தேடி எடுத்த கதை: அறிஞர் அ.ந.கந்தசாமி – ‘குடும்ப நண்பன் ஜில்’

அறிஞர் அ.ந.கந்தசாமிஅணமையில் இணையத்தில் கூகுள் தேடுபொறியில் ‘அ.ந.கந்தசாமி’ என்று உள்ளீடிட்டுத் தேடுதலை மேற்கொண்டபோது சிங்கப்பூர் தேசிய நூலகச் சபையின் இணையத்தளமும் பெறப்பட்ட பதில்களிலொன்றாகவிருந்தது. அதனை அழுத்தி சிங்கப்பூர் தேசிய நூலக சபையின் இணையத்தளத்திற்குச் சென்றபோது அ.ந.கந்தசாமியின் சிறுகதையொன்று, ‘குடும்ப நண்பன் ஜில்’,  நுண்சுருள் மூலம் சேமிக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்தது. அந்தக் குறிப்பில் கருத்துச் சொல்லும் பகுதியில் அச்சிறுகதையினை எவ்விதம் எடுக்கலாம் என்பது பற்றிய எனது எண்ணங்களைப் பதிவு செய்திருந்தேன். என்ன ஆச்சரியம்! சில மணித்தியாலங்களீலேயே அந்நூலக சபையின் நூலகர்களிலொருவரான சுந்தரி பாலசுப்பிரமணீயத்திடமிருந்து மின்னஞ்சலொன்று என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது. அதில் அவர் நூலக சபையின் இணையத் தளத்திலுள்ள பத்திரிகைகளில் தமிழ் முரசு பத்திரிகையைத் தெரிவு செய்து, அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேற்படி ‘குடும்ப நண்பன் ஜில்’ என்னும் சிறுகதையினை வாசிப்பதற்கான வழிமுறைகளை விளக்கியிருந்தார். அறிஞர் அ.ந.கந்தசாமி எழுத்தினை ஆயுதமாகப் பாவித்துப் போராடிய மக்கள் எழுத்தாளர். இக்கதையும் அதனையே புலப்படுத்தும். இலங்கைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட சிறுகதையிது. இதுவரை இச்சிறுகதையினைப் பற்றி யாரும் பேசிக் கேட்டதேயில்லை.  இச்சிறுகதையினைப் பெற முடிந்ததற்காக சிங்கப்பூர் தேசிய நூலக சபைக்கும் மிகவும் நன்றி. சிங்கப்பூர் தேசிய நூலக சபையின் முன்மாதிரியைப் பின்பற்றி ஏனைய நூலகங்களும் , இணையத்தின் மூலம் இவ்விதமாகப் படைப்புகளை வாசிப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தால் நல்லது. இவ்விதமாக அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பல பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பரவிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் சேகரித்து வெளிக்கொணரவேண்டும். அதுவே நாம் அவருக்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடன். – ஆசிரியர்  –

Continue Reading →

‘மண் மறவா மனிதர்கள்” அறிமுகவிழா – சென்னை – யாழ்ப்பாணம்

ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவன் அவர்களின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அறிமுகவிழா அண்மையில் (15 – 04 – 2012) சென்னை ‘இக்சா” மையத்தில் (ICSA CENTRE) நடைபெற்றது.  பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘கலைமாமணி” வி. கே. ரி. பாலன் நூலினை வெளியிட்டுவைக்க எழுத்தாளர் – சட்டத்தரணி கே. நடராசன் பெற்றுக்கொண்டார். கவிஞர் பச்சியப்பன்ää திரு பாஸ்கர்ää கவிஞர் விஜேந்திராää கவிஞர் சொர்ணபாரதி, கவிஞர் யாழினி முனுசாமி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். கலைமாமணி வி. கே. ரி. பாலன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கவிஞர் யாழினி முனுசாமியின் ‘மோகினியுடனான சாத்தானின் உரையாடல்” என்ற நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. வி. ரி. இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார். ‘மண் மறவா மனிதர்கள்” நூலின் வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் மாநகரிலும்ää அறிமுக விழாக்கள் அண்மையில் கொழும்பில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையிலும், யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

