எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்: எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவு!

அன்னா ஹஸாரே‘எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்’ என்று கூறும் எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவான tamilwritersathyanandhan  என்னும் இணையத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்துகின்றோம். தனது மேற்படி வலைப்பதிவில் தனது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் மற்றும் நாவல் போன்ற பல படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார் சத்யானந்தன். அண்மையில் பதிவு செய்திருந்த ‘அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்’ என்னும் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்திருக்கின்றோம். மேற்படி தளமானது எழுத்தாளர் சத்யானந்தனின் படைப்புலகை அறிந்து கொள்வதற்குரிய நல்லதொரு தளம். இது போல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியமானதாகும். அவரது தளத்தில் அவரது ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.

அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்

– சத்யானந்தன் –

30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது:

கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை
கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக்
கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்- உம்முடன்
கூடி இருப்பதுண்டோ?

Continue Reading →

ஆய்வும் திறனாய்வும், ஆவணப்படுத்தலும், என்படைப்புகளும் பற்றி….

 அமெரிக்கா மண்ணின் குரல்அண்மையில் ‘டொராண்டோ’ வருகை தந்திருந்த எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் ‘ஈழத்து அரசியல் நாவல்’ என்னும் தலைப்பில் ஆய்வுரைகள் நிகழ்த்தியதாக அறிவித்திருந்தார்கள். உண்மையில் அவர் ஆற்றியதோ சமர்ப்பித்ததோ ஆய்வுரைகளல்ல; திறனாய்வுகளே. விமர்சனம் என்னும் வடமொழியின் தமிழ் வடிவமே திறனாய்வு. திறனாய்வுக்கும் ஆய்வுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை அறியாமல் பலர் இடம் மாறி அவற்றைப் பயன்படுத்தி வருவதை அவ்வப்போது அவதானித்திருப்பீர்கள். ஆய்வு என்பது ஒரு விடயத்தைப் பற்றிய தகவல்களை இயலுமானவரையில் திரட்டித் தொகுப்பது. அத்தொகுப்பின் இடையில், முடிவில் அவ்வப்போது தனது ஆய்வின் விளைவாக தான் அடைந்த, அறிந்த , புரிந்த விடயங்களைப் பற்றி கருத்துகளை, விமர்சனங்களை வைக்கலாம். அவ்விதம் வைப்பதில் தவறேதுமில்லை. இருந்தாலும் அந்த ஆய்வானது அந்த ஆய்வுக்கான விடயம் பற்றித் திரட்டிய தகவல்களைத் தொகுத்து உள்ளடக்கியிருக்க வேண்டும். அவ்விதமில்லாமல். ஒரு சில குறிப்பிட்ட படைப்புகளைப் பற்றி மட்டுமே அதனைப் படைத்தவர் தனது கருத்துகளை, முடிவுகளை முன்னெடுப்பாரானால் அது வெறும் திறனாய்வே. அதனைத்தான் யமுனா ராஜேந்திரனும் அண்மையில் டொராண்டோ வந்திருந்தபொழுது செய்திருந்தார். அவர் தனக்கு, தன் இலக்கியக் கோட்பாடுகளுக்கமைய ஏற்றுக்கொண்ட படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து அவை பற்றிய கருத்துகளை வழங்கியிருந்தார். ஆனால் ஆய்வென்பது காய்தல் உவத்தலின்றி செய்யப்பட வேண்டியதொன்று.

Continue Reading →