அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை, இலக்கியச்சந்திப்பில் நூல்களின் அறிமுகம், கூத்து ஒளிப்படக்காட்சி நிகழ்ச்சிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெறும். மெல்பன், சிட்னி, …
‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்பது கனடிய தமிழர்களுக்காகத்தான் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவாதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது. கனடியத் தமிழர்களால் நன்கு…
மனவெளி அரங்க அளிக்கைக் குழுவினரின் பதினேழாவது அரங்காடல் நிகழ்வு சித்திரை 17,2015இல் வழக்கம்போல் மார்க்கம் தியேட்டரில் நடந்து முடிந்திருக்கிறது. ஐந்து அளிக்கைகள்,சுமார் நான்கு மணிநேரத்தில்; பல்வேறு உணர்வுத் தெறிப்புகளை பார்வையாளரிடத்தில் பதித்துப் போயிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும்பற்றிய விமர்சனமல்ல இக்கட்டுரை. ஒவ்வொரு அளிக்கையும் முடிவுற்ற கணத்தில் மனத்தில் எஞ்சிய உணர்வோட்டம் எது காரணமாய் ஏற்பட்டதென்ற நினைவோட்டத்தின் பதிவுமட்டுமே. மாலை 06.03க்கு தொடங்கிய இரண்டாம் காட்சியின் முதல் நிகழ்வு யாழினி ஜோதிலிங்கத்தின் ‘நீலம்’ என்பதாக இருந்தது. பிரதியின் சொல்லடர்த்தியும்,காட்சிப் படிமங்களும் காரணமாய்,முதல் அளிக்கையாக அது நிகழ்வில் அமர்த்தப்பட்ட ஒழுங்குக்காய் அமைப்பாளர்களுக்கான பார்வையாளனின் பாராட்டைக் கோரியிருந்தது. ஒரு களைப்புற்ற மனம் கனதியான பிரதியொன்றைத் தொடரும் சிரமம் இதனால் தவிர்க்கப்பட்டது. ஒரு இசை நாடகத்தின் பரிமாணத்தின் பல கூறுகளை இது தன்னகத்தே அடக்கியிருந்தது என்பது நிஜம். தீவிர அளிக்கையென்பது அதன் அசைவுகளால் மட்டுமல்ல,ஒலியும்,ஒளியுமாகிய தொழில்நுட்ப உத்திகளின் உதவியுடன்,காட்சிப்படுத்தலின் இடையீடுறா நீட்சியின் அமைவையும் கொண்டதாய் நவீன அரங்க அளிக்கையின் அனுபவம் தமிழ்ச் சூழலில் முக்கியத்துவமும்,முதிர்ச்சியும் பெற்றுவருவதன் அடையாளமாய் இருந்தது ‘நீலம்’.
பூநகரான் என்று கனடியத்தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட பொன்னம்பலம் குகதாசன் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினைச்சற்று முன்னர்தான் முகநூலின் மூலம் அறிந்துகொண்டேன். ‘பூநகரான்’ குகதாசனின் மறைவு பற்றிய…