அன்பான மாணவர்களே! அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆயினும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போலவே 70களில் மாணவர்கள், இளைஞர்கள் தமிழீழத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்த வெகுசனப் போராட்டங்களில் இறங்கியபோது போராட்டத்தின் நியாயப்பாடு சாதாரண மக்களிடையே வேகமாகப் பரவியது. அதன் தார்மிக பலம் வலுப்படுத்தப்பட்டது.
1951 -ம் ஆண்டு ”வீரகேசரி” பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 – ம் ஆண்டு ”ஈழநாடு” பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார்.…
இரண்டாம் அத்தியாயம்: சதையின் கதை!
அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது கிரேக்கத் தெய்வத்தினை வைத்துப் பின்னப்பட்ட புராணக் கதை. இருந்த போதிலும் மனித மாமிசத்தின் கதையாகவே அது அமைந்திருந்தது. ஆணின் சதை பெண்ணின் சதையினை அவாவுடன் அழைக்கும்போது ஏற்படும் காதல், காம, சிருங்கார ரசங்கள்தான் அம்மேடையில் ஊற்றெடுத்து சபையோரிடம் பிரவகித்துக் கொண்டிருந்தன. அந்த ரசானுபவங்களை அனுபவிப்பதற்காகத்தான் அவர்களில் அநேகமாக எல்லோருமே அங்கு வந்திருந்தார்கள். இருந்தபோதிலும் அவர்களால் கூட நானாவின் சங்கீதத்தை அனுபவிக்க முடியவில்லை. கீச்சிட்ட குரலில் அவளது மென்மையான செவ்வதரங்களினூடாக வெளிவந்த பாட்டு அபஸ்வரத்தின் உச்சத்தை அடையாவிட்டாலும், அரங்கேற்றம் பெறத்தக்க, ரசிக்கக் கூடிய இசையாக அமையவில்லை.
‘மாலை வேளையில் ரதியும்
மயக்கும் சோலையில்’
என்ற இனிய பாடலை , அதன் இனிமையை தன் கீச்சுக் குரலால் கொலை செய்த வண்ணம் குலுக்கிகக் குலுக்கி நடந்தாள் நானா.
எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும். அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை நேர்ப்பேச்சிலோ அவர் சொன்ன ஒரு ஆணித்தரமான கருத்து, இந்த மாதிரியான சிறு பத்திரிகைகள் எல்லாம் அதிகம் போனால் இரண்டு வருஷங்கள் தன் ஆரம்ப உயிர்ப்புடன் இருக்கும். அதன் பிறகு அது ஆரம்ப உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இழந்துவிடும். பின் அது ஏதோ பத்திரிகை நடத்துவதாகத் தான் இருக்கும். ஆகையால் இரண்டு வருஷங்கள் நடத்தி எப்போது அதன் புதுமையை இழக்கிறதோ நிறுத்தி விட வேண்டும் என்று சொல்வார். அப்படித்தான் அவர் நடத்திய சூறாவளி போன்றவையும் மணிக்கொடியும் (இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை நின்று புது ஆசிரியத்வத்தில் பின் மறு அவதாரம் எடுக்கும்) தேனீ, போன்றவை எல்லாமே. அப்போது க.நா.சு போன்று மலையாளத்தில் இளம் எழுத்தாளருக்கு ஆதர்சமாக இருந்த கோவிந்தன் சமீக்ஷா என்ற அவர் ப்ராண்ட் பத்திரிகையை தன் இஷடம் போல், அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ பிரசுரித்து வந்தார். அவரும் இதே அபிப்ராயத்தைத் தான் சொல்லி வந்தார். ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். புதிய உத்வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வளவோடு ஒரு சிறு பத்திரிகையின் காரியம் முடிந்து விடுகிறது. பின் அதை நிறுத்தி விட வேண்டும். அதற்கு ஏதும் வணிக, ஸ்தாபன உத்தேசங்கள் இருக்கக் கூடாது. என்பார். அப்படித் தான் அவர் வெளியிட்ட பத்திரிகைகளும் இயங்கின. அவர் இயக்கம் மலையாள இலக்கிய, கலை உலகில் மையம் கொண்டிருந்தது. அவர் எனக்கு அறிமுகமானதும், என்னையும் சமீக்ஷாவுக்கு எழுதச் சொன்னார். மலையாள சமீக்ஷாவுக்கு தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகள் பற்றியும், ஆங்கில சமீக்ஷாவுக்கும் ஒரு மௌனி கதை மொழிபெயர்ப்பும், மௌனி பற்றியும், பின் மற்றொன்றுக்கும் ஆங்கிலத்தில் கஷ்மீரி இலக்கியம் பற்றிய புத்தகம் ஒன்று பற்றிய மதிப்புரையும் எழுதச் சொன்னார். எழுபதுகளில் தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகளில் தெரிய வந்த புதியவர்கள் பெரும்பாலோரை அவர் அறிவார்.
அத்தியாயம் மூன்று: சிறிய குடும்பம்
மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை மன்னர்களும் அங்கு வெறுமனமே சுற்றித்திரியும் கோலங்களைக் காண முடியாது. காவல் துறையினரின் கண்காணிப்பினால் மட்டுமல்லாமல் குடியிருப்பைச் சுற்றி நவீன பாதுகாப்பு வேலிகள் பொறுத்தப்பட்ட அம்சங்கள் நிறைந்த அப்பகுதி யாதொரு பதற்றமும் இன்றி அமைதிப் பூங்காவாக மிளிர்ந்து கொண்டிருந்தது. தனி நிலம் கொண்ட பங்களா வீடு என்பதால் வீட்டைச் சுற்றித் தாராளமாக இடம் இருந்தது. அந்தக் காலி இடத்தை அம்மா முழுமையாகப் பயன் படுத்தியிருந்தார். தம் ஓய்வு நேரத்தில் வீட்டைச் சுற்றி மரங்களையும் பூச்செடிகளையும் நட்டுவைத்திருந்தார். நடப்பட்டிருந்த அழகிய மரங்கள்,பல்வேறு பூச்செடிகள் அதிலும் குறிப்பாகச் செம்பரத்தைப் பூச்செடிகளில் பூத்திருந்த மஞ்சள், சிவப்பு, வெள்ளை,ஊதா வண்ணங்களில் பெரிய வகை மலர்கள் இலேசான பனியில் நனைந்து காணப்படுகின்றன.
அத்தியாயம் நான்கு!
சுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள்? முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின் பலவருடங்கள் சொந்த ஊரில் ஏற்கனவே வேலை செய்து விட்டு வரும் போது அது தொழிலை தொடர்ந்து செய்வது என்பது மிக முக்கியமானது. இளமையில் பல வருடங்களை அழித்து எதிர்காலத்தில் விருப்பான தொழிலுக்காக கண்முழித்து, இரவு பகலாக முயற்சியுடன் படித்து பட்டம் பெற்ற பின்பு அந்த வேலை வாய்ப்பற்று வேறு வேலை செய்வது என்பதே வாழ்கையின் தோல்வியாகிறது. வேலைகள் எல்லாம் சமன் என்று சொல்வது இலகுவான போதிலும் குறிப்பிட்ட ஒரு வேலையை இலட்சியமாக எடுத்து அதற்காக வருடக்கணக்காக அர்ப்பணித்து தயர்ப்படுத்திய பின் மற்ற வேலை எவ்வளவு உயர்வாக இருந்தாலும் அதில் மனநிம்மதி கிடைக்காது. ஜீவனோபாயத்திற்காக வேறு வழியில்லாமல் என்னை நானே சங்கிலியில் பிணைத்துக் கொள்வது போன்று வேலை செய்தாலும் வாழ்க்கையின் தோல்வி என்ற எண்ணம் நிழலாக தொடரும். எனது வாழ்க்கையில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து மூன்று வருடங்களாக நிரந்தரமான ஒரு வேலை இல்லை. சிட்னியில் பெயின்ற் தயாரிக்கும் தொழிற்சாலையில் சில மாதங்கள், பின்பு உணவுச்சாலையின் சமயல் கூடத்தில் சிலமாதங்கள் என கிடைத்த வேலைகளை செய்துகொண்டு படித்து மிருக வைத்திய பரீச்சையில் பாஸாகினாலும் அலைச்சல் தொடர்ந்தது. நிரந்தர வேலை குதிரைக் கொம்பாக இருந்தது. மெல்பனில் சிலநாட்கள் கிழமைகள் மிருக வைத்தியராக வேலை, அதன் பின்பு அடிலயிட்டுக்கு அப்பால் உள்ள ஊரில் சுமார் ஆறு மாதகாலம் வேலை என்பது தொடர்ச்சியான பயணமாக இருந்தது. கிடைத்த இடங்களில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்லாமல் எடுத்துக் கொண்டு சில இடங்களுக்கு குடும்பத்துடனும், மற்றய இடங்களுக்கு தனியாகவும் செல்ல வேண்டி இருந்தது. எனது குடும்பம் மட்டுமல்ல சாருலதாவின் தாயும் தந்தையும் மகளையும் பேரப்பிள்ளைகளையும் பிரிய முடியாமல் பின் தொடர்ந்தனர். ஐரோப்பாவில் அலைந்து திரியும் ஜிப்சிகள்போல் இருந்தது.ஆனால் என்ன குதிரையும் கரவனும் இருக்கவில்லை. இந்த வேலையோடு ஜிப்சி வாழ்க்கை எனக்கு முடிந்து விடும்’ என சுந்தரம்பிள்ளை உணர்ந்த போது மனத்தில் அமைதி வந்தது.
கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது. இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் போன்று நானும் மகிழ்கிறேன். கரிகாலன் விருது குறித்து என் கருத்தைக் கூற விழைகிறேன். தமிழ்நாட்டிலுள்ள தஞ்சைப் பல்கலைக்கழகம் இவ்விருதினை வழங்குவதில்,எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக விளைந்ததே இந்த விருது. இதற்காகச் சங்கத்தையும் தொலைநோக்காகச் செயல்படும் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.
நீலகிரி மலையைச் சார்ந்த ” மலைச்சொல்” என்ற இலக்கிய அமைப்பு இவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான “ மலைச் சொல்” இலக்கிய விருதை தமிழ்மகனின் சமீபத்திய நாவலான “ வனசாட்சி” க்கு கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது. எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, திலகபாமா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பால நந்தகுமார், மு.சி. கந்தைய்யா ஆகியோர் நாவல் பற்றி பேசினர். ரூ 10,000 ரொக்கப்பரிசு கொண்டது இப்பரிசு.” மலைச் சொல் “ அமைப்பு வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் இயங்குவதாகும். தமிழ்மகன் தனது இந்த அய்ந்தாவது நாவலின் பின்னணியை முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து வேரோடு பிய்த்துக் கொண்டு இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார் என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.
வாழ்வது அர்த்தமுள்ளதாய் வாழ்தல் வேண்டும். குறைந்த பட்சம் மனிதனாய் வாழவேண்டும். அப்படி வாழ்கின்றவர்கள் குறைவு.குறை கூறுதல்,பழி சொல்லல்,இருட்டடிப்பு, மனிதரிடையே புரையோடிய மனிதர்களே அதிகம். மாறாக, மனித நேயம்,அன்பு,பழி கூறாமை,அனைவரையும் அன்புடன் நேசிப்பது,முடிந்தவரை ஊக்கப்படுத்துவது என மதிக்கப்பட்ட அற்புத மனிதர் தான் சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் ஆவார். அமரர்களான சுப்பிரமணியம்,செல்லம்மா தம்பதியர்க்கு மகனாக புங்குடுதீவில் 26/06/1930 இல் பிறந்தவர். எனினும் வாழ்வின் பல நாட்களை யாழ்ப்பாணம்,கொழும்பு என வாழ்ந்ததினால் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்றே கணிக்கப்பட்டார். புங்குடுதீவு விக்னேஸ்வரா வித்தியாசாலை,புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, யாழ்/இந்துக்கல்லூரி, யாழ்/ மத்திய கல்லூரி, ஊர்காவற்துறை/புனித அந்தனீஸ் கல்லூரி ஆகியவ்ற்றில் தன் கல்வியைத் தொடர்ந்து க.பொ.த.தரம் வரை பயின்றார். சிறு வயது முதலே பேச்சாற்றல் நிறைந்தவராகவும்,எழுத்தின் மீது ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார். அதனால் கவிதை, கதைகள், நாடகம், கட்டுரை என தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். ஈழத்து குறுங்கதைகள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக கணிக்கப்படுகிறார்.
28-ம் அத்தியாயம்: மனக்கண்!
டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களை விட்டு சிவநேசரிடம் “இரண்டு கண்களும் மிகவும் பழுதடைந்துவிட்டன. அதிலும் ஒரு கண் முற்றாகவே சின்னாபின்னப்பட்டுவிட்டது. மற்றக் கண்ணை வேண்டுமானால் சந்திர சிகிச்சைகளினால் மீண்டும் குணப்படுத்திப் பார்வையைப் பெற முடியும். ஆனால் ஸ்ரீதர் தான் கண் பார்வையை விரும்பவில்லையே. அதனால் தானே தன் கண்களைத் தானே குத்திக் கொண்டான் அவன்” என்றார். அதற்குச் சிவநேசர் “இப்பொழுது ஸ்ரீதருக்கு வேண்டியது கண் பார்வையல்ல. அவன் கண்ணில் ஏற்பட்டுள்ள புண்ணை முதலில் ஆற்றுங்கள்.” என்றார். சிவநேசரது வேண்டுகோளின் படி டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்ணிலே பட்ட புண்ணுக்கே வைத்தியம் செய்தார். ஒரு சில தினங்களில் புண்ணாறிப் போய்விட்டது. இதன் பயனாக ஸ்ரீதர் மீண்டும் பழையபடி ஆனான். அதாவது மீண்டும் பழைய குருடனாகி விட்டான் ஸ்ரீதர். இருண்ட வாழ்க்கை – ஆனால் அமைதி நிறைந்த இருண்ட வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் ஒன்று. அந்த அமைதி பூரண அமைதி என்று சொல்ல முடியாது.