தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 18

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்நிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதால் அறுபது வருடமாக இந்த  வைத்தியசாலை அவுஸ்திரேலியாவில் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கு மேற்பட்ட செல்லப்பிராணிகளைக் கொண்டு வருபவர்களைக் கவனித்து, அவற்றின் பிணி தீர்க்கும் உன்னதமான கடமையாற்றுவது என்பதாலும் மற்றும் இலாப நோக்கமற்று நியாயமான பணத்தில் இந்தச் சேவை நடப்பதாலும் மெல்பேனில் வாழும் பலருக்கு இந்த வைத்தியசாலையில் மரியாதையும் பற்றும் உள்ளது.  சில செல்வந்தர்கள் தங்களது செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்து மணிக்கணக்காக காத்திருப்பார்கள். தங்கள் செல்லப்பிராணிணிகளில் அதிக அன்பு செலுத்தியவர்கள் தங்களது சொத்துக்களை இறக்கும் போது வைத்தியசாலைக்கு எழுதி வைத்துள்ளார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் காயமுற்ற செல்லப்பிராணிகள் இங்கு வைத்தியம் பெறுவது அடிக்கடி தகவல்களாக வெளிப்படுத்துவதால் பலரது கவனத்தைப் பெறும் இடமாகிறது. இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற  இடத்தை தலைமை வைத்தியர் இல்லாமல் இரண்டு கிழமை நடத்தியது நிர்வாக குழு, காலோஸ் சேரத்தின் மேல் வைத்த மரியாதையை காட்டுகிறது என சுந்தரம்பிள்ளையால் புரிந்து கொள்ள முடிந்தது.

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (24, 25 & 26)

24  உறவு                   
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாநொந்து போயிருக்கும் மனைவிக்கு ஆறுதலாக இருக்கட்டுமே,என்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை  வீட்டுக்கருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு மனைவியைத் தவறாமல் அழைத்துச் செல்வதை,வழக்கப் படுத்திக் கொள்கிறார் தினகரன். கணவன் மனைவி இருவரும் இறைவன் சந்நிதியில் மகனின் விடுதலைக்காக  நெஞ்சுருகிப் பிராத்தனைச் செய்வர். மகன் நல்லபடியாக விடுதலை அடைந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டால்,பத்துமலைத் திருமுருகனுக்குக் குடும்பத்துடன் பால்குடம் எடுப்பதாகத் தினகரன் வேண்டிக் கொள்வார். வழிபாடு நடத்தப்படும் நாள் அன்று,அம்பிகை மனம் சாந்தி அடைந்தவராகக் காணப்படுவார்.மகனைப் பற்றிய சஞ்சலம் ஏதுமின்றி அமைதியுடன் இரவில் தூங்குவார். தினகரனுக்கும் மனைவியின் அமைதியான உறக்கம் கண்டு சற்று ஆறுதல் கொள்வார். முருகா….! மனைவிக்கு நீதான் அமைதியைக் கொடுக்க வேண்டும்.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதியேது….? மனமுருகி மனதில் வேண்டிக் கொள்வார்! வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தத்தம் பணிகளுக்குக் காலையில்  சென்று மாலையில் வீடு திரும்பினாலும் பழைய சுறுசுறுப்பும் உற்சாகமும்  இல்லாமல் மனம் சோர்ந்து காணப்படுவர்! பார்த்திபன் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் இரண்டு முறைகள் அவனைச் சென்று கண்டு வந்தார்கள்.அவனைக் கண்டு வந்த பிறகு அம்பிகை மேலும் கவலை அடைந்தார்.இதனால் அவனைச் சென்று காண்பதை தினகரன் தவிர்த்து வந்தார்.
 