பயணம்: கல்தோன்றி மண் தோன்றாத காலம்

கல்தோன்றி மண் தோன்றாத காலம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் எனக்கு  மிகவும் சமீபத்தில் அதுவும் நியுசிலாந்து தேசத்தில்தான் தெரிந்தது. நியுசிலாந்தில் பெரிய நகரமான ஓக்லண்ட் நகரத்துக்கு அருகே உள்ள சிறுதீவின்  பெயர் றான்ஜிரோரோ ( Rangitoto)  முக்கால் மணித்தியாலம் ஓக்லண்டில் இருந்து சிறிய கப்பலில் போனால் இந்தத் தீவுக்கு சென்று விடலாம.; இந்தத் தீவு 600 வருடங்களுக்கு முன்பு கடலில் இருந்து எரிமலை பொங்கி எழுந்ததால் உருவானது. எரிமலைக் குழம்புகள் கரிய நிறத்தில் கல்லாகி இருக்கின்றன. தற்பொழுது இந்தத் தீவில் மரங்கள் முளைத்துள்ளன.  ஆனால் புற்கள் இன்னும் இல்லை. புல் வளர்வதற்குத் தேவையான மண் அங்கு இன்னும் உற்பத்தியாகவில்லை.கல்தோன்றி மண் தோன்றாத காலம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் எனக்கு  மிகவும் சமீபத்தில் அதுவும் நியுசிலாந்து தேசத்தில்தான் தெரிந்தது. நியுசிலாந்தில் பெரிய நகரமான ஓக்லண்ட் நகரத்துக்கு அருகே உள்ள சிறுதீவின்  பெயர் றான்ஜிரோரோ ( Rangitoto)  முக்கால் மணித்தியாலம் ஓக்லண்டில் இருந்து சிறிய கப்பலில் போனால் இந்தத் தீவுக்கு சென்று விடலாம.; இந்தத் தீவு 600 வருடங்களுக்கு முன்பு கடலில் இருந்து எரிமலை பொங்கி எழுந்ததால் உருவானது. எரிமலைக் குழம்புகள் கரிய நிறத்தில் கல்லாகி இருக்கின்றன. தற்பொழுது இந்தத் தீவில் மரங்கள் முளைத்துள்ளன.  ஆனால் புற்கள் இன்னும் இல்லை. புல் வளர்வதற்குத் தேவையான மண் அங்கு இன்னும் உற்பத்தியாகவில்லை.

Continue Reading →

‘ஜீவநதி’ அவுஸ்திரேலியா சிறப்பிதழ் மதிப்பாய்வு

‘ஜீவநதி’ அவுஸ்திரேலியா சிறப்பிதழ் மதிப்பாய்வுஅவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக இயங்கியவாறு வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 12 ஆவது ஒன்றுகூடலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி சிறப்பிதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் போர் நெருக்கடி முடிவுக்கு வந்தபின்னர் தமிழ்ப்பிரதேசமான யாழ். மண்ணிலிருந்து இப்படியான  வெளிநாட்டுக்கென , புகலிடத்தமிழருக்கென ஒரு சிறப்பிதழ் வெளியாவது மிக முக்கியமான தகவல். அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், ஏற்கனவே நடத்தியிருக்கும் எழுத்தாளர் விழாக்களில் காலத்துக்குக்காலம் நூல், மலர் வெளியீடுகள் ஈழத்துச்சிறப்பிதழ் அறிமுகங்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வெளியாகும் மல்லிகை மாத இதழின் அவுஸ்திரேலிய சிறப்பிதழ் 2001 ஆம் ஆண்டும், கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் மாத இதழ் 2004 ஆம் ஆண்டும் அவுஸ்திரேலியா சிறப்பிதழ்களை வெளியிட்டு இங்கு வாழும் படைப்பிலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஊக்கத்தை வழங்கியிருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரி என்றும் சொல்லலாம்.

Continue Reading →