பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் ‘பிரஞ்சுப் புரட்சி’ (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)!

பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் 'பிரஞ்சுப் புரட்சி' (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)!   

பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் ‘பிரஞ்சுப் புரட்சி’ (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)! 

Continue Reading →

(6) – சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில் அந்தக் கட்டத்தை நினைத்துப் பார்த்தால், அப்படியெல்லாம் “ஒருத்தர் இடம் கொடுத்தால் எதையும் எழுதிவிடுவதா?” என்று கேட்டாரே செல்லப்பா, அந்த மனநிலையைக் கொடுத்ததே அவரும் அவரது எழுத்து பத்திரிகையும் தான். அதற்கும் மேல், எங்கள் மனம் நடமாடிய அந்தச் சின்ன இலக்கிய சூழலில் இதைத் தானே நான் கற்றுக்கொண்டேன். எழுத்து, இலக்கிய வட்டம், அதைத்தொடர்ந்து தேவசித்திர பாரதியின் ஞானரதம் எல்லாம் என்னிடம், மனம் விட்டு எந்தத் தடையும் உணராது பேசும் எழுதும் உணர்வு கொண்டவர்களிடம் இதைத் தானே எதிர்பார்த்தது. வேறு கால கட்டங்களில் எழுத்து பத்திரிகையும் தோன்றியிருக்காது. அங்கு ஒரு செல்லப்பாவும் எங்கள் முன் இருந்திருக்க மாட்டார். செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.

Continue Reading →

கடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல்: கடைசிவேரின் ஈரம்!கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம். உசனார் தொரை என்பவரிடம் வேலை செய்யும் ரகீம், தனது மகன் தஸ்லீமின் உயர்கல்விக்காக பணவுதவி கேட்கின்றார். தன்னிடம் தொழில்பார்க்கும் ஒருவனின் மகன், பட்டணத்தில் போய் உயர்படிப்பு படிப்பதா என்ற இளக்காரம் உசனார் தொரைக்கு. எனவே தஸ்லீமையும் வயலில் வேலைக்கமர்த்திக் கொண்டால் நல்லது என மனிதாபிமானம் கொஞ்சமுமின்றி ரகீமிடம் கூறுகின்றார். ரகீமுக்கு அவமானம் ஒரு புறம். ஆற்றாமை மறுபுறம். எனவே பேசாமல் வந்துவிடுகிறார்கள். அதையறிந்த தஸ்லீமின் தாய், தான் இத்தனைக்காலம் சேமித்து வந்த கொஞ்சப் பணத்தைக் கொடுத்தும், இடியப்பம் விற்றும் மகனை பட்டணம் அனுப்புகின்றனர். அங்கு சென்ற தஸ்லீமுக்கு நல்லதொரு நண்பன் கிடைக்கின்றான். நண்பனின் தந்தையின் உதவியுடன்; படித்து தஸ்லீம் வக்கீல் ஆகின்றான்.

Continue Reading →

அசோகனின் வைத்தியசாலை – 5

அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. நோயல் நடேசன்அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘  எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது ‘நீ தானா அந்த புது இந்திய வைத்தியர்’ என கேட்டு முகத்தை திருப்பியது.  சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டு கையை எடுத்தான். இந்த நாய் பேசுவது மட்டுமல்ல. திமிராகவும் பேசுகிறது. அதன் வார்த்தையில் ஏளனம் தொக்கி நிற்கிறது. புது வைத்தியன் என்பதாலா? இல்லை இந்தியன் என நினைப்பதாலா? நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது. இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது? என நினைததபோது இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தத் ஆறு அரை அடி இளைஞன், தனது பெயர் மல்வின். நாய்கள் வைத்திருக்கும் பகுதியில் வேலை செய்வதாக சொல்லி பலமாக கைகளைக் குலுக்கினான். அவனது உடலின் பலமும், ஆரோக்கியமும் அந்த கை குலுக்கலில் தெரிந்தது.

Continue Reading →

மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் பாராட்டுக்குரியவர்!

மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன்வே.ம.அருச்சுணன் – மலேசியாதமிழகத்தில் இயங்கி வரும்,தமிழ் அறக்கட்டளையின் ஆதரவோடு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, இந்திய அளவிலும், உலகளவிலும் சிறப்பாகச் செயல்படும் தமிழ்ச்சங்கங்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. கடந்த 17.3.2013 சென்னையில் நடைபெற்ற விழாவில், உலகலாவிய நிலையில் சிறந்த அமைப்பின் தலைவராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதும்; வரவேற்கத்தக்கதுமாகும். எழுத்தாளர்கள் மட்டுமின்றி,மலேசியத்  தமிழர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மறைந்த திரு.ஆதிகுமணன் அவர்களுக்குப் பின் 2002 ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பொறுப்பேற்ற இளந்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்கள் துடிப்புடன், தொய்வில்லாமல் தமிழ் இலக்கியத்தைப் பராமரிக்கவும், வளர்க்கவும் மேற்கொண்ட  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சங்கத்தை இன்றுவரை மிகச் சிறப்பாக வழிநடத்திவருவது போற்றதக்கதாகும்.

Continue Reading →