அன்புள்ள நவம் அங்கிள், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கில் நான் வந்து படப்பிடிப்புச் செய்தமைக்காக நீங்கள் அனுப்பிய நன்றிக் கடிதத்திற்குச் சும்மா “you are welcome ” என்று மட்டும் பதில் அனுப்ப மனம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வேண்டும் போல இருந்தது. அதனால்தான் சற்று பிந்திவரும் பதில் இது. முதலில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எம்முள் வாழ்ந்த ஒரு பெரியவரின் ஞாபகார்த்த நிகழ்சியைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு. அத்தோடு நீங்கள் எனக்குப் பிடித்தமான காரியத்தைத்தானே உதவியாகக் கேட்டீர்கள். செய்யாமல் விட்டிருப்பேனா? விழாவின் தொடக்கம் ஒரு புது மாதிரியான தொடக்கம். தேசியகீதம் மற்றும் தமிழ் வணக்கம் (நாட்டியத்துடன்) என்பன தன்பாட்டிலேயே நடந்தன. இவை நடைபெறும் போது எல்லோரும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இவை பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என நம்பியதற்கு நன்றி. இல்லாவிடின் வழமைபோல யாரோ ஒருவர் வந்து, “இப்போது இது நடைபெறும் எல்லோரும் எழுந்து…….” என்று மணிக் குரலில் அறிவிப்பு விட்டிருக்க வேண்டும். இதன் மூலம் பொன்னான நேரத்தையும் கொஞ்சம் சேமித்தீர்கள். குறிப்பிட்ட நேரத்தைவிட சற்று தாமதமாக தொடங்கியிருந்தும், சிலர் பிந்தியே வந்தனர்..பிந்தி வந்தவர்களில் சில பெரியவர்களும், இப்படியான நிகழ்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் என நாம் நினைக்கின்றவர்களும் அடங்கியிருந்த மாதிரி ஒரு உணர்வு!
நாளை ஜூன்(JUNE) மாதம், முதலாம் தேதி, வெள்ளிக்கிழமை காலம் சென்ற “தமிழர் மத்தியில்” நந்தா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து அஞ்சலிக் கூட்டமொன்று மாலை 6.00 மணியிலிருந்து…
3 – 06 – 2012, ஞாயிறு மாலை 7 மணி,
மத்திய அரிமா சங்க கட்டிடம் , காந்தி நகர், திருப்பூர்.
முன்னிலை: திருவாளர்கள் பொன்னுசாமி, பிரதீப்குமார், ரங்கசாமி (மத்திய அரிமா சங்க நிர்வாகிகள்)
இலையுதிர்காலம் 1946. குவாமிங்தாங் படைகளுக்கெதிராக ஒரு சிறு தாக்குதல் நடத்துவதென்று எங்கள் கடலோரப் போர்ப் படையின் தலைவர் முடிவெடுத்ததுமே, போர்ப்படைப் பிரிவினருக்கு உதவவென்று எங்கள் நாடகக் குழுவிலிருந்து சிலர் அனுப்பப் பட்டனர். நான் பெண் என்பதாலோ என்னவோ, முதலுதவிப் பிரிவில் என்னை நியமிக்க தளபதி இறுதிக் கட்டம் வரை காத்திருந்தார். அன்றைக்கு மழை பொழிந்திருந்தது. வானம் வெறித்திருந்தும் கூட சாலைகள் இன்னமும் வழுக்கலாகவே இருந்தன. இருபுறமும் பயிர்கள் பசுமையாகவும் புதியதாகவும் வெயிலில் மின்னின. காற்றில் ஈரம் கலந்திருந்தது. எதிரிகளின் தொடர் குண்டு வெடிப்புகள் மட்டும் இல்லாவிட்டால், கிராமத் திருவிழாவுக்குப் போகும் வழி போல் உணர்ந்திருப்போம். முன்னால் நடந்தான் தூதுவன். எங்கள் இருவருக்குமிடையில் ஒரு டஜன் கஜதூரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். என் கால்கள் கன்னிப் போயிருந்ததால், எவ்வளவு முயன்றும் என்னால் அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது. கொஞ்சம் நிற்கச் சொன்னால், என்னைக் கோழையென தீர்மானிப்பானோ என்ற பயம். தனியாக என்னால் முகாமைக் கண்டுபிடிக்கவும் முடியாது. என்னை எரிச்சலூட்டினான்.
எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் நான் வேறு வேறு காலங்களில் சந்தித்த, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறுபட்ட மனப்போக்கு கொண்ட நண்பர்கள் சிலரை பல ஆண்டுகளின் பின் தொறான்றோவில் சந்தித்தேன். எண்பதுகளில் ஈழமாணவர் பொதுமன்றத்தின் தமிழகச் செயல்பாட்டாளராக இருந்த வளவன் என்கிற யோகராஜா, பத்து ஆண்டுகளின் முன்பாக நண்பர் காண்டீபன் வீட்டில் எஸ்.வி.ராஜதுரை என்னுடன் தங்கியிருந்தபோது சந்தித்த நண்பர் சேனா, தாகம் மற்றும் நிருபம் போன்ற பத்திரிக்கைகளை நடத்திய நண்பர் நகுலேந்திரன் என்கிற கீரன் பத்தாண்டுகளின் முன்பு எனக்கு அறிமுகப்படுத்திய கோணேஸ்வரன், இலண்டனில் விம்பம் அமைப்பின் செயல்பாடுகளின்போது அறிமுகமான போல், தேசம்நெட் ஜெயபாலன் இல்லத்தில் சந்தித்த நண்பர் ரகுமான் ஜான் போன்றவர்களை மறுபடியும் நான் தொறான்ரோவில் சந்;தித்தேன். கனடாவின் முக்கியமான படைப்பாளிகளாக அறியப்பட்ட கவிஞர் செழியன், நாடகாசிரியர் ஜயகரன், சிறுகதையாசியர் டானியல் ஜீவா, நாவலாசிரியர் தேவகாந்தன், நாவலாசிரியரும் பதிவுகள் இணையத்தள ஆசிரியருமான வ..ந.கிரிதரன், கவிஞரும் சிறுகதையாசிரியருமான மெலிஞ்சி முத்தன், மொழிபெயர்ப்பாளரான மணிவேலுப்பிள்ளை, மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் சிறுகதையாசிரியருமான என்.கே.மகாலிங்கம், புகைப்படக் கலைஞரும் ஓவியருமான கருணா, ஆவணப்பட இயக்குனரான கனடா மூர்த்தி, கவிஞரும் கட்டுரையாசிரியருமான கவிஞர் தமிழ்நதி மற்றும் அவரது கணவர் ராஜகுமாரன், மற்றும் புதிய தலைமுறை எழுத்தாளரான அருண்மொழி வர்மன் போன்றவர்களையும் சந்தித்தேன்.
கனடாத் தமிழர்களுக்கு ‘தமிழர் மத்தியில் நந்தா’ என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரம். இவரை எனக்கு எனது மொறட்டுவைப் பல்கலைக்கழக நாட்களிலிருந்தே பழக்கம். அந்தப் பழக்கம் அண்மையில் இவரது மறைவு வரையில் தொடர்ந்தது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் நான் எனது கட்டடக்கலைத்துறைப் படிப்பினை ஆரம்பித்த சமயம் நந்தகுமார் கட்டடக்கலைத்துறையின் இறுதி ஆண்டு மாணவராகவிருந்தார். நான் எனது முதல் வருடத்தை பல்கலைக்கழக விடுதியிலிருந்துதான் கற்றேன். முதல் நாள் விடுதிக்குச் சென்றதிலிருந்து புதிய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்த ‘சீனியர்களான’ சிங்கள மாணவர்கள் அனைவராலும் இனவேறுபாடின்றிக் கடுமையான ‘ராகிங்’ எனப்படுகின்ற பகிடிவதைக்கு ஆளாக்கப்பட்டோம். அந்த வருடம் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டிருந்த போதும் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களால் அதனிடமிருந்து தப்ப முடியவில்லை. ஆனால் எமது ‘சீனியர்களான’ தமிழ் மாணவர்கள் மட்டும் மிகவும் கடுமை குறைந்த பகிடி வதைக்குப் புதிய மாணவர்களை உள்ளாக்கினார்கள். நான் முதன் முறையாக நந்தாவைச் சந்தித்ததே அவ்வகையான பகிடிவதை ஓன்றின் மூலம்தான். எனது விரிவுரைகள் தொடங்குவதற்கு முதல் நாள் வெளியில் எங்கோ சென்று விட்டு விடுதிக்குத் திரும்பியபோது அங்கு எங்களை எதிர்பார்த்து நந்தா காத்திருந்தார். விடுதியில் அப்போது தங்கியிருந்த புதிய மாணவர்களை குறிப்பாகக் கட்டடக்கலைத்துறை பயில வந்திருந்த மாணவர்களை அழைத்து இலேசாக வெருட்டலுடன் கூடிய கேள்விகளைக் கேட்டார். அன்றிலிருந்து தொடங்கிய எங்களது பழக்கம் அண்மையில் அவரது மறைவுவரை தொடர்ந்தது. நான் நகர அமைப்பு அதிகார சபையில் பணி புரிந்து கொண்டிருந்த சமயம் நந்தா மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று திரும்பி கொழும்பில் சுயமாகத் தொழில் செய்துகொண்டிருந்ததாகவும் ஞாபகம். அப்பொழுதிருந்தே சுயமாகத் தொழில் செய்வதில் முனைப்புள்ள ஒருவராகத்தான் நந்தா விளங்கினார்.
இணையத்தில் இறக்கைக்கட்டிப் பறந்து வந்த கவிதைத் தொகுப்பை கணனி முன் அமர்ந்து மிக பவ்வியமாய் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க தென்றலின் வேகத்தை எனக்குள்ளும் உணர ஆரம்பித்தேன். வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் கணிக்க முடியாது இந்தத் தென்றலின் வேகம் எத்தனை கிலோ (மனோ) மீற்றர் என்று. அத்தனை உணர்ச்சிப் பெருக்குடன் நூலின் எழுத்துக்களின் மேல் விழிகளை விரட்டும் வாசகர்களின் அடிமனதைத் தொட்டுச் சலனப்படுத்தும் கவிமலர்களால் கோர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பாய் தென்றலின் வேகம் தவழ்கிறது. முதலில் என் கண்களில் கவரப்பட்டு கருத்தைத் தொட்டக் கவிதை ‘கண்ணீரில் பிறந்த காவியம்!” அதில், முன்னேற்றப் பாதையிலேநான் எடுத்து வைத்தஒவ்வொரு அடியும்சறுக்கு மர ஏற்றச்சவாரியாகசாணேற முழஞ்சறுக்கிசலிப்பாகின! என தான் எடுக்கும் முயற்சியையும் சந்திக்கும் தோல்வியையும் விளக்கும் கவிஞரின் அந்தக் கவிதை இவ்வாறு முடிகிறது… கண்ணீரில் பிறந்ததோ காவியம்-என் கடமையில் நிலைத்ததோசீவியம்!!!
அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது. கதை மாந்தர்களை எம்மோடு உலவ விடுகின்ற உறவாக்கி விடுகின்ற திறமை ரவிந்திரனுக்கு வாய்த்திருக்கிறது. இது அவரது படைப்பிற்கு கிடைத்த வெற்றியெனலாம். வானொலி அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்ட முருகேசு ரவீந்திரன் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். தொழில் காரணமாக இருபது வருடங்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் அவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்தையே களமாக கொண்டு புனையப்பட்டுள்ளன. யாழ் மண் அதன் பாரம்பரியம் அதற்கே உரிய தனித்தமான சிறப்பியல்புகள் கதைகளில் உயிர் நாதமாக வேரோடி இருப்பதை படிப்பவர்கள் அறிய முடியும். 1990ற்கு பின் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. ரவிந்திரனுடய கதைகளில் காணப்படுகின்ற சிறப்பம்சம் அதனுடய எளிமை தன்மை ஆகும் வாழ்வியல் அனுபவங்களை ஆடம்பரமில்லாது இயல்பாக சித்தரித்துள்ளமை வாசகனை பாத்திரங்களின் ஒருவனாக அவனுக்கு மிகவும் நெருங்கியவனாக உணரச்செய்து விடுகின்றது. அதாவது எழுத்துக்களோடு ஓர் அகவயமான தொடர்பை ஏற்ப்படுத்தி விடுகிறது.
‘எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்’ என்று கூறும் எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவான tamilwritersathyanandhan என்னும் இணையத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்துகின்றோம். தனது மேற்படி வலைப்பதிவில் தனது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் மற்றும் நாவல் போன்ற பல படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார் சத்யானந்தன். அண்மையில் பதிவு செய்திருந்த ‘அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்’ என்னும் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்திருக்கின்றோம். மேற்படி தளமானது எழுத்தாளர் சத்யானந்தனின் படைப்புலகை அறிந்து கொள்வதற்குரிய நல்லதொரு தளம். இது போல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியமானதாகும். அவரது தளத்தில் அவரது ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.
அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
– சத்யானந்தன் –
30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது:
கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை
கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக்
கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்- உம்முடன்
கூடி இருப்பதுண்டோ?
அண்மையில் ‘டொராண்டோ’ வருகை தந்திருந்த எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் ‘ஈழத்து அரசியல் நாவல்’ என்னும் தலைப்பில் ஆய்வுரைகள் நிகழ்த்தியதாக அறிவித்திருந்தார்கள். உண்மையில் அவர் ஆற்றியதோ சமர்ப்பித்ததோ ஆய்வுரைகளல்ல; திறனாய்வுகளே. விமர்சனம் என்னும் வடமொழியின் தமிழ் வடிவமே திறனாய்வு. திறனாய்வுக்கும் ஆய்வுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை அறியாமல் பலர் இடம் மாறி அவற்றைப் பயன்படுத்தி வருவதை அவ்வப்போது அவதானித்திருப்பீர்கள். ஆய்வு என்பது ஒரு விடயத்தைப் பற்றிய தகவல்களை இயலுமானவரையில் திரட்டித் தொகுப்பது. அத்தொகுப்பின் இடையில், முடிவில் அவ்வப்போது தனது ஆய்வின் விளைவாக தான் அடைந்த, அறிந்த , புரிந்த விடயங்களைப் பற்றி கருத்துகளை, விமர்சனங்களை வைக்கலாம். அவ்விதம் வைப்பதில் தவறேதுமில்லை. இருந்தாலும் அந்த ஆய்வானது அந்த ஆய்வுக்கான விடயம் பற்றித் திரட்டிய தகவல்களைத் தொகுத்து உள்ளடக்கியிருக்க வேண்டும். அவ்விதமில்லாமல். ஒரு சில குறிப்பிட்ட படைப்புகளைப் பற்றி மட்டுமே அதனைப் படைத்தவர் தனது கருத்துகளை, முடிவுகளை முன்னெடுப்பாரானால் அது வெறும் திறனாய்வே. அதனைத்தான் யமுனா ராஜேந்திரனும் அண்மையில் டொராண்டோ வந்திருந்தபொழுது செய்திருந்தார். அவர் தனக்கு, தன் இலக்கியக் கோட்பாடுகளுக்கமைய ஏற்றுக்கொண்ட படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து அவை பற்றிய கருத்துகளை வழங்கியிருந்தார். ஆனால் ஆய்வென்பது காய்தல் உவத்தலின்றி செய்யப்பட வேண்டியதொன்று.