நோர்வே: மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்!

இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக்  கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள்  இனப்படுகொலை நாள் (Holacaust)  என ஆண்டுதோறும் அனுட்டித்து  வருகிறார்கள்.  முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின்  பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல் எழுச்சி நிகழ்வாக இடம்பெறவிருக்கின்றது.

நேரம்: மாலை 5:00 மணிக்கு
காலம்: மே 18ம்
இடம்:   OSLO S ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன்  முடிவடையவுள்ளது.

Continue Reading →

இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா சுவாசிக்கப்படும் நிகழ்வுகள்.

இடம் – கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் ( சங்கரப் பிள்ளை மண்டபம் )
திகதி – 13.05.2012
நேரம் -காலை 09.30 மணி
மதிப்போர்கள் வரலாம் எங்களை மகிழ்வித்துச் செல்லலாம். அழைப்பது ‘தடாகம்” கலை இலக்கிய வட்டம்.

Continue Reading →

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – 2

அத்தியாயம் இரண்டு: தூண்டிற் புழுவினைப் போல்….

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

‘என் அவயங்களோ சக்தி குன்றிப் போயின.
என் உதடுகளோ ஈரமிழந்து போயின.
என் உடல் நடுங்குகின்றது.
என் கைகளை விட்டு சக்திமிக்க ஆயுதமும் நழுவிப்
போகின்றது.
என் மனமோ குழம்பிப் போயுள்ளது.
என்னால் நிலையாக நிற்கவே முடியவில்லை.
என் செய்வேன். என் செய்வேன்.
பரந்தாமா!
அனர்த்தங்களால் விளையும் அறிகுறிகள் தெரிகின்றன.
போர்க்களத்தே என் உறவினரை
என் நண்பரை, என் ஆசானைக் கொல்வதால்
என்ன பயன்? என்ன பயன்?
பாதை காட்டுவாய் பரந்தாமா?
பாதை காட்டுவாய்.’  – அருச்சுனன் (பாரதியின் ‘பகவத் கீதை’யிலிருந்து) –

 பார்க்கில் சனநடமாட்டம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்தது. வழக்கமான அதே மோன நிலையில் ஆழ்ந்த போனபடி, சூழலுக்குள் உறைந்து விட்டவனாக அவன். முழுநிலவின் தண்மையான ஒளிச்சிதறல்கள் இதமாகப் பரவிக் கிடந்தன. மனதை நன்கு ஒரு நிலையில் நிறுத்தியவளாக மெல்ல எழுந்து அவனருகே சென்றாள். அவள் வந்ததையோ, அவனருகே நின்றபடி அவனையே வைத்த கண் வாஙகாது பார்த்தபடி அவள் நிற்பதையோ அவன் கண்டு கொள்ளவேயில்லை. 

Continue Reading →

பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவரங்கு 2012 – கனடா

அன்புடையீர்,  பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த தினத்தை நினைவூட்டிக் கனடாவில் பேராசிரியரைக் கனம் பண்ணும் வகையில், சிறப்புப் பேருரைகளுடன் கலை நிகழ்வுகளும், பேராசிரியர் பங்கேற்ற இரு…

Continue Reading →

ஈழத்தமிழர்களும், சுய மீளாய்வும்

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழிநுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர்.  ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர்.  விடுதலைப் புலிகளின் அமைப்பு உருவான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர்களிலொருவர். இவற்றின் காரணமாக இலங்கைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகியவர். பின்னர் அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வந்த சமயத்திலும் பதிப்புத் துறை, இலக்கிய அமர்வுகளை நடாத்துவதிலும் தன் கவனத்தைத் திருப்பினார். தனது ஆசியான் பதிப்பகம் மூலம் ஈழத்துக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார்.  கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, ‘யாழ்ப்பாண வைபவமாலை’, ‘புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு’, ‘எமர்ஜென்சி 58’ மற்றும் தராகியின் ‘Eluding Peace’ ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களிலொருவராகவும் இவர் கருதப்படுகின்றார்.

Continue Reading →

உலகத் தமிழர் பேரவை ஊடக அறிக்கை: தோழர், அமைச்சர் றோய் படையாட்சிக்கு எமது கண்ணீர் வணக்கம்

தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்– மே 8, 2012   – தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன்  தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”

Continue Reading →

மீள்பிரசுரம் (நேர்காணல்) : முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

பாஷண அபேவர்த்தனநீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?

முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:

Continue Reading →

பிரெஞ்சு மொழியில் தமிழ்ப் படைப்புகள்!

நாகரத்தினம் கிருஷ்ணாஅன்புடையீர், இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பதிப்பிக்கும் முடிவு அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது: எனது அமைப்பு மூலம் தொகுப்பை வெளியிட இயலாது. இந்தியப்புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கவேண்டாமென அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக வெளியிட நிதி ஆதாரமில்லை. தவிர அப்படி வெளியிட்டாலும் நண்பர்களுக்கு இலவசாமக கொடுப்பதன்றி வேறு பயன்களை எதிர்பார்க்கமுடியாது. எனவே பிரெஞ்சு பதிப்புலகத்தையன்றி வேறு உருப்படியான வழிகள் தற்போதைக்கு இல்லை.

Continue Reading →

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – 1

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் …

‘தோர்ன்கிளிவ் பார்க்’…  ‘டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில்  அமைந்திருந்த பகுதி. ‘ஷாப்பிங் மால்’ , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், ‘டொராண்டோ டவுண் டவு’னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி.  அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான்.  அவனது மாமா மகனின் ‘அபார்ட்மென்ட்’. 

Continue Reading →

அன்புடன் நிலாவிடமிருந்து …

இரண்டு மாதம் இந்தியாவில் நான் இருந்தேன். முதல் மாதம் கேரளாவில் வைத்தியம். அதன் பின் தமிழ்நாடு போய் அருமை நண்பர்களை சந்தித்தேன். என்னைக் கேரளாவிலும் என் நண்பர்கள்…

Continue Reading →