அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து வருவது, தண்ணீர் கொண்டு வருவது, மில்லுக்கு தானியங்களைக் கொண்டு சென்று, அரைத்துக் கொண்டு வந்து சமைப்பது, ஐந்து பிள்ளைகளையும் பராமரிப்பது என அவளது கணவனது வேலைகளுக்கும் மேலதிகமாக அவளால் செய்ய வேண்டியிருந்தது. அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவன் எவ்வாறான மனிதனொருவன்? இல்லாவிட்டால் கணவனொருவன்? அவனுக்கு கடைத்திண்ணை வீட்டைப் போல ஆகிவிட்டிருந்தது. அவன் தனது பகல் முழுவதையும், இரவில் பெரும்பகுதியையும் கடைத் திண்ணையில்தான் கழிக்கிறான். வீட்டுக்கு வருவதென்பது உறங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டும்தான். அவள் அவனை மறந்துவிட முயற்சித்தாள். ஆனாலும் இரவில் கனவுகளுக்கிடையில் அவன் அவளது மனதில் வந்து ஓய்ந்திருந்தான்.
நியமனக் கடிதத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறிய சுந்தரம்பிள்ளை கணக்காளரிடம் ‘உங்களது கழிப்பறையை பாவிக்க முடியுமா’ எனக்கேட்டான். ‘இந்த கொரிடேரின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது கதவு என்று அவர் சொல்லியபோது, அங்கு சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலிங்வூட் வந்தது. ‘என்ன இங்கேயும் வருகிறாய்? எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் வூட் மிக உரிமையுடன் உள்ளே வந்துவிட்டது. அது குளிக்கும் அறையும் கழிப்பறையும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்து.கொலிங்வூட் குளிக்கும் அறையில் தங்கிவிட்டது. சுந்ததரம்பிள்ளை கழிப்பறைக்கு சென்று பூனைதானே என கதவை சாத்தாமல் கழிப்பாசனத்தில் இருந்து கொண்டு கீழே கிடந்த சஞ்சிகைகளை பார்த்த போது, அவை ஆறு மாதம் கடந்த பிளே போய் மகசீன்கள் . பக்கங்களை புரட்டி பார்த்த போது அதில் உள்ள அழகிகளின் அவயவங்களின் காட்சி, உடலில் உள்ள இரத்தம் வேகமாக கீழ் நோக்கி ஓடி மனதை மேலே ஒரு கற்பனை உலகத்திற்கு தள்ளிச் செல்ல உந்தியது. சில பக்கங்களை புரட்டவைத்தது. இப்படியான அழகிகளை எங்குதான் தேடிப்பிடிக்கிறார்களோ? இப்படிப் போனால் சரி வராது என மனதின் ஓட்டத்திற்கு சிவப்பு விளக்கை காட்டிவிட்டு, அந்த மகசீன்களை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு எழுந்து கையை கழுவிய சுந்தரம்பிள்ளை, கொலிங்வூட்டை பார்த்தான். அந்த குளிப்பறையின் ஒரு மூலையில் பிளாஸ்ரிக் தட்டில் சிறிய கல்லுகள் போடப்பட்டிருந்த தட்டில் குந்தி இருந்து விட்டு தனது கழிவுகளை மூடியது.
மார்ச் 5, 2013- சனாதிபதி மகிந்த இராசபக்சே இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் உண்மை அதுவல்ல. பல சகாப்தமாக நீடித்து வரும் இனச் சிக்கலைத் தீர்த்து வைக்க மகிந்த இராசபக்சே தவறியுள்ளதால் புது தில்லி அவரோடு கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. அய்க்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தனாயக்கா கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது இராசபக்சே அரசு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது. அரசிற்குள் செயற்படும் தீவிரவாத சக்திகள் சிறுபான்மை இனத்தவர்களுக்குப் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன. சனாதிபதி இராசபக்சேயின் கூற்றுப்படி ‘சிறீலங்காவில் சிறுபான்மை என்ப்படுபவர் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் சம உரிமை படைத்தவர்கள்’ என்பது வெறும் பசப்புரை ஆகும். போரினால் இடப்பெயர்வுக்கு உட்பட்ட பெரும்பான்மை மக்கள் அவர்களது சொந்த வீடுவாசல்களில் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை. அதே சமயம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான காணிகளை ஒரு குழு அபகரிக்கிறது. அந்தக் குழுவுக்கு அரசின் ஆதரவு இருப்பது வெள்ளிடமலை ஆகும். முஸ்லிம்களும் தங்கள் மதத்தை அனுட்டிப்பதற்காக தொல்லைப் படுத்தப் படுகிறார்கள் என அத்தநாயக்கா குறிப்பிட்டார்.
‘ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்’ என்பது போல் அண்மையில் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை அமைந்திருப்பதைக் கண்டு இந்திய சமுதாயம் அதிச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது. 56 ஆண்டுகளாக ஆட்சி புரியும் பாரிசான் ஆட்சியில் இந்தியர்களின் வாழ்க்கை உயரவில்லை. 2008 ஆம் ஆண்டு இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பக்கத்தானுக்கு ஓட்டளித்த பின்பு ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றியது, ஏழ்மையிலும் சமூகப்பிரச்சனைகளிலும் மூழ்கித்தவிக்கும் இந்திய சமுகத்தைக் கைதூக்கி விடுவார்கள் என்ற பெரிய நம்பிக்கையில் மண்விழுந்ததுதான் மிச்சம். கடந்த, 56 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாரிசான், 5 ஆண்டுகளாக நான்கு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாக்கத்தான் கட்சியும் நயவஞ்சகத்துடன்,இந்தியர்களின் ஓட்டுகளைப் பெறுவதில் மட்டுமே குறியாய் இருந்தனர் என்பதை அறிய மிகவும் வருத்தமாக இருக்கிறது.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியர்கள் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில், பச்சைக்காடாக இருந்த இந்நாட்டை,வளப்படுத்துவதில் இந்தியர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இந்தியர்களின் இரத்த வியர்வில் உருவான இந்நாட்டு மண்ணுக்கு இலட்சக் கணக்கில் இரையாகிப் போன நம் இந்தியர்களின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுவிட்டது.