ஆகஸ்ட் 15!

- வெங்கட் சாமிநாதன் -ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம். குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தினாலும், அது நம் மனித துயரைத் துடைக்க வந்த சித்தாந்தம் பேசினாலும், ஒரு யதேச்சாதிகாரரின் கீழ் மனித சமுதாயத்தின் சுதந்திரத்தை பறித்து அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு பயங்கர சொப்பனம், அது சொப்பனமல்ல, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்பதைச் சித்தரித்தது. அது கையாண்ட பல புதிய சொல்லாக்கங்கள் இன்று எந்த அரசினதும் ஆயுதங்களாகி அன்றாட புழக்கத்தில் வந்துள்ள மொழியாகியுள்ளது. (ஜியார்ஜ் ஆர்வெல்லுக்கும் முன்னால் கி.பி. 2000 என்று 1940களில் எப்போதோ வருங்கால கனவாக ஒரு உடோப்பியாவை போன நூற்றாண்டில் ஐம்பதுக்களிலிருந்து எழுபதுக்கள் வரை பெரிதும் கொண்டாடப்பட்ட மு. வரதராசனார் எழுதியது ஒன்றும் தமிழில் உண்டு. அதற்கும் முன்பாக கோதைத்தீவு என்று வ.ரா. ஒரு உடோப்பியா எழுதியிருக்கிறார்.

Continue Reading →

இளங்கோ அடிகள்

இளங்கோ அடிகள்!தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க 11ஆம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் ‘இளங்கோ அடிகள்’ என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா:

இளங்கோ அடிகள்!
 
 – தமிழநம்பி –

பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை  இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!

ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!

நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!

Continue Reading →

நவீன தேடல்கள் நிறைந்த யாழ் மண்ணின் பதிவுகள்

(குறிப்பு – பிரதேசம் சார்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பாக 2000 ற்குப் பின்னர் யாழ்மாவட்ட இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு வினாவை மகுடம் ஆசிரியர் அனுப்பியிருந்தார். அதற்கு எழுதப்பட்ட சுருக்கமான பதிலே இங்கு தரப்படுகிறது.)

 சு. குணேஸ்வரன் 2000 ற்குப் பின்னரான காலம் அரசியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டதாக இருக்கிறது. போரும் – சமாதானமும், போரும் – அழிவும் என மாறியகாலம். இக்காலங்களில் எழுந்த கலை இலக்கியங்களும் மக்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீளமுடியாத வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவனவாகவே அமைந்திருந்தன. இவற்றை மிக நுண்மையாகத்தான் நோக்கவேண்டும். ஆனாலும் சில பொதுவான ஓட்டங்களை இங்கு சுட்டிக்காட்டலாம். கவிதையைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மூடுண்ட காலமாக இருந்தபோது வெளிவந்த படைப்புக்கள் மக்களின் இயல்புவாழ்க்கை அழிக்கப்பட்டதன் வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவனவாக அமைந்திருந்தன. இக்காலத்தில் ஆயுதம் தரித்த எல்லாத்தரப்பினரிடம் இருந்தும் மக்கள் பல்வேறுவிதமான வாழ்க்கை முரண்பாடுகளை எதிர்கொண்டனர். குறிப்பாக அக்காலத்தில் வெளிவந்த தீபச்செல்வன், சித்தாந்தன், துவாரகன், சத்தியபாலன் ஆகியோரின் கவிதைகளின் ஊடாக இந்த மூடுண்ட காலங்களை அறிந்துகொள்ள முடியும். அப்போது வெளிவந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையில் ஹரிகரசர்மா எழுதிய ‘யாழ்ப்பாண நாட்குறிப்புகள்’ என்ற புனைவுசாரா எழுத்துக்களையும் இக்கவிதைகளோடு இணைத்து நோக்கலாம்.

