle multiple cultures and identities simultaneously. The word “Ru” is Vietnamese for lullaby. In French it can signify a stream or flow. A fitting title for this book, given both Ru’s haunting and incantatory writing style and the migratory passage the Montreal-based novelist describes. Sensitively rendered in English by celebrated translator Sheila Fischman, Thúy’s novel originated with a French edition that won the Governor General’s Literary Award for fiction in 2010. Although the first-person narrator of Ru identifies herself in the novel’s opening pages as a woman named Nguyen An Tinh, the author has told the Quebec press that the book’s events accurately reflect her personal recollections of a life characterized by dramatic environmental shifts. That harrowing travelogue includes fleeing from an opulent lifestyle as a South Vietnamese child of privilege, to an overcrowded Malaysian refugee camp, to eventual settlement in and acculturation to Bill 101-era Quebec. In unadorned and dignified prose, Thúy spares no detail about the harsh passage by overfull boat, marked by abundances of scabies and excrement, and equal measures of terror and hope.
‘ஆறாவடு” நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்து கொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும் அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும் வேண்டியேயிருந்தன. தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக்கொண்டு படைப்பே பேசவெளிக்கிட்டது போன்ற நிலை படைப்பின்மீதான சந்தேகத்தை எவரொருவரிலும் கிளர்த்தமுடியும். அதுவே இந்தப் பிரதி விளைந்தது. இந்நிலையில் வெளியிலிருந்து வந்த தகவல்கள் தவிர்ந்து அவர்பற்றி வேறெதையும் அறிந்துகொள்ளும் சாத்தியமெதுவும் நூலில் கிடைக்காததும், தொலைக்காட்சி உரையாடலில் இல்லாததும் இதை எழுதுவதற்கான தாமதத்தை ஏற்படுத்தியது.
நெருங்கியவர்களுக்கு ‘சா’ நிகழ்கிற போதே ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வை ஒரு தடவை அலசிப் பார்க்கிறது நடக்கிறது போலும் .. என்று தயாளனுக்குப் பட்டது. சாவிலே போய்… நல்ல சா,கெட்ட சாவு இல்லைதான். எவராலுமே வாழ்க்கை வட்டத்தில் அனைத்து நிலைகளிலுமே நிறைவாய் வாழ்ந்திட முடிவதில்லை. ஒரு தடவை அதிருஸ்டம் அடித்தால், அடுத்து வருவது எதிர் மாறாக துயருறுவதாக இருந்து விடுகிறது. அதில் பிள்ளைச் செல்வம் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, அற்றவர்களாக இருந்தாலும் சரி ‘சா’ எல்லாரையும் ஒரு கணம் அசைத்தே விடுகிறது. பல கேள்விகளையும் எழுப்புகிறது. பதிலை தேடி அலைவது அவரவர் விருப்பம்.பதில்கள் கிடைக்கிறதா.. இல்லையா? இரை மீட்டலால் அந்த நாட்களுக்கே போய் விடுகிறோம். அவன் உள்ளக் கட லும் அசைவுற்று அலைகளை பிரவாகிக்கத் தொடங்கின. ‘சா’ இல்லத்தில் பார்வைக்கு வைத்திருந்த கதிரண்ணையின் உடலை தரிசிக்க வந்திருந்தான்.கறுப்பு நிறம்.சாந்தம் தவழ வெள்ளைப் படுக்கைப் பெட்டியில் படுத்திருந்தார்.இனி அவருக்கு எந்த கவலையும் இல்லை.இப்பவும் சினிமா நடிகர் முத்துராமனைப் போலவே இருந்தார். அப்படி ஒரு சாயல்.தயாளனின் அம்மாவிற்கு அடுத்ததாக பிறந்த சகோதரர்.இவரை விட அம்மாவிற்கு ஒரு அண்ணை,இரண்டு தங்கச்சிமார்,இன்னொரு தம்பி.. இருந்தார்கள் .
யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம். காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.