நிகழ்வு: லண்டனில் கிங்ஸ்ரன் மேயரினால் விருதுபெற்ற இலங்கைப் பெண்மணிக்கு பாராட்டுவிழா.

1_navajothy1520147.jpg - 21.88 Kb‘தனது அயராத முயற்சியினாலும், சேவை மனப்பாண்மையோடும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் படைத்த சர்வலோகேஸ்வரிக்கு கிங்ஸ்ரன் மேயரின் விருது கிடைத்திருப்பதென்பது, தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளவேண்டிய விடயம், அவரது பல்வேறு சேவைகளையும் எடுத்துரைத்த’  திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கத்தின் ஆரம்ப உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
  
‘தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமன்றி பிற சமுதாயத்தினரையும் மனிதப்பண்போடு நேசித்து, எல்லோருக்கும்; தன்னால் முடிந்த வகையில் உதவிகள் புரிந்து வரும் சர்வலோகேஸ்வரியின் பண்பு பாராட்டுக்குரியது. ஆரம்பகாலங்களில் லண்டனில் ஆசிரியையாகப் பணிபுரிந்த சர்வலோகேஸ்வரி பின்னைய நாட்களில் வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்கள் என ஆங்கில மொழி பேசுவதற்கு அவதியுறும் தமிழ் மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணிகள் புரிந்தவர். தனது குடும்பம், சொந்த விடயங்கள் என நின்றுவிடாது மற்றவர்களுக்கு பணிபுரியும் மனங்கொண்ட சர்வலோகேஸ்வரி அவர்கள் கிங்ஸ்ரன் மேயரால் விருது வழங்கி பாராட்டப்பட்டமை எமக்கு மிக மகிழ்சி தருகின்ற விடயம்’ என சமூகசேவையாளர் திரு. தணிகாசலம் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 40 : எஸ்.பொ. பற்றிய தர்மகுலசிங்கத்தின் ‘தேடல்

எஸ்.பொஅண்மையில் த.தர்மகுலசிங்கத்தின் மித்ர வெளியீடாக வெளிவந்த ‘தேடல்: சில உண்மைகள்’ என்னும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய , குறிப்பாக மூத்த எழுத்தாளர் திரு.எஸ்.பொ.வின் பங்களிப்பு பற்றிய நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நூலுக்கு முக்கியமானதொரு சிறப்பு உண்டு. எஸ்.பொ. பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவருடனான நூலாசிரியரின் நேர்காணலினோடு வெளிப்படுவது…தான் தானந்தச் சிறப்பு. எஸ்.பொ. அவர்களின் உரையினை அவர் பல வருடங்களுக்கு முன்னர் கனடா வந்திருந்த சமயம் வந்திருந்தபோது கேட்டிருக்கின்றேன். நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிடுவதுபோல் எஸ்.பொ. அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர். ஆசிரியராக இருந்தபடியால் அவரது உரையும் மாணாக்கர்களுக்கு பாடங்கள் எடுப்பதுபோல் தர்க்கச்சிறப்பு மிக்கதாக இருந்ததாக அச்சமயம் உணர்ந்தேன். அதன்பின்னர் அவரை அவரது சகோதரரின் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை பற்றி, திருமணம் பற்றி, ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் மனந்திறந்து உரையாடினார். மறக்க முடியாத சந்திப்பு.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 39 : அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் ‘மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்’ நூல் பற்றிய குறிப்புகளும்!

அ.ந.கந்தசாமிசாரல்நாடலின் ‘மலைய இலக்கியம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்னும் சிறு நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ‘சாரல் வெளியீட்டகம்’ (கொட்டகலை, இலங்கை)  வெளியீடாக வெளிவந்த இந்த நூலில் சாரல்நாடன் மலையக இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்நூலில் மலையக இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பிறபகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் ஓரளவு குறிப்பிட்டுள்ளார் சாரல்நாடன். மலையக இலக்கியத்துக்குப் பிற பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றிய விடயத்தில் அவருக்குப் போதிய பரிச்சயமில்லையென்பதை நூல் வெளிப்படுத்துகின்றது.  மலையக மக்கள் பற்றிய நாவல்கள் படைத்த எழுத்தாளர் நந்தி, புலோலியூர் சதாசிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அட்டனின் நடைபெற்ற ‘ஏனிந்தப் பெருமூச்சு’ கவியரங்கில் பங்குபற்றிய கவிஞர் கந்தவனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மலையகம் பற்றிப் பாடிய வி.கந்தவனம் என்று குறிப்பிடுகின்றார். அட்டன் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எழுத்தாளர் சொக்கன், நவாலியூர் நா.செல்லத்துரை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் மலையகத் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றிய முக்கியமான ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் ஒருவரைப் பற்றி, மலையக மக்கள் பற்றிக் கவிதைகள், சிறுகதைகள் படைத்த எழுத்தாளரைப் பற்றி , இறப்பதற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய நாவலொன்றினை எழுதிய முக்கியமான எழுத்தாளரைப் பற்றி நூலாசிரியர் சாரல்நாடனுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. இவ்விதமான விடுபடுதல்களால் நட்டப்படுவது இவ்விதமான நூல்கள்தாம். இவ்விதமான நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள்தாம். இவ்விதம் சாரல்நாடனின் கண்களில் தென்படாமல் விடுபட்டுப் போன எழுத்தாளர் வேறு யாருமல்லர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமிதான். 

Continue Reading →