இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது! முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது. 1/1 சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:-[ஏப்ரில் 2012]இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது. 1/1 சென்னை, ஏப்.12 – இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:- இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன்.

Continue Reading →