தமிழில் சிறுகதை இலக்கியம்: அவுஸ்திரேலியாவில் நடந்த அனுபவப்பகிர்வு; படைப்பிலக்கியத்தில் செம்மைப்படுத்தலுக்கு அவசியமான தேர்ந்த வாசிப்பு அனுபவம்!

தமிழில்  சிறுகதை   இலக்கியம்: அவுஸ்திரேலியாவில்  நடந்த  அனுபவப்பகிர்வு; படைப்பிலக்கியத்தில் செம்மைப்படுத்தலுக்கு அவசியமான  தேர்ந்த  வாசிப்பு  அனுபவம்!எழுத்தாளர் முருகபூபதிஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர்  விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும்  அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் மெல்பனில் தமிழில் சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சியை வேர்மண்ட் சவுத் சமூக நிலைய மண்டபத்தில் நடத்தியது. இதுதொடர்பாக    இந்த   ஆக்கத்தை   எழுதுவதற்கு  விரும்பினேன். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் – மொழிபெயர்ப்பு முயற்சிகள் –     இலக்கிய இயக்கம் – கலை, இலக்கியத்துறை  சார்ந்த  நம்மவர்கள் தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். உயிர்ப்பு- Being Alive (ஆங்கில மொழிபெயர்ப்பு)    முதலான   சிறுகதைத்தொகுப்புகளையும்     பதிப்பித்திருக்கின்றேன். அந்த  வரிசையில் அவுஸ்திரேலியாவில்      தமிழ்ச்சிறுகதை இலக்கியம்  பற்றிய இந்த ஆக்கத்தை  எழுதுவதற்கு முனைந்தேன்.  சிறுகதை  இலக்கிய வடிவம் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை     ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர்  கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல  பாட்டா, பாட்டிமாருக்கும்  அக்கறை  இல்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் அனைவருமே தற்பொழுது தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும்  அதற்கு விதிவிலக்கல்ல.       பகல்பொழுதில்  வேலைக்குச் செல்வதனால்  தொலைக்காட்சித்தொடர்களை  பிரத்தியேகமாக பதிவுசெய்ய  வழிசெய்துவிட்டு    –   மாலை வீடு திரும்பியதும்    அவற்றைப்பார்த்து  திருப்தியடையும் நடைமுறை வந்துவிட்டது பல வீடுகளில். இந்த      இலட்சணத்தில் எத்தனைபேர் சிறுகதைகளைப்படிக்கிறார்கள்?  அல்லது படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள்.?  சிறுகதை எழுத்தாளர்கள்  தமது படைப்பு தொடர்பாக  எவரேனும், வாசகர்    கடிதமாவது   –   கருத்தாவது      எழுதமாட்டார்களா      என்று காத்துக்கிடக்கின்றனர். சிறுகதைத்தொகுதியை  வெளியிட்டால்  அதனைப்பற்றி      குறைந்தபட்சம் இதழ்களில்  சிறிய அறிமுகக்குறிப்பாவது   பதிவாகுமா?  என்ற  எதிர்பார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

Continue Reading →