எமிலி ஸோலாவின் ‘நானா’! | தமிழில் அ.ந.கந்தசாமி

அத்தியாயம் நான்கு : குட்டிக் காதலன்

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.நாவல்: 'நானா'!நானா சீறியதற்குப் பதிலாக எதுவுமே சொல்லவில்லை ஸோ. அவளுக்கு இருந்த ஒரே ஒரு கவலை எஜமானியின் நாசுக்கற்ற கூச்சல் வீட்டிற்கு வந்திருந்த நானாவின் அபிமானிகளின் காதில் விழுந்து , அவர்களது அபிமானம் கெட்டுவிடக் கூடாதே என்பதேயாகும்.

“ஷ்… இரைந்து பேசாதீர்கள்!” என்று சைகை செய்தாள் ஸோ. “ஆட்கள் வெளியில் இருக்கிறார்கள்” என்று மேலும் தொடர்ந்து கூறினாள்.

நானா குரலைத் தாழ்த்திக் கொண்டு ஸோவின் புகார்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தாள். ” நான் என்ன தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தேன் என்றா எண்ணுகிறீர்கள்? அவன் விடமாட்டேன் என்று மல்லுக்கட்டினான். எனது நிலையில் நீங்கள் இருந்திருந்தால் அல்லவா தெரியும்? எனக்கு வந்த கோபத்தில் அவன் கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளிவிடலாமா என்றிருந்தது. அதுதான் சனியன் முடிந்ததென்றாலும் இங்கே வருவதற்கு வண்டி கிடைக்கவில்லை. ஓட்டமும், நடையுமாக வந்திருக்கிறேன்.” என்று தன் கஷ்ட்டங்களை விபரித்துக் கூறினாள் நானா.

பேசி முடிந்ததும் “பணம் கிடைத்தா?” என்று கேட்டாள் லெராட் மாமி.

“நல்ல கேள்வி” என்றாள் நானா எரிச்சலுடன்.

அவள் கால்கள் ஓய்ந்து அலுத்துப் போய் இருந்தன. உயிரும் உணர்வுமற்று அசதியுடன் ஒரு நாற்காழியில் தொப்பென்று விழுந்து உட்கார்ந்தாள் அவள். சட்டையுள்ளே மெல்லக் கையை விட்டு ஒரு கவரை வெளியே இழுத்தெடுத்தாள். மொத்தம் நானூறு பிராங்குகள் அதில் இருந்தன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 85: ஆனந்த் பிரசாத்தின் ‘ஒரு சுயதரிசனம்’

எழுத்தாளர் ஆனந்த் பிரசாத் கவிதைகள் புனைவதிலும் வல்லவர். இவர் எழுதிய 21 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்று ‘ஒரு சுயதரிசனம்’ என்னும் பெயரில் 1992இல் கனடாவில் ‘காலம்’ சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்தில் ‘காலம்’ சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், ‘காலம்’ சஞ்சிகை வெளிவருவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களிலொருவராகவும் இவர் விளங்கியிருப்பதை நூலின் ஆரம்பத்தில் ‘காலம்’ சஞ்சிகை ஆசிரியர் செல்வம் எழுதிய குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.

மேற்படி நூலினை அவர் சமர்ப்பித்துள்ள பாங்கு நினைவிலெப்போதும் நிற்க வைத்துவிடும் தன்மை மிக்கது. நூலுக்கான சமர்ப்பணத்தில் அவர் “அதிருஷ்ட்டங்கள் வந்து நான் அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது என்னைத்தடுத்தாட்கொண்ட துரதிருஷ்ட்டங்களுக்கு’ என்று நூலினைத்தனக்கேற்பட்ட துரதிருஷ்ட்டங்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நான் அறிந்த வரையில் இவ்விதம் துரதிருஷ்ட்டங்களு நூலொன்றைச் சமர்ப்பணம் செய்த எழுத்தாளரென்றால் அவர் இவராக மட்டுமேயிருப்பாரென்று எண்ணுகின்றேன்.

இக்கவிதைத்தொகுதியிலுள்ள் இவரது கவிதைகள் பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிப்பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக ‘பொறியியலாளன்’,  ‘அகதி’, ‘ஒரு சுயதரிசனம்’, மற்றும் ‘ஒரு Academic இன் ஆதங்கம்'(நூலில் acadamic என்று அச்சுப்பிழையேற்பட்டுள்ளது) ஆகிய கவிதைகளைச்சுட்டிக்காட்டலாம். கவிஞர் கனடாவுக்கு வந்த புதிதில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அக்காலகட்டத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவுமிவற்றைக்கொள்ளலாம்.

Continue Reading →