தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்

தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்இன்றைய தினம் (11.02.2013) பவள விழா அகவையைத் தொட்டு நிற்கும் கவிஞர் ஏ.இக்பால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாததொரு ஆளுமை என்பது யாவரும் அறிந்ததே. அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மேல் மாகாணம் தர்கா நகரை புகுந்தகமாகக் கொண்டு அங்கு இற்றைவரை வாழ்ந்து வருகிறார். இலக்கியத்துறையில் தன்னை நிலைநாட்டி ஜாம்பவானாகத் திகழும் அதே நேரத்தில் கல்விப் புலத்தில் அவர் பணி இரண்டாம் பட்சமானதல்ல. அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் படிக்கும்போது அங்கு பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எம்.வை.எம். முஸ்லிம், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோரால் இனம் காணப்பட்டு வழி நடத்தப்பட்டார். அங்கு “கலாவள்ளி’ என்ற கையெழுத்துச் சஞ்சிகை இவர் பொறுப்பில் நடத்தப்பட்டது. ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர் தமிழ்ப் பாட நூல் ஆலோசனை சபை உறுப்பினராக, இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராக விடுவிப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, கல்விக் கல்லூரி தமிழ்ப் பிரிவு போதனாசிரியராக பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

Continue Reading →

கவிதை: அ.ந.க

[ ஏ.இக்பாலின் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய கவிதையொன்று அ.ந.க என்ற தலைப்பில் மல்லிகை சஞ்சிகையின் ஆகஸ்ட் 1969 இதழில் வெளிவந்திருந்தது. அதனை எமக்கு அனுப்பிய எழுத்தாளர் மேமன்கவி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி. – பதிவுகள்]

அறிஞர் அ.ந.கந்தசாமி
இன்று இலங்கையி லேறிப் பொலிந்திடும்
இலக்கியம் யாவினுக்கும்
நன்று தெளிவினை நாட்டிலாக்கிடும்
நற்றமிழ்ப் பத்திரிகைத்
தொண்டுட னேறிய தீரபுருஷராய்த்
திகழ்ந்து தமிழ் வளர்த்த
பண்டிதனல்லன்; பட்டமே பெற்றிடாப்
படித்தவன் கந்தசாமி.

Continue Reading →