கனடா: தம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து …..

தம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து தேடகமும் தோழமை அமைப்புகளும் இணைத்து விடுத்த கூட்டறிக்கையும் கண்டன கூட்டமும்! ஞாயிறு மே 6, 2012 மாலை 5 மணி.  அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.  விபரங்கள்…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”

வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளதுஇடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
நாள்: மே 11 & 12
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம்.

வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளது.

Continue Reading →

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

- வெங்கட் சாமிநாதன் -நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும்  கட்சிகளில்  மூத்ததுக்கு , முக்கிய  வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழி களுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை. இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும் ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன

Continue Reading →