நயப்புரை: மெல்பன் சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வுக்காக எழுதப்பட்டது -கே.எஸ். சுதாகரனின் ‘காட்சிப்பிழை’

கே.எஸ். சுதாகர் (ஆஸ்திரேலியா)எழுத்தாளர் முருகபூபதிவல்லமை என்ற இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை காட்சிப்பிழை. அவுஸ்திரேலியாவில் வதியும்     சுதாகரன் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்துவிட்டு அவுஸ்திரேலியா     மெல்பனுக்கு வந்தவர். பல வருடங்களாக  சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் எழுதுபவர். இலங்கையிலும் தமிழகத்திலும்      மற்றும் வெளிநாடுகளிலும் நடந்த பல சிறுகதைப்போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர். அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய    கலைச்சங்கத்தில்  பல பதவிகளிலிருந்து  சிறந்த பங்களிப்பு செய்துவருபவர். சq;கத்தின் 10 ஆவது எழுத்தாளர்  விழாவை (2010)    முன்னிட்டு நடத்தப்பட்ட  சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகளை திறம்பட நடத்தியிருப்பவர்.  தற்பொழுது சங்கத்தின்    செயற்குழுவில் இதழாசிரியராக பணியாற்றுபவர். குறிப்பிட்ட வல்லமை இணைய இதழின் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளை  தேர்வு செய்தவர் தமிழகத்தின் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். குட்டுப்பட்டாலும் படவேண்டும் மோதிரக்கையினால் என்பார்கள். வசிட்டவர் வாயால்     பிரம்மரிஷிப்பட்டம் என்பார்களே அதேபோன்றதுதான் வெங்கட்சாமிநாதனின்  தேர்வு. சுதாகரனின் காட்சிப்பிழை  வல்லமை     தொகுத்த பரிசுக்கதைகளின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் தஞ்சமடையும்    இல்லத்திலிருக்கும் தெமட்டகொட அங்கிளுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?

Continue Reading →

காலநீட்சியின் அழகியலும் பேலா தாரின் திரைப்படங்களும்

I

காலநீட்சியின் அழகியலும் பேலா தாரின் திரைப்படங்களும்திரையை அறிவார்த்த சூத்திரங்களால் ஒழுங்கு செய்த ஐசன்ஸ்டைனின் மாண்டாஜ் முறைமையின் தீவிர எதிர்ப்பாளனாக நான் இருக்கிறேன். உணர்வுகளைப் பார்வையாளனக்கு கொண்டுசேர்க்கும் என்னுடைய சொந்த வழிமுறையானது முற்றிலும் வேறானது.  ஐசன்ஸடைன் சிந்தனைகளை எதேச்சதிகாரத் தன்மை கொண்டவையாக மாற்றிவிடுகிறார். இது இறுக்கமானதாக இருக்கிறது. ஒரு கலைப்படைப்பின் வசப்படுத்துகிற தன்மையான சொல்லப்படாத நழுவல்கள் ஏதும் இதில் இல்லை. – ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி

துண்டுக் காட்சிகளை சாரீயான இடங்களில் வைத்து ஒழுங்கு செய்து அர்த்தங்களை உருவாக்கும் மாண்டாஜ் கோட்பாடு ஒரு நாவலின் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால் இடைவெட்டில்லாத நீளமான காட்சிகள் ஒரு கவிதையின் தன்மை கொண்டதாக இருக்கிறது. இடைவெட்டில்லாத நீளமான காட்சியமைப்பானது வாழ்க்கையின் அசலான பகுதிகளை நம்முன் வைக்கிறது. இயற்கையை அதன் தூய வடிவில் காமிராவின் முன் கிடக்கச்செய்கிறது. – ஆந்த்ரே பசான்

இரண்டாம் உலகப்போரினால் விளைந்த துயரங்களும் அதற்குப் பின்னான நவீனத்துவப் போக்குகளின் வளர்ச்சியும் புறவுலகின் மீதான மக்களின் பார்வையில் ஏற்படுத்திய மாற்றங்கள் எல்லாவிதமான கலைப்படைப்புகளிலும் வேறுபட்ட அழகியற்கூறுகளின் வளர்ச்சிக்கு அடிகோலியது. மேற்கண்ட மாற்றம் சினிமாவிலும் நிகழ்ந்தது. ஐசன்ஸ்டைனின் மான்டாஜ் கோட்பாடு கோலோச்சிய காலத்தில் ஏறத்தாழ 1950க்குப் பிறகு நீளமான அதேநேரத்தில் குறைவான காமிரா சலனம் கொண்ட காட்சியமைப்பானது ஒரு தனித்த அழகியலாக பரிணமித்தது.

Continue Reading →