Continue Reading →

பயன்பாட்டு நோக்கில் தமிழ்க் குறுஞ்செயலிகள்

முன்னுரை

  - முனைவர் துரை.மணிகண்டன் ( தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்   கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி.) -”யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என்ற பொன்மொழிக்கு நிகராக இன்று உலகில் இருக்கும் அனைவரும் உறவினர்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர். காரணம் இணையம். இணையம் இன்று பல்துறைப்பணிகளையும் செய்யும் அன்புக் கடவுள். இணையம் முதலில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பிறகு அது பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலுடன் வலம் வந்தது. இணையத்தில் நாம் ஒரு செய்தியைத் தேடி எடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பல இணைய முகவரிகளோயோ, வலைப்பதிவு முகவரிகளையோ, பொது தளங்களையோ சென்று நாம் காண வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் அதிகமான நேரத்தையும், பொருள் செலவையும் இழக்க நேரிடுகிறது. ஆனால் செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் என்ன செயலுக்கு எந்த  வலைமுகவரியோ அதைவிட அதிகமான, மிகத் துல்லியமானச் செய்திகளை நமக்குத்தரும் தமிழ்க் குறுஞ்செயலிகள் இன்று ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் – 02: வாழ்வில் எது எஞ்சும்? எது மிஞ்சும்? பயணத்தை திசை திருப்பிய ‘மாணிக்ஸ்’ மாணிக்கவாசகர் –

எழுத்தாளர் முருகபூபதி“இவர்  ஓர்  எழுத்தாளர்  அல்லர்.  ஆனால்,  எப்பொழுதுமே  எழுத்தாளர்களுக்கு மத்தியிலே  காணப்படுபவர்.   எழுத்தாளர்களுக்காக  எதையும்  செய்யத்துணிபவரும் கூட.குறிப்பாக  முற்போக்கு  எழுத்தாளர்களால்  நன்கு  அறியப்பட்டவர்.  மாணிக்கவாசகர்தான் அவரது பெயர்.” – இவ்வாறு  மல்லிகை 2010 அக்டோபர் இதழில், தமது வாழும் நினைவுகள்  தொடரில்  பதிவு  செய்கிறார்  நண்பர்  திக்குவல்லை கமால்.  கமாலின்  வார்த்தைகளை  நான்  மட்டுமல்ல மாணிக்கவாசகரை நன்கு தெரிந்த அனைவருமே  அங்கீகரிப்பார்கள். எனது  வாழ்வை  ஒருகட்டத்தில்  திசை  திருப்பியவர்தான்  இந்த மாணிக்கவாசகர். 1973-1976  காலப்பகுதியில்  நிரந்தரமான  வேலை  எதுவும்  இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன். காலிமுகத்திடலில்  வீதி  அகலமாக்கும்  நிர்மாணப்பணியில்  ஒப்பந்த  அடிப்படையில் அங்கு  வேலை  செய்த  தொழிலாளர்களை ‘மேய்க்கும்’ ஓவர்ஸீயர்  வேலையையும் ஒப்பந்தம்  முடிந்ததும்   இழக்கநேர்ந்தது. எனது  நிலைமையைப்பார்த்து  பரிதாபப்பட்ட  பிரேம்ஜியும்  சோமகாந்தனும்  எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பக  வேலைகளுக்காக  என்னை உள்வாங்கி  மாதம் 150 ரூபா அலவன்ஸ்  தந்தார்கள். நானும்  நீர்கொழும்பு – கொழும்புஎன  தினசரி  பஸ்ஸ_க்கு  செலவழித்து  பயணித்துக்கொண்டிருந்தேன். முற்போக்குஎழுத்தாளர்  சங்கம்  மற்றும்  கூட்டுறவுப்பதிப்பகத்தின்  பணிகளின்போதுதான்  மாணிக்ஸ்அறிமுகமானார்.  அவருடன்  அறிமுகமான  மற்றுமொருவர்  சிவராசா  மாஸ்டர். இருவருமே கம்யூனிஸ்ட்  கட்சியின் (மாஸ்கோ)  ஆதரவாளர்கள்.  அத்துடன்  இருவரும் ஆசிரியர்களாக  கொழும்பில்  பணியிலிருந்தவர்கள்.

Continue Reading →

இரு துருவங்களை இணைக்கும் கவித்துவம்!

- வெங்கட் சாமிநாதன் -ஒரு துருவம் மனுஷி. இளம் பெண். புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு முடிந்து இப்போது ஆராய்ச்சி மாணவி என்று நினைக்கிறேன்.  குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புடன் நம் முன் அறிமுகம் ஆகிறார். தன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில், ஒரு நாள் கவிதை எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். கவிதை அன்றிலிருந்து அவரது பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அந்தக் கவிதை, பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் சக பயணிகள் அனைவரையும் கவர்ந்த, ஒரு ஆறுமாதக் குழந்தையின் சிரிப்பு எழுதத் தூண் டியது. ஆனால் தன் வார்த்தைகளால் அந்த அனுபவம் முழுதையும் சொல்ல முடியவில்லை என்கிறார் மனுஷி. புரிகிறது. அந்தத் தொடக்கத்திலிருந்து பின் எழுதிய கவிதைகளை தோழிகள், நண்பர்கள் கவிதை நன்றாக இருப்பதாகவும் ஆனால் ”ஏன் விரக்தி, வெறுமை, கண்ணீர் பற்றியதாகவே இருக்கிறது?” என்று கருத்து சொன்னதாகச் சொல்கிறார் மனுஷி. முன்னுரை எழுதி வரவேற்றுள்ள அவரது ஆசிரியரும் துயரங்களின் அழகியல் என்றே மனுஷியின் கவிதைத் தொகுப்பு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். ஒர் இளம் வயதுப் பெண், குழந்தையின் சிரிப்பை கவிதையாகத் தந்த ஒரு பெண்ணின் கவிதை துயரங்களின் தொகுப்பாகவா இருக்கும்?. அந்த வயதின் ஏக்கங்களும், அவ்வப்போதைய தனிமையும் இருக்கும் தான். ஆனால் அவையே எல்லாமுமல்ல. வேர்த்துக் கொட்டிய வானம் என்று ஒரு கவிதையைத் தொடங்க விரும்பினாலும் அது  என்னை நனைத்து போனது என்று தான் அடுத்த வரி எழுத வருகிறது. ஏன்? வேர்த்துக் கொட்டியது வானத்திற்கு. அதுக்கு என்ன பயமோ, கஷ்டமோ?. ஆனால் மனுஷி நனையத்தான் செய்கிறார். ஏன்? இருவர் மனங்களும் ஆட்பட்டிருப்பது வெவ்வேறு உணர்வுகளில். திரும்பவும்
 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 26 யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’

