கனடாத் தமிழர்களுக்கு ‘தமிழர் மத்தியில் நந்தா’ என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரம். இவரை எனக்கு எனது மொறட்டுவைப் பல்கலைக்கழக நாட்களிலிருந்தே பழக்கம். அந்தப் பழக்கம் அண்மையில் இவரது மறைவு வரையில் தொடர்ந்தது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் நான் எனது கட்டடக்கலைத்துறைப் படிப்பினை ஆரம்பித்த சமயம் நந்தகுமார் கட்டடக்கலைத்துறையின் இறுதி ஆண்டு மாணவராகவிருந்தார். நான் எனது முதல் வருடத்தை பல்கலைக்கழக விடுதியிலிருந்துதான் கற்றேன். முதல் நாள் விடுதிக்குச் சென்றதிலிருந்து புதிய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்த ‘சீனியர்களான’ சிங்கள மாணவர்கள் அனைவராலும் இனவேறுபாடின்றிக் கடுமையான ‘ராகிங்’ எனப்படுகின்ற பகிடிவதைக்கு ஆளாக்கப்பட்டோம். அந்த வருடம் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டிருந்த போதும் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களால் அதனிடமிருந்து தப்ப முடியவில்லை. ஆனால் எமது ‘சீனியர்களான’ தமிழ் மாணவர்கள் மட்டும் மிகவும் கடுமை குறைந்த பகிடி வதைக்குப் புதிய மாணவர்களை உள்ளாக்கினார்கள். நான் முதன் முறையாக நந்தாவைச் சந்தித்ததே அவ்வகையான பகிடிவதை ஓன்றின் மூலம்தான். எனது விரிவுரைகள் தொடங்குவதற்கு முதல் நாள் வெளியில் எங்கோ சென்று விட்டு விடுதிக்குத் திரும்பியபோது அங்கு எங்களை எதிர்பார்த்து நந்தா காத்திருந்தார். விடுதியில் அப்போது தங்கியிருந்த புதிய மாணவர்களை குறிப்பாகக் கட்டடக்கலைத்துறை பயில வந்திருந்த மாணவர்களை அழைத்து இலேசாக வெருட்டலுடன் கூடிய கேள்விகளைக் கேட்டார். அன்றிலிருந்து தொடங்கிய எங்களது பழக்கம் அண்மையில் அவரது மறைவுவரை தொடர்ந்தது. நான் நகர அமைப்பு அதிகார சபையில் பணி புரிந்து கொண்டிருந்த சமயம் நந்தா மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று திரும்பி கொழும்பில் சுயமாகத் தொழில் செய்துகொண்டிருந்ததாகவும் ஞாபகம். அப்பொழுதிருந்தே சுயமாகத் தொழில் செய்வதில் முனைப்புள்ள ஒருவராகத்தான் நந்தா விளங்கினார்.
இணையத்தில் இறக்கைக்கட்டிப் பறந்து வந்த கவிதைத் தொகுப்பை கணனி முன் அமர்ந்து மிக பவ்வியமாய் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க தென்றலின் வேகத்தை எனக்குள்ளும் உணர ஆரம்பித்தேன். வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் கணிக்க முடியாது இந்தத் தென்றலின் வேகம் எத்தனை கிலோ (மனோ) மீற்றர் என்று. அத்தனை உணர்ச்சிப் பெருக்குடன் நூலின் எழுத்துக்களின் மேல் விழிகளை விரட்டும் வாசகர்களின் அடிமனதைத் தொட்டுச் சலனப்படுத்தும் கவிமலர்களால் கோர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பாய் தென்றலின் வேகம் தவழ்கிறது. முதலில் என் கண்களில் கவரப்பட்டு கருத்தைத் தொட்டக் கவிதை ‘கண்ணீரில் பிறந்த காவியம்!” அதில், முன்னேற்றப் பாதையிலேநான் எடுத்து வைத்தஒவ்வொரு அடியும்சறுக்கு மர ஏற்றச்சவாரியாகசாணேற முழஞ்சறுக்கிசலிப்பாகின! என தான் எடுக்கும் முயற்சியையும் சந்திக்கும் தோல்வியையும் விளக்கும் கவிஞரின் அந்தக் கவிதை இவ்வாறு முடிகிறது… கண்ணீரில் பிறந்ததோ காவியம்-என் கடமையில் நிலைத்ததோசீவியம்!!!
அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது. கதை மாந்தர்களை எம்மோடு உலவ விடுகின்ற உறவாக்கி விடுகின்ற திறமை ரவிந்திரனுக்கு வாய்த்திருக்கிறது. இது அவரது படைப்பிற்கு கிடைத்த வெற்றியெனலாம். வானொலி அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்ட முருகேசு ரவீந்திரன் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். தொழில் காரணமாக இருபது வருடங்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் அவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்தையே களமாக கொண்டு புனையப்பட்டுள்ளன. யாழ் மண் அதன் பாரம்பரியம் அதற்கே உரிய தனித்தமான சிறப்பியல்புகள் கதைகளில் உயிர் நாதமாக வேரோடி இருப்பதை படிப்பவர்கள் அறிய முடியும். 1990ற்கு பின் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. ரவிந்திரனுடய கதைகளில் காணப்படுகின்ற சிறப்பம்சம் அதனுடய எளிமை தன்மை ஆகும் வாழ்வியல் அனுபவங்களை ஆடம்பரமில்லாது இயல்பாக சித்தரித்துள்ளமை வாசகனை பாத்திரங்களின் ஒருவனாக அவனுக்கு மிகவும் நெருங்கியவனாக உணரச்செய்து விடுகின்றது. அதாவது எழுத்துக்களோடு ஓர் அகவயமான தொடர்பை ஏற்ப்படுத்தி விடுகிறது.