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: சமரசங்களுக்குட்படாத படைப்பாளி – பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன்

தொ.மு.சிதம்பரரகுநாதன்   “புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று  எழுதிய  தொ.மு.சிதம்பரரகுநாதன்  தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை   தாங்கிய  கடிதம்    2001 ஆம்  ஆண்டு  இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர்   கே.கணேஷிடமிருந்து   எனக்கு   வந்தது. வாராந்தம்   கொழும்புப்   பத்திரிகைகள்  இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை காணமுடியவில்லை. திருநெல்வேலி பெருமாள்புரத்தில்தான் இப்பொழுதும் அவர் வசிக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியாக 90 இல் அவரது இல்லத்திற்கு குடும்பத்தோடு விருந்தினராகச்  சென்றேன். எனது  அப்பாவின்  வழியில் அவர் எனது நெருங்கிய உறவினர் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமை தரும் விஷயம். அவரது  மருமகள் (மகனின் மனைவி)  மாலதி  ஹரீந்திரன்  எனக்கு  அண்ணி  முறை. இந்த உறவு முறைகளுக்கெல்லாம் அப்பால் ரகுநாதனை நான் பெரிதும் மதிப்பதற்கு பல காரணங்கள்  இருந்தன. அதனாலேயே  அவரது மறைவின்  பின்னர்  எனது பறவைகள்  நாவலை  அவருக்கே  சமர்ப்பணம்  செய்திருந்தேன். புதுமைப்பித்தனின்  நெருங்கிய சகாவான ரகுநாதன், அவர் குறித்து கொண்டிருந்த – எமக்குப் புகட்டும் பாடம் என்ன? என்பதையே இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். எனவே ரகுநாதன் குறித்து என்னால் சொல்லக்கூடியது இதுதான்:- ‘ரகுநாதனது வாழ்க்கை சமரசங்களுக்குட்படாத ஒருவரின் துணிவு, உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.’

Continue Reading →

மகிந்த இராசபக்சேயின் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தமிழ் வாக்காளர்களுக்கு ஒராயிரம் காரணங்கள் உள்ளன!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கான  நாளை  தேர்தல் ஆணையாளர் நீண்ட காத்திருக்குப் பின்னர் அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது.  தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டாலும் தேர்தல் அறிவித்த படி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  காவல்துறை, காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும்  13 ஆவது சட்ட திருத்தத்தையிட்டு இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டங்களை சிங்கள தேசியவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன.  வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து சிங்கள தேசியக் கூட்டமைப்பு  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.  அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றம் தேர்தல் நடைபெறுவதற்கான நாளை ஒத்திப் போடலாம்.

Continue Reading →

‘தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்’

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.

நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் பௌத்த விகாரைகளை வழிபட வருவதென்பது கல்விச் சுற்றுநிருபம் மூலம் உருவாக்கப்பட்ட பலவந்தமான கட்டளையொன்றின் பிரதிபலன் எனலாம். வெசாக் உற்சவ வாரத்தினை முன்னிட்டு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு, பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எமது அரசியல் அதிகாரங்கள், பலவந்தமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உருவாக்க முற்படும் இவ்வாறான சில நியமங்களின் காரணமாகவே, மத ஒற்றுமைக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமிடையில் விரிசல்களும், குழப்பங்களும், தடைகளும் ஏற்படுவதாக பாதிரியார் கூறுகிறார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 25: பொ. ஐங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’!

வாசிப்பும், யோசிப்பும் 25: பொ. ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி'!பொ.ஐங்கரநேசன்தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய ‘ஏழாவது ஊழி’ நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 25: பொ. ஐங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’!

வாசிப்பும், யோசிப்பும் 25: பொ. ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி'!பொ.ஐங்கரநேசன்தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய ‘ஏழாவது ஊழி’ நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

Continue Reading →

குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 நாவலுக்குக் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது!

நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற…

Continue Reading →

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்  நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து  பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும்.  சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்களுடன் பாரிஸ் சென்றுவர இப்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. தோழர். காதர் என்னுடைய ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல் மற்றும் எஸ்.என்.நாகராசனின் நேர்காணல் தொகுப்பான ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது என மூன்று நூல்களின் இரு வெளியிட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இலண்டன் கூட்டம் விம்பம் கலை இலக்கிய திரைப்பட அமைப்பின் அனுசரணையில் சூலை மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும், பாரிஸ் கூட்டம் அசை கோட்பாட்டிதழ் மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு மையம் என இரண்டு அமைப்புகளின் அனுசரணையில் சூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. விம்பம் அமைப்பின் பின் ஓவியர் கிருஷ்ணராஜாவும், பாரிஸ் கூட்டத்தின் பின்  அசை தொகுப்பாளர் அசோக் யோகனும் தோழர். வரதனும் இருந்தார்கள்.

Continue Reading →