வாசிப்பும், யோசிப்பும் 26 யோ.கர்ணனின் 'தேவதைகளின் தீட்டுத் துணி'யோ.கர்ண்னின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிறுகதைத் தொகுதி. அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதோரிடம் இதற்குண்டு. அதற்கு முக்கியமானதொரு காரணம் இதன் ஆசிரியர்தான். முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த யுத்தத்தின் பாதிப்பை நேரில் கண்டவர் இவர். அதுவரை நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் நேரில் பங்குபற்றிய சாட்சியாக இருந்தவர் இவர். அக்காலகட்டத்திலும், அதன் பின்னர் யுத்த காலகட்டத்திலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையெல்லாம் சாட்சியாக நின்று அவதானித்தவர் இவர். யுத்தம் காரணமாகக் காலினை இழந்தவர் இவர். இவற்றின் காரணமாக இவரது அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவான கதைகளிவையென்பதால் முக்கியத்துவம் வாய்ந்தவை இத்தொகுதிக் கதைகள். யோ.கர்ணனின் கதைகள் ஆயுதப் போராட்ட நிகழ்வுகளை, யுத்த காலகட்டத்தின் அவலங்களை, ‘மனிக் பார்ம்’ தடுப்புமுகாம் அனுபவங்களைப் பதிவு செய்யும் ஆவணங்களாக விளங்குகின்றன. அதே சமயம் நடைபெற்ற நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களாகவும் விளங்குகின்றன. இத்தொகுப்பு பல்வேறுபட்ட அவலங்களை, நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்பனுவங்களை விபரிக்கும் சிறுகதைகள், யுத்த்தில் மக்கள் அடைந்த துன்பங்களையும், அழிவுகளையும் வெளிப்படுத்துகினறன. போராளிகளுக்கும், படையினருக்குமிடையில் நடைபெற்ற ஆயுத மோதல்களை எந்தவிதப் பிரச்சார நோக்கமுமின்றி விபரிக்கின்றன. உதாரணமாகத் தொகுதியின் முதலாவது கதையான ‘ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்’ கதையினை எடுத்துக்கொண்டால் அக்கதையிலிருந்து பல்வேறு தகவல்களைப் பெற முடியும். அக்காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆள்சேகரிப்புக்கான தெருக்கூத்துகள் பற்றி, போராளிகளுக்கான நான்கு மாதப் பயிற்சி பற்றி, அதன் பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் பற்றி, ஜெயசிக்குறு காலகட்ட இராணுவத்துடனான மகளிர் அணியொன்றின் போராட்ட நடவடிக்கைகள் பற்றி, தன்னை அழிப்பதற்கு முன்னர் பொறுப்பாளருடன் ‘வாக்கி டோக்கி’யில் தொடர்புகொண்டு ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று கூறிவிட்டுத் தன்னை அழிப்பது போன்ற நடைமுறைகள் பற்றி பல்வேறு தகவல்களை இச்சிறுகதையினை வாசிக்குமொருவர் அறிந்துகொள்ள முடியும். இவ்விதமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அந்தச் சூழலில் வாழாத ஒருவரால் இதுபோன்ற தகவல்களையெல்லாம் விபரிக்க முடியாது. அந்த வகையில் யோ.கர்ணனின் சிறுகதைகள் கூறும் தகவல்கள் ஈழத்தமிழர்களின் யுத்தகாலகட்டத்து வாழ்வை மையமாக வைத்துப் புனைவுகளைப் படைக்க விரும்பும் எழுத்தாளர்களுத் துணைபுரியும் ஆவணங்களாகவிருக்கின்றன.

Continue Reading →

அற்புத கட்டிடக் கலைஞர் தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக... இருக்கும். இந்த கூடுகளை இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங்குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.

‘தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே’ என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக… இருக்கும். ‘ இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங் குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.

Continue Reading →

கனடா மிஸசாகாவில் நடந்த அமிர்தார்ணவம் -1 நூல் வெளியீட்டு விழா

கனடா மிஸசாகாவில் நடந்த அமிர்தார்ணவம் -1 நூல் வெளியீட்டு விழா    சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.எஸ். மதிவாசன், திரு. ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். முதலில் மங்களவிளக்கேற்றி, கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரிக் கீதம் போன்றன இசைக்கப்பட்டன. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து திருமதி வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வு செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களை எடுத்து அதற்கு எப்படி அபிநயம் பிடிக்கலாம் என்பதை சிறப்பாகவும் எழிமையாகவும் இந்த நூல் எடுத்துக் காட்டுவதாகவும், வர்ணத்தில் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் பலராலும் வரவேற்கப்படும் என்றும் தனது ஆய்வுரையில் அவர் குறிப்பிட்டார். அடுத்து உரையாற்றிய கலைக்கோயில் அதிபர் குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் இந்த நூலில் உள்ள சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, அமரரான தங்கள் சகோதரியும் இசையாசிரியையுமான திருமதி. அமிர்தாஞ்சனா சுரேஸ்வரன் அவர்களின் நினைவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் படங்களோடு கூடிய விளக்கங்கள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனாவிற்கு நன்றி தெரிவித்தார்.

Continue Reading →