தொடர்நாவல்: மனக்கண் (13 & 14)

13-ம் அத்தியாயம்: சிவநேசர்

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது அவரை நேரில் ஒரு தடவையாவது சந்தித்ததில்லை. பல்கலைக் கழகத்து நாடகத்தன்று ஒரே ஒரு தடவை அவரை டெலிபோனில் சந்தித்து இருக்கிறோம். அன்று அவருக்குச் சிறிது சுகவீனம். இருந்தாலும் ஸ்ரீதரின் நாடகம் எப்படி நிறைவேறியது என்றறிவதற்காகவும், தன் அன்பு மகனுக்கு அவனது இஷ்டமான கலைத் துறையில் ஊக்கமளிக்க வேண்டுமென்பதற்காகவும் நள்ளிரவு வேளையில் அவனது நாடகத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவனுடன் பேசினார் அவர். சிவநேசரைப் பற்றி நாம் இதுவரை அறிந்த விவரங்களின் படி அவர் ஒரு கோடீஸ்வரர், படிப்பாளி, சாதிமான், தன் அந்தஸ்தில் பெரிது அக்கறைக் கொண்டவர் என்பன எங்களுக்குத் தெரியும். அந்தஸ்துதான் அவருக்கு உயிர். அது பெருமளவுக்கு ஒருவன் அணியும் ஆடைகளிலும் தங்கியிருக்கிறது என்பது அவரது எண்ணம். அதன் காரணமாக அவர் எப்பொழுதும் ஆடம்பரமாகவே உடுத்திக் கொள்வார், தமது மாளிகைக்கு வெளியே செல்லும் போது, அவர் ஒரு பொழுதும் தலைப்பாகை அணியாது செல்வதில்லை. எப்பொழுதும் வெள்ளைக் காற்சட்டையும் குளோஸ் கோட்டும் அணிந்திருப்பார். மேலும் தங்கச் சங்கிலியோடு கூடிய பைக் கடிகாரம் ஒன்று அவரது கோட்டை என்றும் அலங்கரித்துக் கொண்டே இருக்கும். கையில் தங்க மோதிரம் ஒன்றும் ஒளி வீசக் கொண்டிருக்கும். ஓரொருசமயங்களில் உள்ளூர்க் கோவிலுக்குப் போகும்போது மட்டும்தான் வேட்டி உடுத்திக் கொள்வார். அந்த வேட்டியும் சாதாரண வேட்டியாய் இராது. ஒன்றில் சரிகைக் கரையிட்ட வேட்டியாகவோ, பட்டு வேட்டியாகவோ தானிருக்கும். கோவிலுக்கு எப்பொழுதுமே அவர் வெறும் மேலுடன் தான் செல்பவரானதால் வடம் போன்ற பெரிய தங்கச் சங்கிலி ஒன்று அவர் பூரித்த நெஞ்சில் என்றும் புரண்டு கொண்டிருப்பதைக் காணலாம்.

Continue Reading →

மேலும் சில இலக்கியத் தகவல்கள்!

‘கவிஞன்’ காலாண்டு கவிதை சஞ்சிகை….

– கவிஞர் அஸ்மின் –

மேலும் சில இலக்கிய தகவல்கள்!

மீன்பாடும் தேன் நாடு என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகிறது. ‘கவிஞன்’ என்ற காலாண்டு கவிதை சஞ்சிகை. கவிஞர் சதாசிவம் மதன் இதன் ஆசிரியராக இருக்கின்றார்.இதில் கவிதைகளோடு கவிதை பற்றிய கட்டுரைகள் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.இந்த இதழுக்கு எழுத ஆர்வமுள்ள கவிஞர்கள் எழுதலாம்.

Continue Reading →

கவிஞர் ப.மதியழகனின் ‘சதுரங்கம்’ கவிதைத் தொகுப்பு பற்றி..!

சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது.அது எளிதில் வசப்படாது.கவிதை உலகில் நுழைந்தவருக்கே தெரியும்.புரியும்.சாத்தியப்படும்.தொலைந்து போன நிழலைத் தேடி புறப்பட்ட ப.மதியழகன் இரண்டாம் தொகுப்பில் சதுரங்கம் விளையாடி உள்ளார்.விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது.சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது.அது எளிதில் வசப்படாது.கவிதை உலகில் நுழைந்தவருக்கே தெரியும். புரியும்.சாத்தியப்படும்.தொலைந்து போன நிழலைத் தேடி புறப்பட்ட ப.மதியழகன் இரண்டாம் தொகுப்பில் சதுரங்கம் விளையாடி உள்ளார்.விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. பால்யம் என்பது எல்லோருக்கும் ஒரு பொதுவான அனுபவமாகவே இருக்கும்.எதிர் காலம் குறித்த கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாய்ச் சுற்றித் திரியும் பருவம் அது.பெரியவர்களுக்குக் கவலை அளிக்கும் செயலாகவே படும்.பொறுப்புப் பெற வேண்டும் என பெரிதாக முயல்வர்.அதிக பட்சமாக பட்டணத்திற்கு அனுப்பி வைத்து புதிய அத்தியாயத்திற்கு அடிகோலிடுவர்.முற்றுப்புள்ளி யில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிய கவிஞரின் அனுபவத்துடன் கவலையும் வெளிப்பட்டுள்ளது.

Continue Reading →

கனகலிங்கம் சுருட்டு

- குரு அரவிந்தன் -ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் பெயர்களை வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களிடம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. கந்தையா, பொன்னையா, செல்லையா, சின்னையா, இராசையா, முருகையா, அழகையா என்று இப்படியான எல்லாப் பெயர்களும் யகர வரிசையில் முடிவதாகவும், பொன்னுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, கண்ணுத்துரை, ராசதுரை, அருமைத்துரை என்று துரையில் முடிவதாகவும் இருந்தன. வேறு ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு சிவலிங்கம், கனகலிங்கம், இராமலிங்கம், யோகலிங்கம், சந்திரலிங்கம், கணேசலிங்கம்; என்றும், கொஞ்சக் காலம் கழித்துப் பிறந்தவர்களுக்கு சிவராசா, தவராசா, நடராசா, வரதராசா, ஜெயராசா, குணராசா, யோகராசா என்று எல்லாமே ராசாவில் முடியும் பெயர்களாயும் இருந்தன. பெண்களுக்கும் இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சிவனேஸ்வரி என்று பெயர்கள் இருந்தன. இப்படியான பெயர்களை வைத்துக் கொண்டே ஆணும்சரி, பெண்ணும்சரி அவர்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், வயதைக் கேட்காமலே குத்து மதிப்பாக அவர்களின் வயது என்னவாக இருக்கும் என்றும் ஓரளவு எங்களால் கணிக்க முடிந்தது.

Continue Reading →

லண்டனில் மஞ்சரி கலாமோகனின்; “சமர்ப்பணம்”

“இளம் பாடகி செல்வி மஞ்சரி கலாமோகன் கலைப்பாரம்பரியம் மிகுந்த குடும்பப் பின்னணியில் இருந்து வருவது சிறப்பு அம்சமாகும். இவரது பாட்டனாரின் தமையனார் குழந்தைவேலு இலங்கை வானொலியில் முதல்தர இசை வித்துவானாக திகழ்ந்தவராவார். ஓவியம், இசை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட பின்னணியுடன் கர்நாடக இசையில் கால் பதித்திருக்கும் மஞ்சரி கலாமோகன் ஸ்ரீமதி மனோரமா பிரசாத்தின் கீழ் பதினொரு ஆண்டுகள் கர்நாடக இசையைப் பயின்று பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது சமர்ப்பணம் என்ற இந்த  இசை நிகழ்வு ஒரு குருவினதும் ஆர்வம் மிகுந்த சிஷையினதும் கடினமான உழைப்பின் அறுவடை என்று கூறலாம்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற சனியன்று லண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.“இளம் பாடகி செல்வி மஞ்சரி கலாமோகன் கலைப்பாரம்பரியம் மிகுந்த குடும்பப் பின்னணியில் இருந்து வருவது சிறப்பு அம்சமாகும். இவரது பாட்டனாரின் தமையனார் குழந்தைவேலு இலங்கை வானொலியில் முதல்தர இசை வித்துவானாக திகழ்ந்தவராவார். ஓவியம், இசை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட பின்னணியுடன் கர்நாடக இசையில் கால் பதித்திருக்கும் மஞ்சரி கலாமோகன் ஸ்ரீமதி மனோரமா பிரசாத்தின் கீழ் பதினொரு ஆண்டுகள் கர்நாடக இசையைப் பயின்று பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது சமர்ப்பணம் என்ற இந்த  இசை நிகழ்வு ஒரு குருவினதும் ஆர்வம் மிகுந்த சிஷையினதும் கடினமான உழைப்பின் அறுவடை என்று கூறலாம்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற சனியன்று லண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

Continue Reading →