Prime Minister Stephen Harper today issued the following statement after learning that celebrated Canadian author Farley Mowat had passed away:…
தமிழிசையின் சிறப்புகளைத் தமிழகம் முழுவதும் பாடிப் பரப்பிய இசையறிஞர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர் ஆராய்ச்சியறிஞராகவும், பாடுதுறையில் வல்லுநராகவும் விளங்கியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்களில் இருந்த தமிழிசைக் கூறுகளை மக்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
குடந்தை ப. சுந்தரேசனார் கும்பகோணத்தில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருத மொழிகளை அறிந்தவர். யாழ்நூல் ஆசிரியர் விபுலானந்தரின் மாணவராக இருந்து அடிகளாரின் தமிழிசை குறித்த கண்டுபிடிப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையிலும் விரிவுரையாளராக இருந்து மாணவர்களுக்குத் தேவார இசை பயிற்றுவித்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகச் சிலகாலம் பணிபுரிந்தவர். அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் விருப்பப்படி இவர் பஞ்சமரபு என்ற அரிய நூலுக்கு உரை எழுதிய பெருமைக்குரியவர். சைவ, வைணவ இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய இவரின் நூற்றாண்டு 28. 04. 2014 முதல் தொடங்க உள்ளது. இவரின் தமிழிசைப் பணியை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் புதுச்சேரியில் இவரின் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க – இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து வரும் 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் செயராம் ஓட்டலில் நடத்துகின்றன.