‘தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும்’ – பிரித்தானியத் தமிழர் பேரவை‏!

பிரித்தானிய தமிழர் பேரவைஅன்பான மாணவர்களே! அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆயினும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போலவே 70களில் மாணவர்கள், இளைஞர்கள் தமிழீழத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்த வெகுசனப் போராட்டங்களில் இறங்கியபோது போராட்டத்தின் நியாயப்பாடு சாதாரண மக்களிடையே வேகமாகப் பரவியது.  அதன் தார்மிக பலம் வலுப்படுத்தப்பட்டது.

Continue Reading →

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ”சசிபாரதி” சபாரத்தினம் திருச்சியில் காலமானார்.

1951 -ம் ஆண்டு ”வீரகேசரி” பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 – ம் ஆண்டு ”ஈழநாடு” பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார்.…

Continue Reading →

நாவல்: ‘நானா’ (2)

இரண்டாம் அத்தியாயம்: சதையின் கதை!

நாவல்: 'நானா'!எமிலி ஸோலாஅறிஞர் அ.ந.கந்தசாமிஅரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது கிரேக்கத் தெய்வத்தினை வைத்துப் பின்னப்பட்ட புராணக் கதை. இருந்த போதிலும் மனித மாமிசத்தின் கதையாகவே அது அமைந்திருந்தது. ஆணின் சதை பெண்ணின் சதையினை அவாவுடன் அழைக்கும்போது ஏற்படும் காதல், காம, சிருங்கார ரசங்கள்தான் அம்மேடையில் ஊற்றெடுத்து சபையோரிடம் பிரவகித்துக் கொண்டிருந்தன. அந்த ரசானுபவங்களை அனுபவிப்பதற்காகத்தான் அவர்களில் அநேகமாக எல்லோருமே அங்கு வந்திருந்தார்கள். இருந்தபோதிலும் அவர்களால் கூட நானாவின் சங்கீதத்தை அனுபவிக்க முடியவில்லை. கீச்சிட்ட குரலில் அவளது மென்மையான செவ்வதரங்களினூடாக வெளிவந்த பாட்டு அபஸ்வரத்தின் உச்சத்தை அடையாவிட்டாலும், அரங்கேற்றம் பெறத்தக்க, ரசிக்கக் கூடிய இசையாக அமையவில்லை.

‘மாலை வேளையில் ரதியும்
மயக்கும் சோலையில்’

என்ற இனிய பாடலை , அதன் இனிமையை தன் கீச்சுக் குரலால் கொலை செய்த வண்ணம் குலுக்கிகக் குலுக்கி நடந்தாள் நானா.

Continue Reading →