கவிதை: ’ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா….!

Latha Ramakrishnan(1)
 பார்க்கும்போதெல்லாம் ஆசிரியர் கையில் பிடித்திருக்கும் குச்சி
வெவ்வேறாய் காட்சியளிக்கிறது குழந்தைக்கு….
ஒரு சமயம் பாம்பு _ ஒரு சமயம் சாட்டை _
ஒரு சமயம் ‘பெல்ட்’ _ ஒரு சமயம் முதலை _
ஒரு சமயம் சூட்டுக்கோல் _ இன்னும்…..
கற்பனையும் நிஜமும் கலந்ததோர் வெளியில்
வாழவேண்டியிருப்பதில்
குழந்தையின் உள்ளமெங்கும் ஊமைரணங்கள்.

(2)
”வணக்கம் சொல். பணிவு வேண்டாம்?”
என்று உறுமும் ஆசிரியரின் கண்களிலிருந்து பாய்ந்துவரும் காட்டெருமைக் கொம்புகள்.குத்திக் கிழிக்க
குருதி பெருகும் குழந்தை மனதை
மிச்சம் மீதியில்லாமல் கவ்வுகிறது குகையிருட்டு.

Continue Reading →

அன்னையர் தினக் கவிதை: அன்னையின் கருணை

அன்னையர் தினக் கவிதை: அன்னையின் கருணை

அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது

Continue Reading →

வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”

வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”- வெங்கட் சாமிநாதன் -வாஸந்தியின் நாவல்,  “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும்  மேல்,  நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம்  சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது தேவதாசி என்றும் தேவரடியாள் என்றும் அழகான பெயர் சூட்டி நடனத்தின், சங்கீதத்தின் பக்தியின் உறைவிடமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் தேவடியாளாகச் சீரழிந்தற்கு, அல்ல, சீரழிக்கப் பட்டதற்கு நம் குணமும் பார்வையுமே தான் காரணமாகியுள்ளன என்பதை நாம் ஒரு போதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. சீரழிவைப் பார்த்து பொறுக்காத சீர்திருத்த மனம் கொண்டவர்கள் தேவதாசி முறையை ஒழிக்கச் சட்டம் கொண்டு வந்த காலத்திலும் கூட ஸ்தாபனம் நிறைய உன்னத கலைஞர்களை பிறப்பித்து பாதுகாத்து வந்திருந்தது. நம் சங்கீதமே அவர்களிடமும் வாழ்ந்திருந்து வந்திருக்கிறது. தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரிகளும் சங்கீதம் பெற்றதும், பகிர்ந்து கொண்டதும், கொடுத்ததும் தேவதாசிகள் பாதுகாத்து வந்த அந்த சூழலில் தான். அவர்களுடன் சங்கீதம் கற்றதும், தீக்ஷிதரிடமிருந்து சிக்ஷை பெற்றதும் தேவதாசிகளும் தான். படித்திருக்கிறேன். உலகம் முழுதும் தன் நாட்டியத்தை எடுத்துச் சென்ற உதய் சங்கர் ஏதும் முறையாக நாட்டியம் பயின்றவர் அல்லர். அவருக்குக் கிடைத்தது ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய Mirror of Gestures புத்தகம். ஆனந்த குமாரஸ்வாமிக்கு அந்த புத்தகம் எழுத அபிநயங்கள் பற்றிச் சொன்னது மைலாப்பூர் கௌரி அம்மாள் என்ற தேவதாசி.

Continue Reading →