கவிதை: சிவரமணிக்கு…

1_sivaramani5.jpg - 3.27 Kbஉன்னிடமொன்றைச் சொல்லும்
தேவை எனக்கிருக்கிறது
எனினும் நான் வாய் திறக்கும்வரை
பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்
உன்னைப் பார்க்கவென
நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்
அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்
உனை நான் இதயத்தில் உருவகித்தபடி
போய்க் கொண்டிருந்தேன்
எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்
இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து
உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

Continue Reading →

நூல் அறிமுகம்: தன்னியல்பான கவிதைகள் (இவள் பாரதியின் ‘ப்ரியங்களின் அந்தாதி’ தொகுப்பை முன்வைத்து)

1_priyangalinanthahti.jpg - 26.01 Kbஒரு நல்ல கவிதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். ஆனால் அது தன்னைத்தானே துவக்கிக் கொள்ளுமா? இல்லை அங்கேதான் கவியின் பங்களிப்பு தேவையாயிருக்கிறது. கவிதையின் மேலான ஈடுபாடு என்பது வெறும் வாசக-படைப்பாளி உறவு மட்டுமல்ல. அது மனித நேயத்தோடு கவிஞர் சமூகத்துடன் நடத்தும் தீராத உரையாடல். சக மானுடத்தின் மீதான கரிசனத்தை மையமாகக் கொண்ட இந்த உரையாடல் காலகாலமாக நிகழ்வது. ஆதியில் இந்த உரையாடலைப் பதிவு செய்வதில் கவிதையே பெரும் பங்கு வகித்தது. (இப்பொழுதும் கூட அப்படித்தான். ஆனால் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.) அதனாலேயே கவிதையைக் கலையின் ஆதி வடிவம் என்கிறோம். அதனாலேயே கவிதை மீது படைப்பாளிகளுக்கு ஆகப் பெரிய ஈடுபாடும் அன்பும் இருக்கிறது. இவள் பாரதி தன்னைக் கவிதை மீது காதல் கொண்டவராகவே பிரகடனம் செய்கிறார். இது மிகவும்  மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஒவ்வொருவரின் கவிதை உலகமென்பதும் வெவ்வேறு மாதிரியானதாகவே இருக்கும்.

Continue Reading →