பிரெஞ்சு நாவல்: எமிலி ஸோலாவின் ‘நானா’! | தமிழில் அறிஞர் அ.ந.கந்தசாமி

அத்தியாயம் மூன்று: மோகப் புயல்!

நாவல்: 'நானா'![ ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.]

பாரிஸ் நகரின் ஒரு முக்கிய்மான வீதியில் அமைந்திருந்த ஒரு பெரிய மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்தாள் நானா. நானாவுக்கு இந்த வீட்டை எடுத்துக் கொடுத்து உதவி செய்தவன் மாஸ்கோ நகரில் இருந்து வந்த ஒரு வியாபாரி. வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் அவன் வாங்கியிருந்தான். பாரிஸ் நகருக்கு வந்த மாஸ்கோ வியாபாரி வந்த சமயம் மாரிகாலமாக இருந்ததால் கடுமையான மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நானா அவன் வசத்தில் சிக்கினாள். ஒரு சிலரிதைத் தலைகீழாகத் திருப்பி நானாவிடம் மாஸ்கோ வியாபாரி சிக்கினான் என்றும் கூறினார்கள். ஆனால் மாஸ்கோ வியாபாரியிடம் நானாவும், நானாவிடம் மாஸ்கோ வியாபாரியும் சிக்கினார்களென்று வைத்துக் கொள்வதுதான் பொருத்தமாயிருக்கும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 83 திறனாய்வு, விமர்சனம் மற்றும் அணிந்துரை பற்றி தெணியான்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்‘திறனாய்வு என்றால் என்ன?’ என்னும் நூலுக்கான அணிந்துரையில் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: ‘… இந்த எழுத்துக்கள் பற்றிய சுய மதிப்பீட்டில் இவர் விமர்சனம் திறனாய்வு (Criticism)) என்ற பதத்தைத்தவிர்த்து மதிப்புரை (Review)  என்ற பதத்தினையே பயன்படுத்தி வருகின்றார்…’  இக்கூற்றில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘விமர்சனம்’, ‘திறனாய்வு’ ஆகிய பதங்களை ஒரே அர்த்தம் கொண்டவையாகப் பயன்படுத்துகின்றார்.

கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் “திறனாய்வு (தமிழ்) விமர்சனம் (வடமொழி)  ஆகிய இரண்டு பதங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. நமது பழைய தமிழ் நூல்களில் ‘விமரிசன்’, ‘விமரிசனம்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ‘ என்பார் [‘திறனாய்வு என்றால் என்ன’; பக்கம் 27].

எழுத்தாளர் சுபைர் இளங்கீரனும் தனது ‘திறனாய்வு’ என்னும் கட்டுரையில் திறனாய்வு , விமர்சனம் என்னும் சொற்பதங்களை ஒரே அர்த்தத்தில் மாறி மாறிப்பயன்படுத்துவதை அவதானிக்கலாம் (‘நூல்: தேசிய இலக்கியமும், மரப்புப்போராட்டமும்’; பக்கம் 88]. இக்கட்டுரையின் மூல வடிவம் ‘புதுமை இலக்கிய மலர் (1962)’ தொகுப்பில் வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →