1.
அவுஸ்திரேலியாவில் வருடக்கடைசி – கோடைகால விடுமுறை. மிக நீண்டதாக இருக்கும். பள்ளிக்கூடங்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். வேலையில் இருந்து எனக்கு மூன்று கிழமைகள் விடுமுறை கிடைக்கும். பாடசாலை விடுமுறை விட இன்னமும் இரண்டு கிழமைகள்தான் இருந்தன. காலையில் மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் போது, வீதியில் பெரியதொரு கங்காரு இறந்து கிடப்பதைப் பார்த்தோம். வாகனங்கள் அதை விலத்திப் போய்க் கொண்டிருந்தன.
தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. முதல் சிந்தனைப்பள்ளி தியோடர் பாஸ்கரனுடையது. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் முன்னோடி ஆளுமை. அவரது பார்வை தமிழ்ச் சினிமா காட்சிரூப ஊடகமாக வளராமல் போனதற்கான தமிழ் சமூகக் கலை வரலாற்றுக் காரணங்களையும், அரசியல் காரணங்களையும் விரித்துச் சொல்வதாகவே இருக்கிறது. வரலாற்றுரீதியில் தமிழ் சினிமாவில் பேச்சு, இசை போன்றவை பெரும் இடம், அதனோடு வேறு வேறு காலங்களில் தமிழ் சினிமா மொழியில் நேர்ந்து வந்திருக்கும் வடிவ மாற்றங்களையும் நுட்பங்களையும் அவர் அவதானித்துப் பதிவு செய்கிறார்.
தியோடர் பாஸ்கரன் முன்வைக்கிற காட்சிரூப சினிமாவை உருவாக்குவது எனும் தேடல் தமிழ் மொழியில் பிரச்சாரம் தவிர்ந்த யதார்த்த மொழி கொண்ட ஐரோப்பிய பாணி சினிமாவை, சமூக விமர்சன சினிமாவை, தமிழ் சூழலுக்கு ஏற்ற நவ யதார்த்த சினிமாவை உருவாக்குவது எனும் தேடலுடன் தொடர்பு பட்டது. வங்கத்திலும் கேரளத்திலும் எழுந்த சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் முன்வைத்த புதிய சினிமாவை தமிழிலும் விளைவது தொடர்பான தேடல் இது.
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு ,மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய காலகட்டம் அப்போது அவர் காமராஜர் காலகட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த விசயங்களை நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போது இணைய இதழ்களில் வெளி வந்தது. அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது.