நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும் (1 & 2)

(1)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?  நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும். 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது….

வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது....‘பொல’ ‘பொல’வென்று பொழுது விடியும் சமயம்.. ‘மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருக்கும். புலரும் பொழுதினை வரவேற்றுப்பாடுபவவை .. சேவல்களா? இல்லை.. பின்.. மயில்கள்தாம். மயில்கள் அகவிக் காலையினை வரவேற்கும் பாங்கினை ‘முழங்கா’விலில்தான் காணலாம். முழங்காவில் என்றதும் ஞாபகம் வருபவை.. முழங்காவிற் சந்திக்கோவில், தேநீர்க்கடை, குழாய்க்கிணறுகள், பெண்கள் குடியேற்றத்திட்டம்… இவைதாம். இவை எண்பதுகளின் ஆரம்பகாலகட்டத்து நினைவுகள். மன்னார்ப்பகுதிக்கும் சங்குப்பிட்டிக்கும் இடையில் அமைந்துள்ள முழங்காவிற் கிராமத்தின் முதற் பஸ் தரிப்பிடம் ‘பல்லவராயன் கட்டு’ என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ளது.

என் நண்பனொருவன் ‘சிறீ’ (மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் தொழில்நுட்பத்துறையில் படித்திக்கொண்டிருந்வன்) குழாய்க்கிணறுத்திட்டத்தில் பயிற்சிக்காகச்  சேர்ந்திருந்த சமயம், அவனது அழைப்பின்பேரில் அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வூர் மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. அச்சந்திப்புகளின்போது அறிந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அத்துடன் நனவிடைதோய்தலும் இதனுள் அடக்கம்.

Continue Reading →

இணையத்தள அறிமுகம்: அறிஞர் க. பூரணச்சந்திரன் படைப்புகளுக்கான இணையத்தளம்!

1_pooranachnadran_k.jpg - 18.37 Kbஅன்புடையீர் வணக்கம், அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்கள் எங்களைப்போன்ற பல தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும், முனைவர் பட்ட ஆய்வரிஞர்களையும் உருவாக்கியவர். அவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஈபர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.  புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர். 2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். அவற்றில் சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன. அறிஞர் க. பூரணச்சந்திரன் அவர்களின் சமூகம் சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கேள்வி – பதில் பகுதிகள், நூல் ஆரிமுகம் – மதிப்புரைகள், உலக திரைப்பட அறிமுகங்கள், மொழியியல் கொள்கை என பல்வேறு தலைப்புகளை சமூகம் சார்ந்து எழுதப்பட்டுவரும் அனைத்தும் ஒரு தொகுப்பாகக் கிடைக்கும்படி எங்களைப்போன்ற மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறிஞர் பூரணச்சந்திரன் அவர்களும் அவரது மகா திரு. செவ்வேள் அவர்களும் இசைவு தந்து, இன்று ஒரு இணைய தளமாக http://www.poornachandran.com வடிவம் பெற்றுள்ளது. இந்த இணையதளம் அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் உள்ளதனால், தமிழர்கள், தமிழ் மாணவர்கள், புலம் பெயர் தமிழர்கள் என அனைவரிடமும் இந்த இணையதளம் சென்றடைந்தால், மொழி வளர்ச்ச்சி குறித்த சிந்தனையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கருதி இந்த மினஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். இதனைத் தங்கள் நட்பு வட்டத்தில் அனுப்பி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

Continue Reading →