பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது…’ என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்’ இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.
[From Wikipedia, the free encyclopedia] Hugo Rafael Chávez Frías (Spanish pronunciation: [ˈuɣo rafaˈel ˈtʃaβes ˈfɾi.as]; 28 July 1954 – 5 March 2013) was the President of Venezuela from 1999 until his death in 2013. He was formerly the leader of the Fifth Republic Movement political party from its foundation in 1997 until 2007, when it merged with several other parties to form the United Socialist Party of Venezuela (PSUV), which he led until his death. Following his own political ideology of Bolivarianism and “socialism of the 21st century”, he focused on implementing socialist reforms in the country as a part of a social project known as the Bolivarian Revolution, which has seen the implementation of a new constitution, participatory democratic councils, the nationalization of several key industries, increased government funding of health care and education, and significant reductions in poverty, according to government figures.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தத்துவார்த்தத்தளத்திலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் கோவை ஞானியின் தொடர்ந்த செயல்பாடு தீவிரமாகவே அமைந்தது.கீழை மார்க்சீயம், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற நிலையில் தொடர்ந்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார். பொதுவுடமையின் வீழ்ச்சி, பொதுவுடமையின் போதாமைக்கு பிறகு வளர்தெடுக்கப்பட்ட பின்நவீனத்துவம் சார்ந்து சிந்தனைகளும், கூட்டங்களும், பயிலரங்குகளும் என்று தொடர்ந்து நடத்தினார். அவரின் விளிம்பு நிலை மக்களின் ஆய்விற்கும் விளக்கத்திற்கும் இது இன்னும் உரமளித்தது. அமைப்பியல்வாதம் சார்ந்து அவரின் சிந்தனைகள் இன்னும் வலுப்பெற்றன.கட்டுடைத்தலும் அது சார்ந்த உளவியல் அணுகுமுறைகளும் தமிழ் விமர்சனத்தை வலுப்படுத்தின. பின்நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தவர்களின் நிராகரிப்பும், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த வெகு சிலரின் இணக்கமான அணுகுமுறைகளும் தொடர பொதுவுடமை சார்ந்த பின் நவீனத்துவ அணுகுமுறைகளை வளர்தெடுக்கவேண்டியது பற்றிய அவரின் தொடர் சிந்தனை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கிறது. தலித் இலக்கியச் சார்பும், தத்துவமும் இதிலிருந்து பெறப்படக்கூடியதாக வழிகாடுதலை முன் வைத்தார்
புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கோர் இழப்பே. அவரது காணொளியிலான நேர்காணலொன்றினை இணையத்தில் ‘யு டியூப்’ இல் கேட்டேன். அவரது காணொளி நேரகாணலில் அவர் கூறியுள்ள தகவல்கள் (குறிப்பாக ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகள்) மிகவும் பயனுள்ளவை. ஈழநாடு பற்றிய அவரது கருத்துகள் எனக்கு அன்றைய காலகட்ட நினைவுகளைத் தோற்றுவித்தன. என் எழுத்துலக வாழ்வில் ஈழநாடு சிறுவர் மலர் மிகவும் முக்கியமானது. அதில் கட்டுரைகள், கவிதைகள், குட்டிக்கதை என எனது சிறுவர் காலத்து ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. புலவர் நேர்காணலில் ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகவிருந்த பெருமாள் பற்றிக் கூறியிருந்தார். பெருமாள் வாரமலருக்குப் பொறுப்பாகவிருந்தபோது எனது சிறுகதைகள் , நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள், பழமையின் சின்னங்கள் பேணப்படுதல் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார். அன்றைய காலகட்டத்தில் புலவரின் கவிதைகள் போன்ற ஆக்கங்கள் பலவற்றை ஈழநாட்டில் வாசித்ததாக ஞாபகம். அவரை நான் அறிந்து கொண்டதே ஈழநாடு மூலம்தான். அமைதியாகத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களில் புலவரும் முக்கியமானவர். அவரது மறைவினையொட்டி இணையத்தில் கிடைத்த பிற தளச் செய்திகள் சிலவற்றை, நன்றியுடன், மீள்பிரசுரம் செய்கின்றோம். அவரது படைப்புகளை இணையத்தில் காண முடியவில்லை. அவரது படைப்புகள் சேகரிக்கப்பட்டு, நூலகம் போன்ற தளங்களில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம். அத்துடன் அவரது மறைவால் வாடும் அனைவரின் துயரத்திலும் பங்குகொள்கின்றோம்.