தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் ஊடக அறிக்கை: மே 18 தமிழீழ தேசீய துக்க நாள்! எமது மக்களின் தியாகம் வீண்போகக் கூடாது!

மே 18மே 13, 2014 , ம 18,  சிங்கள இராணுவம் தமிழ்மக்களை  ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக்  கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது  நினைவேந்தல் ஆண்டாகும்.   சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து  செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச்   சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.  மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான்.  மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.

Continue Reading →

மெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு! அசோகனின் வைத்தியசாலை நாவல் வெளியீட்டில் முருகபூபதியின் உரை:

1_ashokanin_vaiththiyasalai.jpg - 10.28 Kbமுருகபூபதிஎழுத்தாளரும் சமூகப்பணியாளரும்   விலங்கு  மருத்துவருமான நடேசனின்   புதிய நாவல்   அசோகனின்   வைத்திய  சாலை – வண்ணாத்திக்குளம்   நாவலின்   சிங்கள   மொழிபெயர்ப்பு  சமணல வெவ  மற்றும்    உனையே   மயல் கொண்டு  நாவலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You   ஆகிய   மூன்று   நூல்களினதும் விமர்சன  அரங்கு  அண்மையில்  (04-05-2014)  மெல்பனில்    இலங்கை சமூகங்களின்  கழகத்தின்   ஏற்பாட்டில்    அதன்   தலைவர்  திரு. பந்து திஸாநாயக்கா   அவர்களின்   தலைமையில்   நடந்தது. தமிழ்  சிங்கள முஸ்லிம்  மற்றும்   அவுஸ்திரேலியா   வெள்ளை இனத்தவர்களும்   கலந்து   சிறப்பித்த   இந்நிகழ்வில்   விக்ரோரியா மாநில   பாராளுமன்ற உறுப்பினர்கள்   ஜூட்  பெரேரா  –  லிஸ்பீட்டி – மூத்த  பத்திரிகையாளர்   மகிந்தபாலா  –  சிங்கள  எழுத்தாளர்  குருப்பு ஆங்கில   பத்தி  எழுத்தாளர் மொல்ரிஜ் –   எழுத்தாளர்  முருகபூபதி ஆகியோர்    உரையாற்றினர்.   நடேசன்   ஏற்புரை  வழங்கினார். நிகழ்வின்  இறுதியில்   கலந்துரையாடலும்  தேநீர் விருந்தும் இடம்பெற்றது.

Continue Reading →

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா (1989 – 2014)

06-09-2014  சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre – Memorial Drive, Noble Park, Vic – 3174, Australia )

இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்    அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.

இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்    அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.  

Continue Reading →