அன்புள்ள நவம் அங்கிள், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கில் நான் வந்து படப்பிடிப்புச் செய்தமைக்காக நீங்கள் அனுப்பிய நன்றிக் கடிதத்திற்குச் சும்மா “you are welcome ” என்று மட்டும் பதில் அனுப்ப மனம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வேண்டும் போல இருந்தது. அதனால்தான் சற்று பிந்திவரும் பதில் இது. முதலில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எம்முள் வாழ்ந்த ஒரு பெரியவரின் ஞாபகார்த்த நிகழ்சியைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு. அத்தோடு நீங்கள் எனக்குப் பிடித்தமான காரியத்தைத்தானே உதவியாகக் கேட்டீர்கள். செய்யாமல் விட்டிருப்பேனா? விழாவின் தொடக்கம் ஒரு புது மாதிரியான தொடக்கம். தேசியகீதம் மற்றும் தமிழ் வணக்கம் (நாட்டியத்துடன்) என்பன தன்பாட்டிலேயே நடந்தன. இவை நடைபெறும் போது எல்லோரும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இவை பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என நம்பியதற்கு நன்றி. இல்லாவிடின் வழமைபோல யாரோ ஒருவர் வந்து, “இப்போது இது நடைபெறும் எல்லோரும் எழுந்து…….” என்று மணிக் குரலில் அறிவிப்பு விட்டிருக்க வேண்டும். இதன் மூலம் பொன்னான நேரத்தையும் கொஞ்சம் சேமித்தீர்கள். குறிப்பிட்ட நேரத்தைவிட சற்று தாமதமாக தொடங்கியிருந்தும், சிலர் பிந்தியே வந்தனர்..பிந்தி வந்தவர்களில் சில பெரியவர்களும், இப்படியான நிகழ்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் என நாம் நினைக்கின்றவர்களும் அடங்கியிருந்த மாதிரி ஒரு உணர்வு!
நாளை ஜூன்(JUNE) மாதம், முதலாம் தேதி, வெள்ளிக்கிழமை காலம் சென்ற “தமிழர் மத்தியில்” நந்தா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து அஞ்சலிக் கூட்டமொன்று மாலை 6.00 மணியிலிருந்து…