உலகத் தமிழர் பேரவையானது இலங்கை வாழ் இசுலாமியருடன் கைகோர்த்து நிற்கின்றது!

மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20ää 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில்ää சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீவிரவாதப் புத்த மதத்தினரää; சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது.[ஏப்பிரல் 28, 2012] மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20,  2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில்,  சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீவிரவாதப் புத்த மதத்தினர்,  சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் பள்ளிவாசலை அகற்றி அதனை வேறிடத்திற்கு மாற்றும்படி பிரதம மந்திரி இட்ட கட்டளையும்,  இலங்கைத் தீவில் அரச உயர் அதிகாரிகள் மதச் சுதந்திரத்தை தொடர்ந்து மீறிவருவதையும் புத்த மதம் தவிர்ந்த மற்றைய மதங்கள்மீதான அவர்களின் சகிப்பின்மையையும் கோடிட்டுக் காட்டுகின்றன.  பிரதம மந்திரியின் இம்முடிவானது இசுலாமியரின் அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதெனப் பிரதம மந்திரியின் அலுவலகம் அறிவித்துள்ள போதிலும,  செய்தி ஊடகங்களில் வெளிவந்தது போன்று,  இந்த அறிவித்தல் வன்மையாக மறுக்கப்பட்டுள்ளமை மேலும் கவலையளிப்பதாக உள்ளது.  இன நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் பெரும்பான்மையினரின் அழுத்தங்களுக்கு அடிபணிதல் என்பது அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசுகளின் சிறப்பியல்பாக இருந்து வருகின்றது.

Continue Reading →

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

- Dr.M.K.முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர் -அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன். இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான். ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது.  அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை.  பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை.  மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.  இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை. நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Continue Reading →

பயனுள்ள ‘படிப்பகம்’

‘படிப்பகம்’ இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம். மிகவும் அரிய நூல்களான மார்க்சின் ‘மூலதனம்’ (தமிழில்),…

Continue Reading →