காலத்தின் தேவைதான் பெரும அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் இன்றைய சமூகத் தேவைதான்- வரலாற்றுத் தேவைதான் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தையும் (Sri Lanka Educational Community Organisation- SLECO) தேற்றுவித்தது எனலாம். அந்தவகையில் கல்விசார் பணியாளர்களான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆகியோர் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் உணர்ந்து அதற்கான மாற்றுச் செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமென அவ்வமைப்பினர் பிடகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறே, தமது செயற்பாடுளை எத்தனங்களை ஒரு பிரதேச எல்லைக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தேசம் தழுவிய அமைப்பாக இது செயற்படும். ஐக்கியம் புதிய தளம் அமைக்கும் என்ற தாரக மந்திரத்துடன் தோற்றங்கொண்டுள்ள இவ்வமைப்பு எந்தவொரு கட்சிக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. அந்தவகையில் எந்தக் கட்சியிலும் உள்ள ஒருவர் தனது கட்சிக்குரிய அமைப்பாக்கும் நோக்கம் இல்லாமல், தனது கட்சிக்கு விரோதமாயல்லாத வெகுஜன செயற்களங்களில் இவ்வமைப்போடு சேர்ந்து இயங்க இயலும். இது பரந்துபட்ட சமூக தளம் என்கிறவகையில், வெவ்வேறு சமூகத்தின்- குறிப்பாக பின்தங்கிய சமூகங்களின் கல்வி வளர்ச்சியை தமது இலக்காக கொண்டே இவ்வமைப்பு செயற்படும்.
பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியா – பாகிஸ்தா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர் ஒருவருக்கும், பாகிஸ்தானியர் ஒருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள் அமைதிக்கான நோபல் விருது, ஆசிய துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய பங்களிக்குமா என்ற கேள்விக்கு ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழுக்கு பதிலளித்துள்ள நோபல் கமிட்டி தலைவரும், நார்வே பிரதமருமான தோர்ஜோர்ன் ஜக்லாண்ட் “சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்த விருது பங்களிக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே” என்றார்.
நண்பர்களே மாற்று சினிமா முயற்சிகளை முன்னெடுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 24வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், பல முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, டொராண்ட்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி இயக்கமான “படிமை” யின் 3வது அணியை சேர்ந்த மாணவரின் முதல் கட்டுரை இது. இது தவிர, லத்தீன் அமெரிக்க சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமான கறுப்பு ஓர்ஃபியூ திரைப்படம் பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரையும், பெர்லின் சுவர் தகர்ப்பு பின்னணியில் வெளியாகியிருக்கும் நோ பிளேஸ் டு கோ படம் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும், தவறாமல் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.